மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 20.06.2018 புதன் கிழமை ஆனி மாதம்(06)பிரதி மாததோறும் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் 9842733344 94425 59844 98428-58236 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 97880 33344

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

Tuesday, September 30, 2014

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

 குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

 

வசம்போர் அரைப்பங்கு  வல்லாரை பத்து
வசமுடற்காம்  பேரறிவின் மேற்று . -------குறள்
விளக்கம் :
வசம்புத்தூள் அரைப்பங்கும் வல்லாரைத்தூள்  பத்துப் பங்கும் சேர்த்து  ஒன்றாக்கி  அதை 2கிராம்  அளவு  காலையில்  40 நாள் உண்ண  உடலின்  நச்சு தன்மை நீங்கி  மூளைக்கு   பலம்  உண்டாகும் .இதுவே  நினைவாற்றல்  அதிகரிக்க ஏற்ற  மருந்து .

Sunday, September 28, 2014

உடல் நலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பெற இயலாமை மருந்து


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

இன்றைய  காலக்கட்டத்தில்  ஆண்மக்கள்  உணவு ,உறங்குதல், பழக்கவழக்கம் இவற்றால்  உடல்  நலம் பாதிக்கப்படுவதால்  குழந்தை  பெற  இயலாமை மருந்து

இவற்றை தவிர்க்க  குறள்  காட்டும்  வழியில்  நடந்தால்  வாழ்வில்  வளம்  பெற்று நன் மக்களையும் பெறலாம் .மிக எளிமையானது .

கசகசா  வால்மிளகு  கற்கண்டு  பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும்  தாது    .............குறள்


விளக்கம் :
கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை  பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில்  பாகு செய்து  காலை, இரவு  அருந்திவர
உடலுக்கும்  மனத்திற்கும்  நன்மை தரும்
தாது  நலம்  பெரும்
( 16 நாள்  நெல்லிக்காய்  அளவு )

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிகோவில் அன்னதானம்

  ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி


விஸ்வாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 29.09.2014 திங்கட் கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98420 78733Saturday, September 27, 2014

விவாகரத்து ஆன கணவன், மனைவியைக் கூடஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்

 

 

 பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்தர் ஒருத்தருக்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.


பிரிந்திருந்தவர்களை காஞ்சி காமாட்சி அம்மனிடம்
போய்விட்டு வாருங்கள்

விவாகரத்து ஆன கணவன்,
மனைவியைக் கூடகாமாட்சி அம்மன் கோயிலிற்குப் போய் வாருங்கள்
விவாகரத்து வாங்கிவிட்ட பிறகு எப்படி ஒன்றாகப்போவது என்று கேட்டார்கள்.ஆண்டவனுக்கு ஒரு வேண்டுதல்என்று சொல்லிவிட்டுப் போய்
வணங்கிவிட்டு வாருங்கள் சில சாதகமான நிகழ்வுகள் நடக்கும்.
வணங்கிவிட்டு வெளியே வந்தபிறகு,நாம் ஏன்சேர்ந்து வாழக்கூடாது என்று கணவன் கேட்க, நானும் அதைத்தான் நினைத்தேன் என்று மனைவி சொல்ல, அம்பாள் ஏதோ சொன்ன மாதிரி இருந்தது.நமக்குள்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்இருக்கிறதே என்று மனைவி சொல்ல,இல்லை அதையெல்லாம் நான் மறந்துவிட்டேன் கணவன் சொல்லியிருக்கிறேன்.இதுபோன்றெல்லாம்
பார்க்கிறோம். குடும்பம்அமைதியாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அந்த குடும்பஅமைதிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் மாதிரி ஒரு சாத்வீகத்தையும்,சந்தோஷத்தையும் கொடுக்கக்கூடியஒரு அம்மனே கிடையாது.அதற்கடுத்து தனதான்ய சமர்த்து.

ஏனென்றால் ஸ்ரீசக்கரம் பிரதோஷ்டம் செய்திருக்கிறார்கள்.
ஆதிசங்கரர்தான் செய்து வைத்தார்.ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம்.
அதனால் மிகவும் விசேஷமானது. வாராக் கடன்கள் வர ஆரம்பிக்கும். இந்த அம்மனுடைய கண்களில் தீட்சாயனம், தீர்க்கம்பார்க்கலாம். அவர்
உட்கார்ந்திருக்கும் வடிவமே பத்மாசன வடிவம்.ஆசனங்களிலேயே முக்கியமான ஆசனம் பத்மாசனம். அந்த பத்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதால் தான் கேட்டது கிடைக்கும்.எது நியாயமானதே அதை உடனே கொடுக்கக்
கூடிய அம்பாள்.அதற்கடுத்தது,அம்பாளுக்கு வலப்பக்கமாகஇன்னொரு அம்பாள் தவக்கோலத்தில் இருக்கிறார்கள். நின்ற நிலையில், ஒன்றைக்காலில் ஒரு அம்மா தவம் செய்கிறார்கள்.அதனால்தான் அந்த
அம்பாளுக்கு எல்லா சக்தியும் உண்டு என்று சொன்னது.மற்றொரு பக்கம் இடப்பக்கத்தில் பார்த்தீர்களென்றால் அரூபமாக லட்சுமியும் இருக்கிறார்கள்.
பக்கத்தில் அன்னபூரணி, அதற்கும் மேலே சரஸ்வதி இருக்கிறார்.
இதுபோல பல சக்தி பீடங்கள் காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிறது.
சிவாலயங்களில் பார்த்தீர்களானால்,தில்லை நடராஜர் கோயிலிற்குப்
போனால்எல்லா சிவாலயங்களுக்கும் போன நன்மை உங்களுக்கு கிடைக்கும்.அதேபோல,
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிற்குக் போனால்அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் உங்களுக்குக் கிடைக்கும். அந்தஅளவிற்கு சிறப்பு வாய்ந்தஒரு அம்மன்.காமாட்சி அம்மனுக்கு விருத்தம் இருக்கிறது. அதில்
உருகி உருகி பாடியிருக்கிறார்கள்.
அந்த விருத்தத்தில்ஒரு பாடலையாவது பாடி வழிபட்டால் அது இன்னமும் விசேஷமாக இருக்கும். இந்தஅம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தாலும் விசேஷம். சகல நலன்களும்உண்டாகும்.

அரிவாற்றலுடன் அழகாய் குழந்தை பெற :-

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


அரிவாற்றலுடன்   அழகாய் குழந்தை  பெற :-

மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின்
மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள்

விளக்கம் :
கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .

அழகாய் குழந்தை  பெற :-

கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன்
செம்மை நிறமாய்  பிறக்கும் ,

செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .


Friday, September 26, 2014

ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு அன்னதானம்

 ஸ்ரீ காரைக்கால்அம்மையார்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி* *காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகாரைக்கால்அம்மையார்க்கு நாளை 27.09.2014 சனி கிழமை சுவாதி நட்சத்திர தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி  வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762

நவராத்திரி

நவராத்திரி

சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.

விஜய தசமி

 - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.
பெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா.
பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.
நவராத்திரி சமயத்தில் வீட்டில் "கொலு" என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும்.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.
நவராத்திரி வழிபாட்டால்,

பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.

கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
நவராத்திரிகள் கொண்டாடப்படும் காலங்கள் :
சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.
புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.
தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நவகன்னிகா வழிபாடு
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
அதன்படி,
  1. முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
  2. இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
  3. மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
  4. நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி
  5. ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
  6. ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
  7. ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
  8. எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா
  9. ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.
முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.

துர்கை

 இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].
நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.
சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.
சரஸ்வதி பூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.
சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூசிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

விஜய தசமி

ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி
ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.

இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.

சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.
ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.
நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
புராணங்களில் நவராத்திரி :
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.
பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.
நவராத்திரி புராணம் :
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?
வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.
அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.
மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.
எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.
மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.
தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.
அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.
இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.
மற்றொரு கதை:
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.
நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.
நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்
நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
ஒன்பது படிகள் :
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம்

மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து :


கூட்டுங்கா மாலைக்கு கொழுந்திலைப் பூவரசு
நாட்டுமிள கோரேழு நாள் .---------------------------குறள்

விளக்கம் :
பூவரசுக் கொழுந்தும் மிளகும் சேர்த்தரைத்து
நெல்லிக்காய் அளவு ஏழு நாள் காலையில் தொடர்ந்து அருந்தினால்
கமலை நோய் தீரும் .


இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறு
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமி தீர்த்தம்

 : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம் : 

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம் : 

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம் : 

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம் :

 இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனவலிமை , தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம் : 

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம் : 

சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம் :

 இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம் : 

இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் :

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம் : 

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம் : 

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம் :

இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம் : 

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம் :

 இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம் :

 இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம் : 

இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.
கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார்.

 நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.
  ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.
வலிய தலையிட்டு மானம கெடுக்காதே.
  தானம் கொடுப்போரைத் தடுக்காதே.
  மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.
  பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.
  குருவை வணங்கக் கூசி நிற்காதே.
  கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.
  தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.
  தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.


Thursday, September 25, 2014

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


ஸ்ரீ மாணிக்கவாசகர்நால்வர் 

மாணிக்கவாசகரின் -- ஆவுடையார் கோவில் 

மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார் கோவிலுக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. ஆதி கைலாயநாதர் ஆலயம் .. இங்கு தான் மாணிக்க வாசகர்க்கு முதல் உபதேசம் கிடைத்த புண்ணிய பூமியாகும் . ..இறைவன் ஆதி கைலாயநாதர் ..அம்பாள் சிவகாமியம்மை ...மாணிக்க வாசகர்க்கும் முற்பட்ட கோவிலாகும் பராசரர் ..புலத்தியர் ஆகிய சித்தர்கள் வழிபட்டு முக்தி அடைந்த கோவிலாகும் ..வடக்கூர் -எனும் ஊரின் பெயரே மாணிக்க வாசகர்க்கு பின்னே ஆவுடையார் கோவில் ஆனது ..


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் எனும் ஊரில் ஆத்மநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள லிங்கத் திருமேனியில், ஆவுடை மட்டுமே உள்ளதால் ஆவுடையார் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். 

  இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. காவல் தெய்வம் கூட அருவமாக உள்ளது .. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.ஆவுடையார்கோயிலுக்கு இன்னொரு பெயர் திருப்பெருந்துறை ஆகும். மாணிக்கவாசகரால் அப்பெயரால் அழைக்கப்பட்ட திருத்தலம் இதுவேயாகும். இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.

  உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன ..அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன... நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.. இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.

  ஆவுடையார் கோவில் என்னும் திருப் பெருந்துறை புதுக்கோட்டையிலிருந்து  தென்கிழக்கில் 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்திற்கு பஸ் வசதிகள் பல ஊர்களிலிருந்தும் நிறையவே உள்ளன.


புலத்தியர் முனிவர் முத்தி பெற்ற -- வடக்கூர் (ஆவுடையார் கோவில்-திருபெருந்துறை ) ஆதி கைலாயநாதர் ஆலயம்:

  அகத்திய முனிவரின் முதன்மை சீடர்களில் ஒருவர் புலத்திய முனிவர் ..இவர் பிரம்ம தேவரின் மைந்தராவார்..ஆவிர்ப்பூவை எனும் மங்கையை மணந்து விசிரவசு எனும் மகனை பெற்றார் ..விசுரவிசுவின் புதல்வர்தான் ராமபிரானால் வதைக்கப்பட்ட இராவணன்...புலத்தியர் இராவணனின் பாட்டனார் ஆவார் ..
  போகர் முனிவர் புலத்தியரை அகத்தியர்க்கு உகந்த சீடர் என்றும் கமலமுனி சித்தரின் பேரன் என்றும் ..ஆவணி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்றும் பிறக்கும் போதே பக்தி பழமாக இருந்தார் என்றும் பழுத்த சிவராசயோகி என்றும் குறிப்பிடுகிறார். (.போகர் 7000-5900 )

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார் கோவிலில் ஸ்ரீமாணிக்கவாசகர்க்கு பிரதி மாதம் மகம்  நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமாணிக்கவாசகர்,திருவருள் ஆசிர்வாதம்  பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு .மு.நாகராஜன் cell :9443007479மயக்கம் ,பீத்தம் தளர்ச்சி நீங்க வெங்காயத்தின் பயன்கள்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மயக்கம் ,பீத்தம் தளர்ச்சி நீங்க வெங்காயத்தின் பயன்கள்


நங்காயம் நன்மையுற நாளும் உணவினிலே ,
வெங்காயம் சேர்த்தல் விரும்பு ------------------குறள்விளக்கம்

வெங்காயம் உண்பதினால் பித்த மிகுதியால் உண்டாகும் மயக்கம் ,தளர்ச்சி உண்டாவதில்லை .

மூல நோய் உள்ளவர்கள் வெங்காயத்தை நாள் தவறாமல் காலையில் உண்டு வர நன்று நோய் தீரும்.

வெங்காயத்தை சாறு பிழிந்து அதி காலையில் அருந்தினால் காக்கை வலிப்பு நோய் குணமாகும் .

வெங்காயத்தை தனியாக வேகவைத்து உணவுக்குமுன் சாப்பிட்டு வந்தால்
நல்ல தூக்கம் வரும்


Monday, September 22, 2014

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் மஹாளய அமாவாசை யாகம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மஹாளய அமாவாசை யாகம் நாளை 23.09.2014 செவ்வாய் கிழமை

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் செவ்வாய் கிழமை23-09-2014அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.

அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்

இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்

யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து

புனித சேஷ்திரமகிமை

இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த மஹாளயஅமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
 


தோலில் வெண் புள்ளி மறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

தோலில் வெண் புள்ளி மறைய


வெட்டிய எட்டிவித்து வேம்புவிதைச் சாற்றினிலே
பட்டிடவுண் வெண்புள்ளி நோய்க்கு .......குறள் 
விளக்கம் :
மூக்கை வெட்டிய எட்டிக் கொட்டையைச் சுத்தி செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து கடலையளவு மாத்திரை ஆக்கி உண்டுவர தோலில் உண்டான வெண்புள்ளி தீரும்

Sunday, September 21, 2014

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் மகம் நட்சத்திர அபிஷகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள

ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு நாளை 22.09.2014திங்கள் கிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு .மு.நாகராஜன் cell :9443007479


சகல தோஷம் நீக்கும் பிரதோஷ வழிபாடு

சகல தோஷம் நீக்கும்

பிரதோஷ வழிபாடு

 

21/09/2014  ஞாயிற்று கிழமை பிரதோஷம்


மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.


 பிரதோஷ விரத மகிமை

தோன்றிய வரலாறு- வீதி வலம் வரும் முறை.சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று.

பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷம் பிறந்த கதை!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே,

சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்


மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - பல வளமும் உண்டாகும்

நெய் - முக்தி பேறு கிடைக்கும்

சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்

ஞாயிறு:-மலர்-செந்தாமரை

இலை-வில்வம்

நைவேத்தியம்-பாயாசம்

திங்கள்:- மலர்-வெள்ளை நிற மலர்கள்

இலை-அரளி

நைவேத்தியம்- வெண்பொங்கல்

செவ்வாய்:- மலர்-சிவப்பு நிற மலர்கள்

இலை-விளா இலை

நைவேத்தியம்-எள் அன்னம்

புதன்:- மலர்-தாமரை

இலை-மாதுளை

நைவேத்தியம்- சர்க்கரை பொங்கல்

வியாழன்:- மலர்-குவளை

இலை-நாயுருவி

நைவேத்தியம்-தயிர்சாதம்

வெள்ளி:- மலர்-வெண் தாமரை

இலை-நாவல் இலை

நைவேத்தியம்-சுத்த அன்னம்

சனி:- மலர்-நிலோற்பவம்

இலை-விஷணுகிரந்தி

நைவேத்தியம்-உளுந்து அன்னம்


பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

Saturday, September 20, 2014

புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்


புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்
பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (பாலாஜி) புரட்டாசி மாதத்தில் பூமியில் தோன்றியதாக கூறப்படுகின்றது. புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கு மா விளக்கிடுவது மிகவும் உத்தமமானது.இப்படிப்பட்ட மகத்துவமான புரட்டாசி மாதத்தில் சனீஸ்வரனையும் , நாராயணமூர்த்தியையும் வழிபட எல்லா நன்மைகளும் வந்தடையும்.


கிரகங்களில் ஈஸ்வரன் பட்டதை சிவபெருமானிடமிருந்து பெற்றவர் சனீஸ்வர பகவான். முக்காலமும் அறிந்து கொள்ளும் ஞானத்தைத் தரும் வல்லமை படைத்தவர் சனீஸ்வரன் ஆவார்.சனீஸ்வர பகவானை புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் வணங்குவது மிகவும் உகந்தது.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருக்க, துன்பங்கள் தீரும், வறுமை நீங்கி தொழில் சிறக்கும்.ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அட்டமத்துச்சனியாக இருந்தாலும், ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவானை விரதமிருந்து எள்ளெண்ணையில் தீபமேற்றி எள்தானம் செய்து, கருநீலப்பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் குறையும்.

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்


விளக்கம் :
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசோக

மரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்
அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும் .


Friday, September 19, 2014

பூவனூர் அகஸ்தியக்கு அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்

"அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி"மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள
ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ருஅகஸ்தியக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் நாளை 20.09.2014 சனிகிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

.மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன் : 94436 55399]


மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி


 எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,
எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்
ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்
மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை
நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா
நலன்களை அருள்வாள் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மானா
மதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்
24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்
தர்மமே ஆகும் .

இக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்