மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 20.06.2018 புதன் கிழமை ஆனி மாதம்(06)பிரதி மாததோறும் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் 9842733344 94425 59844 98428-58236 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 97880 33344

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

Wednesday, December 31, 2014

யாருமற்ற பேருக்கு ஆதாரமாக வரும் முருகன்

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

யாருமற்ற பேருக்கு  ஆதாரமாக  வரும்  முருகன்


ஆதாரமிலேன்  அருளைப்  பெறவே
நீதான்  ஒரு  சற்று நினைந்திலையே
வேதாகம   ஞான  வினோத மனா
தீதா  சுரலோக  சிகாமணியே .......கந்தரனுபூதி

உலகத்தின்  அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன்  முருகன்  ---அருணகிரிநாதர்Tuesday, December 30, 2014

கஷ்ட நிவர்த்தி மாமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

 கஷ்ட நிவர்த்தி  மாமருந்து


மஹா பாரதத்தில்  வன பர்வத்தில்  மார்கண்டேய மகரிஷியால்
தர்மபுத்திரர்க்கு உபதேசிக்கபட்ட கார்த்திகேய ப்ரபாவம்  எனும்  ஷண்முக  மந்திரம் ---

அன்புடன்  உலக மக்கள் அனைவரும்  படித்துப் பயன் பெற
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா  கோயில்  சுவாமிஜி அவர்கள் ஆசியுடன்

 பாராயணம் செய்து பயன் பெருக  வளம் பெருக .

ஓம் குரு குஹாய  நமஹா
ஓம் ஆக்நேயா நமஹா
ஓம் ஸ்கந்தாய  நமஹா
ஓம் தீப்த  கீர்த்தையே  நமஹா
ஓம் அனாமையாய  நமஹா
ஓம் மயூர கேதவே நமஹா
ஓம் தர்மாத்மனே  நமஹா
ஓம் பூதேசாய  நமஹா
ஓம் மகிஷா ர்த்தனாய நமஹா
ஓம் காமஜிதே நமஹா
ஓம் காமதாய  நமஹா
ஓம் காந்தாய நமஹா
ஓம் சத்யவாஹே நமஹா
ஓம் புவநேஸ்வராய நமஹா
ஓம் சிசுவே நமஹா
ஓம் சீக்ராய  நமஹா
ஓம் சசயே நமஹா
ஓம் சண்டாயயே ------------------------------18
ஓம் தீப்தவர்நாயே  நமஹா
ஓம் அமோகாயே  நமஹா
ஓம் அனகாயே  நமஹா
ஓம் ரவுத்ராயே நமஹா
ஓம்  ப்ரியாய நமஹா
ஓம்  சன்றானநாய  நமஹா
ஓம் தீப்தசக்தையே  நமஹா
ஓம் பிரசாந்தாத்மனே    நமஹா
ஓம் பத்ரக்ருதே நமஹா
ஓம் கூடமோ ஹணாய நமஹா
ஓம் சஷ்டி ப் ரியாய நமஹா
ஓம்   தர்மாத்மனே நமஹா
ஓம்  பவித்ராய  நமஹா
ஓம் மாத்ருவத்சலாய நமஹா
ஓம் கன்யா பர்தாய நமஹா
ஓம் விபக்தாய நமஹா
ஓம் ச்வா ஹெய்யாய நமஹா
ஓம் ரேவதி சுதாய நமஹா --------------------36
ஓம்  பிரபவே  நமஹா
ஓம்  நேதாய நமஹா
ஓம் விசாகாய நமஹா
ஓம் நைக மேயாய நமஹா
ஓம் சுச்சராய  நமஹா
ஓம் சீவ்ரதாய நமஹா
ஓம் லலிதாய நமஹா
ஓம்  பால க் ரீட னக  ப்ரியாய நமஹா
ஓம்  கசாரீ ணே    நமஹா
ஓம் ப் ரம சாரிணே  நமஹா
ஓம் சூராய  நமஹா
ஓம் சரவநோத்பவாய நமஹா
ஓம் விஷ்வாமித்திர ப்ரியாய   நமஹா
ஓம் தேவசேனா ப்ரியாய நமஹா
ஓம் வாசுதேவ  ப்ரியாய  நமஹா
ஓம் பிரியாய    நமஹா
ஓம் பிரியக்ருதே  நமஹா
ஓம் கார்த்திகேயாய நமஹா ---------------54

தினமும்  காலையில் இரு முறை படித்து வர  நன்று .
 கார்த்திகேய ப்ரபாவம் முற்றியது 


எந் தாயும்  எனக்கருள்  தந்தையும்  நீ
சிந்தாகுல  மானவை  தீர்த்  தெனையாள்
கந்தா கதிர்வேலவனே  உமையாள்
மைந்தா குமார மறை நாயகனே .---கந்தரனுபூதி
Monday, December 29, 2014

அத்திரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஅபிஷகம்,அலங்காரம்,ஆராதனை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
நெல்லை மாவட்டம், ஆ
ழ்வார்குறுச்சி   கடனா நதி அனை அருகில்   உள்ள அத்திரி மலையில் 
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமா
ர் ஸ்ரீஅத்திரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய  மகரிஷிக்கு 08-01-2015 வியாழ கிழமை  ஆயில்யம்   நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்திரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய  மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் காலை 8.30மணிக்குகடனா நதி அனையில் இருக்க வேண்டும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+ 91 9994990167

918122725779 
919171122091

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 31-12-2014 புதன்  கிழமை  பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 909510237


Sunday, December 28, 2014

எரிச்சல்,கபம்,இருமல்,சலதோசம்,மூக்கடைப்பு, நீர்க்கோர்வை நோய்க்குமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

எரிச்சல்,கபம்,இருமல்,சலதோசம்,மூக்கடைப்பு, நீர்க்கோர்வை நோய்க்குமருந்து

 

செவ்வியம் பேரரத்தை சித்திரமூ லஞ்சுக்கோ
டோவ்வுஜண்டு பாரங்கி யோரைந்தும் வெவ்விணையச்
சண்ணு பஞ்சமூலமெனத் தாரணியெ ல்லம அறிய

வண்ணம்யிலே வழுத்து
-------தேரையர் வாக்கு.

விளக்கம் :

திப்பிலி வேர்,பேரத்தை வேர்
கொடிவேலி வேர் சுக்கு வேர்
கண்டுபறங்கி வேர் சம அளவு எடுத்து தேனில் அருந்த மூட்டு வலி,எரிவாதம்,குதிவாதம்,பக்கவாதம் இவை நீங்கும்.
இவற்றை வெண்ணீரில் அருந்தி வர கால் எரிச்சல்,கபம்,இருமல்,சலதோசம்,மூக்கடைப்பு, நீர்க்கோர்வை நீங்கும்.


Saturday, December 27, 2014

கருவுற (மகப்பேரியல் )

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


கருவுற (மகப்பேரியல்

தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- ------குறள் 


விளக்கம் :

சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்


அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை


ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ,
மானாமதுரை ஸ்ரீ மஹாபஞ்சமுக ப்ரதியங்கிரா கோவிலில் இருந்து சித்தர்கள் வழிபட்ட,நிர்மாணித்த ஆலயங்களில் ஆராதனை,வழிபாடு ,அன்னதானம் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
உங்கள் ஊரில் சித்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்,சித்தர் கோயில்கள் ,இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும் .அங்கும் வழிபட பக்தர்கள் வருவார்கள் .அன்னதானம் நடக்கும் .
முதற்கட்டமாக அகத்தியர் நிர்மானித்த கோயில்கள் ,அகத்தியர் இருக்கும் கோயில்கள்
அகத்தியர் வழி பட்ட கோயில்கள் தெரியப்படுத்தவும் .
ஊர் பெயர் :
கோயில் பெயர்
இறைவன் பெயர்
இறைவி பெயர்
கோயிலுக்கு வழி :
உங்களது தொலை பேசி எண்
கோயில் தொலைபேசி /குருக்கள் எண்
இந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தொடர்புக்கு :
சுந்தர்: 98659 93238,98428 58236
அண்ணாமலை -94425 59844
Email: prathyangiradevi33@gmail.com
annamalaitpr@gmail.com
srisandi2013@gmail.com
http://siragirivelan.blogspot.in

Friday, December 26, 2014

முகப்பரு நீங்க Get rid of Pimples

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

முகப்பரு நீங்க Get rid of Pimples


துத்தி இலைபாலில் தோய்த்தரைத்துப் பூசுவதால் ,

குத்தும் பருக்களிலை கூறு . ....................குறள்

விளக்கம்

துத்தி இலையை பாலில் அரைத்து பற்றாக இட்டு காய விட்டு பின்பு கழுவிட்டால் பருக்கள் மறையும் ,காலை மாலை இருமுறை தொடர்ந்து செய்யவும் நல்ல பலன் கிடைக்கும் .Thursday, December 25, 2014

உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

உடனடியாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறையநூல்கோல் சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து மறுமுறை சாப்பிடவும் .


Tuesday, December 23, 2014

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
24-12-2014 புதன்  கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844

Thursday, December 18, 2014

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

  அமாவாசை யாகம்  21.12.2014ஞாயிற்று கிழமை
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
ஞாயிற்று கிழமை 21-12-2014அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் விஜயாபதி அமைந்து உள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 20.12.2014 அன்று சனி கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீவிஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98420 78733
91711 22091சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய்  மாற்று .     ..............குறள்


விளக்கம் :

அதிமதுரம் ,நன்னாரி  வேர்,சந்தனம் ,மிளகும்  , இவற்றின்  தூளை  கொதிக்க

வைத்து அருந்திவர  நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும்  அருந்தலாம் , .


Wednesday, December 17, 2014

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட sugar patients wounds relief oil

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு  படும்  காயங்கள்  விரைவில் ஆறிட

sugar patients wounds relief oil


100 மில்லி தேங்காய் எண்ணெயில்  ஒரு கைபிடி அளவு  சிகப்பு அரளிப்  பூவை போட்டு  ஒரு கண்ணாடி  பாட்டிலில்  3-5 நாள்  வெயிலில் வைக்கவும் 
நன்றாக  சாரு எண்ணெயில்  இறங்கிவிடும்  .பிறகு  ஒரு மெல்லிய  துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது   பாட்டிலில் எண்ணெய்யை  பத்திரமாக  வைத்துக்கொண்டு மேல் பூச்சாக  உபயோகப்படுத்தவும்  .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில்  ஆற்றிடும்  தன்மை வாய்ந்தது 
இது  கடுமையான விஷம்  ,மிகவும்  கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும் 

  

Tuesday, December 16, 2014

ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு அன்னதானம்

 ஸ்ரீ காரைக்கால்அம்மையார்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி* *காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகாரைக்கால்அம்மையார்க்கு 18.12.2014 வியாழ கிழமை சுவாதி நட்சத்திர தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி  வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762


யானைக்கால் நோய் தீர மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 

யானைக்கால்  நோய்  தீர மருந்து 

பப்பாளிச் சாறு படுவெயிலில்  பற்றிடுவார்
எப்பாரும் யானைக்கால்  நோய்க்கு .........................குறள்
 
 
விளக்கம்:
யானைக்கால் நோய் கண்ட காலில்  பப்பாளி பழத்தில்  சாறு எடுத்து 
தடவி வைத்து  காலை  வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன்  மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர  நோய் குணமாகும் .
 

 
 

Saturday, December 13, 2014

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்  

குழந்தைகளுக்கு  நினைவாற்றல் அதிகரிக்க 


வல்லாரைப்  பாகு வழங்கும்  நினைவாற்றல்
நல்லாவின்  பால் பின் அருந்து ...............................குறள்

விளக்கம்


வல்லாரைக் கீரையை  காய வைத்து தூள்  செய்து கொண்டு அதனுடன்
சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,மாசிக்காய் ,வால் மிளகு  இவற்றின் தூளை

50 கிராம் வல்லாரை தூள் மற்ற 4கின் தூள் 20 கிராம்  சேர்த்து  பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து   பாகாக  வைத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு முன் 5 கிராம் எடுத்துகொடுத்து  சாப்பிட வைக்கவும் .பின் பசுவின் பால் அருந்தக் கொடுக்கவும்

நினைவாற்றல் அதிகரிக்கும் ,இதயம் வலுப்பெறும்

அல்லது  இவற்றின் தூள் சேர்த்து வைத்து அதில் 5 கிராம் எடுத்து தேனில் குழைத்து உண்ண கொடுக்கலாம் ,பின் பசும் பால் கொடுக்கவும்

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு நாளை 15.12.2014 திங்கட் கிழமை கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் 
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

மேலும் தகவல்கள்களுக்கு 
திரு .அண்ணாமலை cell :94425 59844

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம்அலங்காரம்,தீபாரதனை

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள 
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 14-12-2014 ஞாயிற்று கிழமை
மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி
அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236


Friday, December 12, 2014

கண் பார்வை வலுப்பெற Eye sight improvement for all age

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

கண் பார்வை  வலுப்பெற  Eye sight  improvement for all ageநீலியொடு  மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள்  கண்பார்வைக் குண்  -------குறள்


விளக்கம்

அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை  இம் மூன்ரையும்
சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில்  அருந்திவர கண் பார்வை தெளிவாகும் .

அனுபானம் : பசும்  பால்,தேன் ,நீர் Thursday, December 11, 2014

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


 ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு 12.12.2014
வெள்ளி  கிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை

அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
 மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479


திரிகடுகு சூரணம்

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்  
     

திரிகடுகு சூரணம் 


சுக்கு ,மிளகு ,திப்பிலி இம் மூன்றையும் சம அளவு எடுத்து வெய்யிலில் காயவைத்து பொடியாக்கி சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும் . 

சூரணம் பயன் படுத்தும் முறை : 

அளவு : சிறு நெல்லிக்காய் அளவு
நோயாளியின் தன்மை ,நோயின் தன்மை இவைகண்டு தண்ணீரிலோ ,
தேன்னில் ,பாலில் அருந்த வேண்டும் .
தேன்னில் காலையும் மாலையும் உண்டால் ஜன்னி நோய்கள் ,குளிரினால் உண்டாகும் நோய்கள் தீரும்
நீரில் உண்டால் மாந்தம் நீங்கும் .
பனைவெல்லத்தில் உண்டால் வயிற்று நோய்கள் நீங்கும் .
தினமும் ஒருவன் உண்டு வந்தால் வைத்தியனை தேடிச் செல்லவேண்டியது இல்லை சகல நோய்களும் தீரும் .
இது அகத்தியர் வாக்கு அகத்தியர் பரிபூரண நூலில் கூறியிருக்கிறார் Wednesday, December 10, 2014

வெங்காயத்தின் பயன்கள்

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வெங்காயத்தின் பயன்கள்

நங்காயம் நன்மையுற  நாளும் உணவினிலே ,
வெங்காயம்  சேர்த்தல்  விரும்பு ------------------குறள் 
வெங்காயம் உண்பதினால்  பித்த மிகுதியால்  உண்டாகும்  மயக்கம் ,தளர்ச்சி  உண்டாவதில்லை .
மூல நோய்  உள்ளவர்கள்  வெங்காயத்தை நாள் தவறாமல்  காலையில்  உண்டு வர நன்று நோய் தீரும்.
வெங்காயத்தை  சாறு பிழிந்து  அதி  காலையில்  அருந்தினால்  காக்கை  வலிப்பு நோய்  குணமாகும் .
வெங்காயத்தை  தனியாக  வேகவைத்து  உணவுக்குமுன்  சாப்பிட்டு  வந்தால் 
நல்ல தூக்கம்  வரும் 
நெய்யில் வெங்காயத்தை  பொரித்துன்ன உடல் வன்மையும் ,திண்மையும்  பெரும் 
குரல் வலிமை,இனிமை  பெற ,நெஞ்சில்  கபம்  நீங்க  வெங்காயம்  சிறந்த  மருந்து ..
தலயில் ஏற்படும் பூச்சி வெட்டு  நீங்கி  முடி முளைக்க  வெங்காயத்தை வெட்டி  பூச்சி வெட்டு  உள்ள இடத்தில  தேய்த்து வர  முடி  முளைக்கும் .
 

 

Tuesday, December 9, 2014

தோலில் வெண் புள்ளி மறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

தோலில் வெண் புள்ளி  மறைய 

வெட்டிய  எட்டிவித்து  வேம்புவிதைச்  சாற்றினிலே  
பட்டிடவுண்  வெண்புள்ளி நோய்க்கு .......குறள்
 விளக்கம்
மூக்கை  வெட்டிய  எட்டிக்  கொட்டையைச்  சுத்தி  செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து  கடலையளவு  மாத்திரை ஆக்கி  உண்டுவர  தோலில் உண்டான  வெண்புள்ளி  தீரும் .