மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, October 31, 2014

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க 



நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய் மாற்று . ..............குறள்


விளக்கம் :


அதிமதுரம் ,நன்னாரி வேர்,சந்தனம் ,மிளகும் , இவற்றின் தூளை கொதிக்க

வைத்து அருந்திவர நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும் அருந்தலாம் , .


Thursday, October 30, 2014

மஞ்சள் காமாலை மருந்து


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

 மஞ்சள் காமாலை மருந்து



சங்கன்  அதிமதுரம் கீழ்நெல்லி  கட்டுதயிர் ,
பொங்குங்கா மாலை மருந்து ................குறள்

விளக்கம் :

சங்கன்  வேர் ,அதிமதுரம் ,கிழா நெல்லி  இம்மூன்றையும்  மை போல் அரைத்து புளித்த தயிரில் கலந்து 50 மில்லி கிராம் அளவு காலை மட்டும் உணவிற்கு முன் உண்டு வர  காமாலை நோய் தீரும் .மூன்று நாள் மட்டும் மருந்து சாப்பிடவும் ,பத்தியம் உணவில் கடை பிடிக்கவும் .

தவிர்க்க வேண்டியது

:உப்பு,எண்ணெய் ,புளி ,மசாலைகள் ,காரம் ,கொழுப்பு சத்துள்ள உணவுகள் .

Wednesday, October 29, 2014

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
30-10-2014 வியாழக் கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844


யானைக்கால் நோய் தீர மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


யானைக்கால் நோய் தீர மருந்து


பப்பாளிச் சாறு படுவெயிலில் பற்றிடுவார்
எப்பாரும் யானைக்கால் நோய்க்கு .........................குறள்

விளக்கம்:

யானைக்கால் நோய் கண்ட காலில் பப்பாளி பழத்தில் சாறு எடுத்து
தடவி வைத்து காலை வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன் மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர நோய் குணமாகும் .

Friday, October 24, 2014

மானாமதுரை சுவாமிஜி - மாதாஜி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி சார்பாக
அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அன்னதானம்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி


விஸ்வாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 26.10.2014
ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,
அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
9843016651




சென்னிமலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் கந்தசஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது


சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்
கந்தசஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது








சென்னிமலை: சென்னிமலை மலை மீது கோவில் கொண்டுள்ள சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இவ்விழா, இன்று 24.10.2014ம் தேதி துவங்கி, 30.10.2014ம் தேதி வரை நடக்கிறது.

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம், சென்னிமலை மலை கோவிலாகும். 3,000 ஆண்டு பழமை வாய்ந்த திருத்தலம். 18 சித்தர்களுள் ஒருவரான பின்நாக்குச்சித்தர் வாழ்ந்து, முக்தியடைந்த திருத்தலம். முருகப்பெருமானுக்கு உரிய, 16 திருமூர்த்தங்களும், இக்கோவிலில் காணப்படுவது தனிச்சிறப்பு.

இங்கு, இன்று (24ம் தேதி) காலை, 8 மணிக்கு,
கந்த சஷ்டி விழா துவங்குகிறது. அன்று காலை, 8 மணிக்கு, சென்னிமலை கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, முருகன் வள்ளி தெய்வானை சமேதராக, உற்சவமூர்த்தி புறப்பாடு துவங்கி, மலை கோவிலை அடையும். காலை, 9.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி, 10.30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 11 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேம் நடைபெறும். ஒரு மணிக்கு அன்னதான விழா நடக்கிறது.

இந்த அபிஷேகம் மற்றும் அன்னதானம், வரும், 29ம் தேதி வரை நடக்கும். 29ம் தேதி இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு, 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா, சென்னிமலை நான்கு ரத வீதிகளில் நடக்கிறது. இதில், மேற்கு ரத வீதியில், ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருள்வார். தொடர்ந்து, 30ம் தேதி காலை, 11 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்குந்தர் கைக்கோள முதலியார் ஸ்ரீகந்த சஷ்டி விழாக் கமிட்டியார், மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, 24 முதல், 29ம் தேதி வரை, ஐந்து நாட்களும், தினமும் காலை, 9 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவில் காப்பு கட்டி, சிறப்பு விரதம் இருப்பவர்கள், விழா ஏற்பாட்டாளர் விஸ்வநாதனிடம், 99656 22442 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

தாய் சேய் நலம் காக்க :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

தாய் சேய் நலம் காக்க

குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க எளிய வழி முறை .தாய்க்கும் குழந்தைக்கும் நலன் பயக்கும்

சுக்கோ டதிமதுரம் திப்பிலி ஏலத்தூள்
தக்கதிதிப் பைம்புனல்பன் நோய்க்கு .........................குறள்


விளக்கம் :
சுக்கு ,அதிமதுரம் ,திப்பிலி ,ஏலம் இவற்றின் தூளை சம அளவு எடுத்து
கொதிநீரில் இட்டு (இது யைம்புனல் நீர் மருந்தாகும்).
10 கிராம் அளவு -மேற்கண்ட பொடியை நான்கும் சேர்த்தது எடுத்து கொதிநீரில் இட்டு குழந்தைக்குத் தாய் நாளைக்கு 3-5 முறை குடிக்க
குழந்தையின் சளி நீங்கும் '
சளி பிடிக்காமல் இருக்க தாய் இதை அவ்வப்போது அருந்தினால்
சளி குழந்தைக்கு பிடிக்காது .


Thursday, October 23, 2014

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் 





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு நாளை 24.10.2014 வெள்ளி கிழமை சுவாதி நட்சத்திர தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762

மானாமதுரை ஸ்ரீ காளி நவராத்ரி





மானாமதுரை ஸ்ரீ காளி நவராத்ரி


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 
ஸ்ரீ காளி நவராத்ரி நாளை 24.10.2014 முதல் தொடங்குகிறது


தினமும் காலை 7-11 மணிவரை கணபதி ஹோமம் ,மஹான்யாச ஸஹித ஏகாதச ருத்ராபிஷேகம்

தினமும் மாலை 4.00முதல்6.30மணிவரை

பாராயணம் மற்றும் ,தீபாராதனை நடைபெறும்


24.10.2014 வெள்ளிகிழமை தஷிண களி பூஜை

25.10.2014 சனி கிழமை பத்ர களி பூஜை

26.10.2014 ஞாயிறுகிழமை ச்ஸாந காளி பூஜை

27.10.2014 திங்கள் கிழமை கால காளி பூஜை

28.10.2014 செவ்வாய்கிழமை குஹ்ய காளி பூஜை

29.10.2014 புதன்கிழமை காமகலா காளி பூஜை

30.10.2014 வியாழன்கிழமை தந காளி பூஜை

31.10.2014 வெள்ளிகிழமை ஸித்தி காளி பூஜை

01.11.2014 சனிகிழமை சண்டி காளி பூஜை


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மானாமதுரை அமாவாசை யாகம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் இன்று 23.10.2014 வியாழன்கிழமை நடைபெறுவதால் அனைவரும் இந்த அமாவாசை யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.







மேலும் தகவல்கள்களுக்கு :

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

cell :98428 58236

Wednesday, October 22, 2014

மானாமதுரை அமாவாசை யாகம்

மானாமதுரை அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் நாளை 23.10.2014 வியாழன்கிழமை நடைபெறுவதால் அனைவரும் இந்த அமாவாசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236








Monday, October 20, 2014

சென்னிமலை ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் அபிஷகம், ஆராதனை அன்னதானம்

 சென்னிமலை ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் அபிஷகம், ஆராதனை அன்னதானம் 





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு நாளை 21.10.2014 செவ்வாய்கிழமை உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் 
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

மேலும் தகவல்கள்களுக்கு 
திரு .அண்ணாமலை cell :94425 59844

Saturday, October 18, 2014

பூவனூர் ஸ்ரீ அகஸ்தியர் அன்னதானம் புகைபடங்கள்

பூவனூர் ஸ்ரீ அகஸ்தியர் அன்னதானம் புகைபடங்கள்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் இன்று 18.10.2014 சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று நடை பெற்ற அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் புகைபடங்கள்

இளைத்த குழந்தை உடல் நலம் பெற

.அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

இளைத்த குழந்தை உடல் நலம் பெற


இளைத்த குழந்தைக் கியல்கோ துமைமா
கிளர்மல்லி சோம்பு கிராம்பு --------------குறள்



விளக்கம் :-
சில குழந்தைகள் இளைத்திருக்கும் அவர்களுக்கு உடல் நலன் பெற கொடுக்க வேண்டிய இயல்பான நல்லுணவு கோதுமை மாவில் கொத்துமல்லி ,சோம்பு ,கிராம்பு ,இவை சேர்த்து பக்குவமாய் இனிப்பிட்டுஉண்ண கொடுக்கவும் .


Friday, October 17, 2014

பூவனூர் ஸ்ரீ அகஸ்தியர்க்கு அன்னதானம்

"அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி"



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் நாளை 18.10.2014 சனி கிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
.மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன் : 94436 55399
நாரயணசாமி :93443 02923



துலா ஸ்நானம்

துலா ஸ்நானம்


 

 

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். இதனாலேயே இது துலா மாதம் என்றழைப்படுகிறது. துலா என்றால் தராசு என்றும் பொருள் படும் ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இதனாலேயே இது துலா மாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி துலாமாதமான ஐப்பசி பிறக்கிறது ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்று குறிப்பிடுவர்.

நரகாசுரன் அசுரனாக இருந்தாலும், ஒரு உயிரைக் கொன்ற காரணத்தால் கிருஷ்ணருக்கு வீரஹத்தி என்னும் தோஷம் பிடிதுக் கொண்டது எனவும், அதனால் கிருஷ்ணர் கைலாயம் சென்று சிவபெருமானிடம் ஆலோசனைப்படி காவிரியில் நீராடினால் பாவநிவர்த்தி செய்து கொண்டதாகவும் புராணங்களில் உள்ளது.
எனவே, ஐப்பசி மாதம் முழுவதும், காலை சூரியோதய நேரத்தில் இருந்து ஆறுநாழிகை நேரம் (2மணி 24நிமிஷம்) அறுபத்தாறு கோடி புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்வதாக ஐதீகம். அந்த நேரத்தில் காவிரியில் நீராடினால் சகல பாவங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு, எல்லா நன்மைகளும் பெற்று வாழலாம் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.


ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். இதனாலேயே இது துலா மாதம் என்றழைப்படுகிறது. துலா என்றால் தராசு என்றும் பொருள் படும் ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இதனாலேயே இது துலா மாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி துலா மாதமான ஐப்பசி பிறக்கிறது. இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதாக ஐதீஹம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம். இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப-விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. 
ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. மாயூரத்தில் துலா நீராடுதல் ஐப்பசி மாதத்தில் மாயூரம் என்றழைக்கப்படும் மயிலாடுதுறையில் காவிரி நதிக்கரையோரம் உள்ள நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி, தங்களிடம் மக்கள் தொலைத்துச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, ""ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ?'' என்றொரு பேச்சு வழக்கு உள்ளது. இத்திருத் தலத்தில் ஐப்பசி இறுதியில் நடைபெறும் "கடைமுக தீர்த்தவாரி' மிகவும் சிறப்புடையது. கடைமுழுக்கு தீர்த்தவாரி ஐப்பசி மாத அமாவாசை அன்று காவிரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அன்று "காவிரியானவள் கங்கையாக மாறுகிறாள்' என்று காவிரி புராணம் உரைக்கின்றது. அன்று மறைந்த முன்னோர்களுக்கு காவிரி நதிக்கரையில் நீர்க்கடன், தர்ப்பணம், வழிபாடுகள் செய்ய உகந்த நாள் என்பர். ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவேரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு" என்கிறார்கள். மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள். 
முடவன் முழுக்கு ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்திக்கிறான். அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது. 

 ஸ்ரீ ரங்கநாதருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீ ரங்கநாதருக்கு திருமஞ்சனம் ஒவ்வொரு ஆண்டும் துலாம் மாதத்தில் பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் துலாம் மாதம் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுகின்றது. இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்காக கோயில் யானை ஆண்டாள் காவிரியில் இருந்து தங்கக்குடத்தில் புனித நீர் எடுத்து வருவது சிறப்பம்சமாகும்.


ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு 19.10.2014 ஞாயிறுகிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்குஐப்பசி மாதஅபிஷேகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


 ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு ஐப்பசி மாதஅபிஷேகம்



ஐப்பசி மாதம் 3 - ம் நாள் திங்கள்கிழமை (20-10-2014) பூரம் நட்சத்திரம் அன்று
 ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அழகர் கோவில் மலைக்கு மேல் 7கி .மீ   நடைபெறும்.
புறப்படும் நேரம் : அதிகாலை 5.15 மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.

குருவருளுடன் திருவருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.,

Thursday, October 16, 2014

ஆடி மாதம் நடைபெற்ற சத சண்டி யாக பெரு விழா புகைபடங்கள் 2014



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் கடந்த  ஆடி மாதம் நடைபெற்ற சத சண்டி யாக  பெரு விழா புகைபடங்கள்













இங்கு போடபடும்ஆன்மீக பதிவுகள்அனைத்தும் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஷீர்டி சாயிபாபா

ஷீர்டி சாயிபாபா

 

 

இந்திய ஆன்மிகத்தில் ஷீர்டி சாயிபாபா ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர். அவர் ஒரு முஸ்லிம் என்றும் இந்து என்றும் இன்றும் வாத பிரதிவாதங்கள் தொடர்கின்றன. அவரது பிறப்பு பற்றி யாரும் அறிய முடியாததாகவே உள்ளது. சாந்த்பாய் பாட்டீல் என்பவர் வீட்டுத் திருமண கோஷ்டியுடன் அவர் பதினாறு வயது இளைஞனாக ஷீர்டிக்குள் வந்த போது கண்டோபா கோவில் பூசாரியும் பின்னாட்களில் பாபாவின் மிக நெருங்கிய அடியவராகவும் ஆன பகத் மஹல்சாபதியால் ‘ஆவோ சாயி’ என்று வரவேற்கப்பட்டார். ‘சாயியே வருக’ என்பதே அதன் அர்த்தம்.

இங்கிருந்துதான் பாபாவின் அதிகாரப்பூர்வ ஷீர்டி வரலாறு தொடங்குகிறது. தொலைதூரத்தில் இருந்து வந்து, தரிசனம் செய்து ஆசி பெற்றுச் சென்றனர்.பாலகங்காதர திலகரின் உதவியாளர் கிருஷ்ண கபர்டே போன்றவர்கள் குடும்பத்தோடு மாதக் கணக்கில் தங்கியிருந்து பாபாவைத் தரிசனம் செய்ததுண்டு.

 ஆன்மீகத்தில் அதிசயங்கள்,. அற்புதங்கள் என்றும், எங்கும், எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கலியுகத்திலும் கூட. அதிலும் ஷீரடி சாய்பாபா. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் கொஞ்சம் அல்ல. நீரில் விளக்கு எறிய வெய்த்ததில் ஆரம்பித்து புயலை நில் என்று கூறி ஓடும் ஒரு குழந்தையை அதட்டி நிறுத்துவது போல் நிறுத்தியது. 300 கிலோ மீட்டர் தள்ளி நெருப்பில் விழுந்த தனது பக்தன் குழந்தையை ஷீரடியில் கொதித்து கொண்டு இருக்கும் பானையில் கையை விட்டு காப்பாற்றியது. பாம்பு கடித்த தனது பக்தனின் உடலில் உள்ள விஷத்தை இறங்கு, இறங்கு என்று கூறி வார்த்தையாலேயே இறக்கியது. கொட்டாங்குச்சி சாம்பலால் ஆயிரக்கணக்கானவர்களின் பிணிகளை போக்கியது. இன்றும் அவர் அருட்பிரசாதமான ஊதி போக்கி கொண்டு இருக்கிறது.
இவர் புராண காலத்திலோ இல்லை ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்போ வாழ்ந்தவர் அல்ல. சென்ற 1918 வரை பூத உடலோடு வாழ்ந்தவர். இன்றும் சூட்சும ஸொரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஷீரடி சாய் பாபாவின் பெருமைகளை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாள் என்ன. ஓராயிரம் வருடங்கள் கூட போராது. இது போன்ற ஒப்பற்ற ஞானிகளின் பெருமைகளை யாரும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரவர் தனது சொந்த சுயானுபவத்தில் உணர்ந்தால் தான் உண்டு. இந்த மகான் பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்று சேர்ந்து உருவான தத்தாத்ரேயரின் அவதாரம் என்று ஷீரடி சாய் அடியவர்களால் நம்பப்படுகிறது. அதற்க்கு ஏற்றாற்போல் யாருக்கு எந்த கடவுள் பிடிக்குமோ அந்த கடவுளாகவே இவர் காட்சி அளித்து உள்ளார்.
இவர் வெறும் மாயை அல்ல. அனைத்திற்கும் மேற்பட்ட மஹா மாயை.


பாபா கொடுத்த முன்குறிப்பு1916-ம் ஆண்டு பாபா தம் ஆயுளை முடித்துக் கொள்வது தொடர்பான ஒரு குறிப்பையும் கொடுத்திருந்தார். ஆனால், அதை அப்போது யாரும் புரிந்து கொள்ளவில்லை.அன்று விஜயதசமி தினம். ஷீர்டியில் சீமொல்லங்கன் எனப்படும் எல்லை தாண்டும் நிகழ்ச்சி அன்றைய தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த ஆண்டும் அதுபோல நடந்தது. அதன் இறுதிக்கட்டமாக கிராம எல்லையிலிருந்து கிராமத்திற்குள் செல்வார்கள். அப்படி நிகழ்ச்சி முடிந்து கிராமத்திற்குள் திரும்பும்போது, பாபா திடீரென கோபாவேசம் அடைந்தார்.
அவருக்குத் திடீரென வந்த கோபத்தில் தாம் அணிந்திருந்த கஃப்னி, லங்கோடு மற்றும் தலையில் கட்டியிருந்த துணியையும் கழற்றி வீசி எறிந்தார். அப்படி வீசி எறிந்ததோடு நிற்காமல் அவற்றைக் கிழத்துத் துண்டு துண்டாக்கி அப்படியே அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பிலும் போட்டார். அவர் நெருப்பில் துணிகளைப் போட்டதும் அது பிரகாசமாய்க் கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்போது பாபாவின் இரண்டு கண்களும் அதுவரையில் இல்லாத வகையில் சிவந்து காணப்பட்டன. பாபா அங்கிருந்தவர்களிடம், “ஓ... ஜனங்களே! இப்போது என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இந்துவா, முஸ்லிமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.
பாபாவின் இந்த ஆவேசத்தைப் பார்த்த ஜனங்கள் பெரிதும் பயந்து போய் விட்டனர். அவர் அருகே செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. பாபாவின் கோபத்தைக் கட்டுப்படுத்தி அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று கவலைப்பட்டனர்.
இந்நிலையில் பாபாவின் அடியவரான பாகோஜி ஷிண்டே மட்டும் கொஞ்சம் தைரியத்துடன் பாபா அருகே சென்றார். இந்த அடியவருக்குத் தொழுநோய் இருந்தது. அதை பாபா தம் கரங்களால் சுத்தம் செய்து குணமாக்கியதால், அவர் பாபாவே கதி என்று அவர் பாதங்களிலேயே விழுந்து கிடந்தார். அதனால் அவரால் பாபாவை எளிதாக அணுக முடிந்தது.
“என்ன பாபா இதெல்லாம். இன்று சீமொல்லங்கன் நாள். நீங்கள் இப்படி இருக்கலாமா?’’ என்று பாகோஜி ஷிண்டே, பாபாவிடம் தைரியமாய்க் கேட்க பாபா மேலும் கோபம் அடைந் தவராய்த் தமது கைகளில் எப்போதும் வைத்திருக்கும் சட்காவை எடுத்துத் தரையில் வேக வேகமாய் அடித்தபடியே ‘‘இன்று எனக்குச் சீமொல்லங்கன்” என்றார். அதாவது அவர் தம் ஆயுளைப் பிரிந்து போகக்கூடிய நாள் என்கிற அர்த்தத்தில் பாபா சூட்சுமமாக அப்படிக் கூறினார். 1918-ம் ஆண்டு விஜயதசமி அன்று அவர் உடலை விட்டுப் பிரியப்போவதை 1916-ம் ஆண்டு விஜயதசமி அன்றே பாபா குறிப்பால் உணர்த்தினார்.

பாபாவின் இறுதி நிமிடங்கள்

பாபாவின் இறுதிநாட்களில் ஒன்றில் அவர் அமர்ந்திருந்த மசூதியில் அவர் கை வைத்து அமர ஏதுவாக ஒரு செங்கல் இருந்தது. பாபா பல நேரங்களில் அதன் மீது சாய்ந்து கொண்டுதான் உட்காருவார்; எழுவார். பல ஆண்டுகளாக பாபா இவ்விதமாக அந்தச் செங்கல்லைப் பயன்படுத்தி வந்தார். மசூதியில் ஒருநாள் பாபா இல்லாத சமயத்தில் அங்கு தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் செங்கல்லை எடுத்து விட்டு அந்த இடத்தையும் சுத்தப்படுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்தச் செங்கல் உடைந்து விட்டது.
அப்பையனின் கைதவறி உடைந்ததால் செங்கல் இரண்டு பாகங்களாகி விட்டது. பிறகு மசூதிக்கு வந்து உடைந்த செங்கல்லைப் பார்த்த மாத்திரத்தில் பாபாவின் மனமும் உடைந்துவிட்டது. மிகவும் கவலைபடர்ந்த முகத்துடன் பாபா உடைந்த செங்கல்லைப் பார்த்தார். பிறகு அவரே அதைக் குனிந்து எடுத்து. ‘‘உடைந்தது செங்கல் அல்ல; எமது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் ஸ்பரிசத்துடன்தான் நான் எப்போதும் ஆன்ம தியானம் செய்தேன்.
அது என் உயிரைப் போன்று அவ்வளவு பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது” என்று கூறி வருத்தப்பட்டார் பாபா. லெக்ஷ்மிபாய் ஷிந்தே பாபாவுடன் இருந்து உணவு பரிமாறி சேவை செய்தவர். அதை நினைவுபடுத்திக்கொண்ட பாபா அவரை அருகே அழைத்து முதுலில் ஐந்து நாணயத்தையும், பிறகு மீண்டும் நான்கு நாணயத்தையும் அளித்து ஆசிர்வதித்தார்.
அதன் பிறகு பாபா, மசூதி தமக்கு சௌகரியமாக இல்லை என்றும், பூட்டி கட்டி வைத்த தகடிவாடா (இருப்பிடம்) விற்கு தம்மை அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என்றும் கூறிக் கொண்டே பய்யாஜி கோதேயின் மேனியில் சாய்ந்து உயிரை விட்டார்.
பாபாவின் மூச்சு நின்று போனதை அறிந்த பாகோஜி அருகில் இருந்த நானாசாஹேப் நிமோன்கரிடம் அதுபற்றிப் பதற்றத்துடன் கூறினார். உடனே நிமோன்கர் சிறிது நீர் எடுத்து வந்து அதை பாபாவின் வாயில் ஊற்றினார். ஆனால், அந்நீர் உடனே வெளியே வந்துவிட்டது.
ஷீர்டி மக்களுக்குள் கருத்துவேறுபாடு
பாபாவின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக ஷீர்டி மக்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு சிலர் அவர் உடலைத் திறந்தவெளியில் அடக்கம் செய்து சமாதி கட்ட வேண்டும் என்றும், பெரும்பாலானோர் கிருஷ்ணர் சந்நிதி அமைய ஒதுக்கப்பட்ட வாதாவிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். இப்பிரச்சினை சுமார் 36 மணி நேரம் நீடித்தது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பும் நடந்தது.
அதன் பிறகு பாபாவின் உடல் ஊர்வலமாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாலா சாஹேப் பாடே, உபாசினி ஆகியோரால் பாபாவிற்கான இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.பாபா அடக்கம் செய்யப்பட்ட அந்த இடம் ஷீர்டியில் இன்று ஸித்தி மந்திராக உள்ளது.

இன்று ஷீரடி சாய் பாபா மஹா சமாதி அடைந்த தினம்.

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.


விஜயதசமி - பாபா ஸித்தி  நாள்
ஷீர்டி சாயிபாபா, 1918-ம் ஆண்டு விஜயதசமி நாளில் சித்தி அடைந்தார்.சாயிபாபா பக்தர்கள் இந்த நாளை பாபாவின் மகாசமாதி நாளாக வழிபடுகின்றனர்.

குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக


அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனுடன் கலந்து குழந்தையின் நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய் மாறி நன்கு பேச வரும்

Wednesday, October 15, 2014

தேய்பிறை அஷ்டமி அபிஷேகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 16-10-2014
014 வியாழன் கிழமை  
மாலை 6.30 மணிக்கு


தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.