மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Monday, August 18, 2014

ஸ்ரீ சப்தகன்னியர்

ஸ்ரீ சப்தகன்னியர்



தாய் தெய்வ வழிபாடே மிகப் பழமையான வழிபாடாகும். இதுவே பின்னாளில் கொற்றவை வழிபாடாக தமிழகத்தில் நிலை பெற்றது. சங்க இலக்கியங்களிலும், ஐம்பெரும் காப்பியங்களிலும் `காடுகிழாள்'என்று இவ்வழிபாடு பேசப்படுகிறது. சிவபெருமாள் அட்ட (எட்டு) வீரச்செயல்கள் புரிந்து தீய சக்திகளை வதம் செய்தார் என்பது சிவ புராணமாகும். அதே போன்று தேவியும், அசுர சக்திகளை அழிக்க எடுத்த ஏழு உன்னத வடிவங்களை தேவி மகாத்மியம் புகழ்ந்து பாடுகிறது.
மேலும் சிவபெருமான் அந்தாகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டத்தை அழித்திட பிரம்ம தேவன் முதலான ஆண் தெய்வங்களின் சக்திகள் (மனைவியர்) சப்தமாதர்கள் என்றும் பெண் தெய்வங்களாகி உதவினர். இத்தேவதைகளே  சப்தமாதர்கள், சப்த கன்னியர், சப்த மங்கையர் என வழிபடப்படுகின்றனர்.
மிகப்பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டிய முதல் பிரகாரத்தில் தென்புறமுள்ள தென்முகக் கடவுளான தெட்சிணா மூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த மங்கையர் இருக்கக் காணலாம். வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் ஏழு தேவியரும் காட்சி தருவார்கள். சில இடங்களில் தனித்தனி சிற்பமாகவும், சில கோவில்களில் நீண்ட செவ்வகக்கல்லில் அடுத்தடுத்தும் இத்தேவியர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சப்தமாதர்களுடன் கணபதியும், வீரபத்திரமும் காணப்படுவார்கள். மிகப்பழமையான சிவன் கோவில்களின் சப்தமாதர் களின் எச்சங்களை இன்றும் காண முடியும். கிராம தேவதைகள் சப்த மங்கையராவோ, சப்த மங்கையரில் ஒருவராகவோ இருக்க காணலாம். பொன்னியம்மன், செல்லியம்மன், வடுவாயம்மன், போன்ற பெயர்களால் சப்த மங்கையர் வழிபாடு தொடர்ந்து வருகிறது.
 சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.   

1. ஸ்ரீ பிராம்மி (பிராம்மணி)

சப்தமாதர்கள் கூட்டத்தில் முதலாவதாக உள்ள தேவி பிராம்மி எனப்படுகிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் அம்ச மாணவள். எனவே பிரம்மனை போன்று நான்கு முகங்கள், நான்கு கைகள், எட்டு கண்கள் உடையவள். நான்கு கரங்களில் ஒன்று அபயஹஸ்தமாகவும், மற்றொன்று வரத ஹஸ்தமாகவும் உள்ளன.
பின்னிரு கைகளில் ஐப மாலையும், கிண்டியும் பிரம்மனுக்கு உள்ளது போன்றே உள்ளன. ஐடா மகுடத்துடன் பீதாம்பரம் உடுத்தி அன்ன வாகனத்தில் எழுந்தருளுவாள். உயிர்களைப் படைக்கும் சக்தியும் படைத்தவள். குழந்தை வரம் அருளுபவள்.  சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோவிலின் மூலவர் பிராம்மி தேவியேயாவாள்.
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷ மாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள்.
ருத்திராக்க மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.     

2.ஸ்ரீ  மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணு தர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.
எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார். சப்தமாதர்களில் இரண்டாவதாக உள்ள தேவி மாகேசுவரியாவாள். மகேஸ்வரனாகிய சிவபெருமானின் பெண் அம்சமாவாள். ஒரு முகம், முக்கண், ஜடாமகுடம். மகுடத்தில் பிறைச்சந்திரன், பாம்பையும் தரித்தவள் கரங்களில் மான், மழுவுடன் முத்தலை சூலமும் இருக்கும். ரிஷபம் இத்தேவியின் வாகனமாகும். வெள்ளை ஆடை உடுத்தும் இத்தேவி கலங்கின மனதை அமைதியடையச் செய்பவள்.    

3.ஸ்ரீ கவுமாரி

கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி. இவளுக்கு சீடி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள்.
இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர் குமரன் என்றழைக்கப்படும் முருகப்பெருமானின் வழிபாட்டு நெறி கௌமாரம் எனப்படும். முருகக்கடவுளின் பெண் அம்சமாக கௌமாரி கொண்டாடப்படுகிறார். ஒரு முகம் இரு கண்கள் ஜடாமகுடத்துடன் நீல வண்ண உடம்புடன் காட்சியளிப்பவள் கௌமாரி. பின்னிரு கைகளிலும் வஜ்ரம், சக்தி ஆயுதம் தாங்கி நிற்பாள்.
சிவப்பு நிற ஆடை அணிந்து நீண்ட வேலாயுதமேந்தி இருப்பாள். சேவற்கொடியுடன் மயில்வாகனத்தில் எழுந்தருளும் கௌமாரியை உஷ்ண சம்பந்தமான நோய்கள் அகல வழிபடுகிறார்கள்.     

4.ஸ்ரீ வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும். விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார்.
வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவ தாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார்.
விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டி ருப்பார். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் பெண் அம்சமாக வைஷ்ணவிதேவி போற்றப்படுகிறாள்.  விஷ்ணுவைப் போன்ற அருள்பொழியும் தாமரைக் கண்கள் கொண்டவள்.
முன்னிரு கரங்களும் அபய, வரத ஹஸ்தங்கள். பின்னிரு   கைகளில் சங்கும், சக்கரமும் ஏந்தி இருப்பாள். வெண்மை  உடலுள்ள இவ்வம்மையின் வாகனம் கருடன். விஷக்கடிகள் குணமாகவும், தோல் தொடர்பான பிணிகள் நீங்கவும் வைஷ்ணவியை வழிபடுகிறாள்.  

5.ஸ்ரீ வராகி அம்மன்

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள்.
சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள்.
லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார்.
இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .தண்டநாத வராகி பொன்னிறமானவர்.
பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும்.
இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும். இரண்யாட்சகன், இரண்ய கசிபுவின் தம்பி இருவருமே அரக்கர்கள்.
மேலான வரங்கள் பெற்ற இவர்கள் பூமிப்பந்தை பந்தாடிக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை இரண்யாட்சகன், பூமியையே பாதாள உலகத்தில் கொண்டு போய் பதுக்கி வைத்து சகல ஜீவராசிகளை இம்சித்தான். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டார்கள்.
மகா விஷ்ணுவும், வராக அவதாரம் (பன்றி) எடுத்து பாதாள உலகம் சென்று பூமாதேவியை மீட்டு  வந்தார். இதனால் பூவராகவன் எனப்பட்டார். சிவபெரு மான் அந்தகாசுரனுடன் போர் புரியும் பொழுது, வராகமூர்த்தி, வராகி அம்மனாக பெண் உருக்கொண்டு சிவனின் வெற்றிக்கு வித்திட்டாள். எனவே பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லும் வேந்தர்கள் வெற்றிவேண்டி வழிபட்டுச் செல்லும் தேவியாக வராகி அம்மன் போற்றப்பட்டாள்.
வராக முகம் உடையவள். பின்னிரு கைகளில் கலப்பை, உலக்கை ஏந்தியிருப்பாள். முன்னிரு கைகளும் அபய வரத ஹஸ்தம் கொண்டு அருள்பாலிப்பவள். மேக நிறமுடையவள். கரிய வண்ணத்தை விரும்புபவள். இத்தேவியின் வாகனமாக சிம்மம், எருமை, கரும்புள்ளிமான், சர்ப்பம் ஆகியவை உள்ளன. 

6.ஸ்ரீ இந்திராணி

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப் பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத் தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள்.
சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரை யும் கொண்டவள். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும். தேவேந்திரனின் அம்சமாக இந்திராணி போற்றப்படுகிறாள். மாகேந்திரி என்றும் ஐந்தரி என்றும் இத்தேவதை கொண்டாடப்படுகிறாள். காளமேக வண்ணத்தினாள் ஒருமுகம், இரண்டு கண்கள் (ஆயிரம் கண்கள் உண்டெண்பர்) ஜொலிக்கும் ரத்ன கீரிடம் தரித்து வஜ்ராயுதம், சக்தி போன்ற ஆயுதங்களைத் தாங்கி நிற்பாள்.
வெள்ளை யானையின் மீது வலம் வருபவள். விருத்திகாசுரன் என்ற மாபெரும் அசுர சக்தியை அழித்த சக்தியாக  இவ்வம்மை வணங்கப்படுகிறாள். சத்துரு பயம் நீங்க இத்தேவியை வழிபடும் வழக்கம் உள்ளது.   
7.ஸ்ரீ சாமுண்டிதேவி
ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள். பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!
சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல் தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள், சொத்துக்கள், சுகங்களைத் தருவாள்.
இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள். கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.
பயப்பேயையேப் பயந்தோடச் செய்யும் தோற்றம் கொண்டவள் சாமுண்டி. சண்டர்முண்டர் என்னும் அசுரர்களை அழித்தவள். ரத்த பிஜன் என்ற அரக்கனின் ரத்தம் குடித்து அவன் கொட்டம் அடக்கியவள். விரித்த சடையில் கபாலம் தரித்தவள். மூன்று கண்கள், கோரைப்பற்கள் கொண்ட வாய், மண்டை யோட்டு மாலை அணிந்து புலித்தோலை ஆடையாகச் சுற்றியுள்ள இத்தேவி அமர்வது பிரேத (பிணம்)த்தின் மீது தான்.
திருக்கரங்களில் சூலாயிதமும், கபாலமும் ஏந்தி இருப்பாள். இத்தேவியை பிடாரி (பீடா=துயரம், ஹரி=நீக்குபவள்) என்று பண்டை நாளில் வணங்கப்பட்டாள். பிடாரிக்கோவில்கள் பற்றி ஏராளமான கல்வெட்டு குறிப்புகள் பல்லவ, சோழர், பாண்டியர், சாசனங்களில் கிடைக்கின்றன. முத்தரை யர்கள் காளா பிடாரிக்கு நேமத்தில் கோவில்  எடுப்பித்த தாகவும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்பட்டாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள். தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதிகோவிலில் சாமுண்டா தேவிக்கு சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம் இருந்திருக்கிறது.
பன்னெடுங்காலமாக வணங்கி வழிபட்டு போற்றப்பட்டு வரும், தாய் தெய்வ வழிபாட்டிற்கும், சக்தி தத்துவ பெருமைக்கும், தேவி ஒருத்தியே வடிவங்கள் பல தாங்கி மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி, கருணை மழை பொழியும் தாய்மையின் உருவமாக கொண்டாடப்பட்டதே , சப்த மங்கையர், சப்த கன்னியர் வழிபாடாகும். பழமையான  வழிபாடு இன்றும் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் வெவ்வேறு பெயர்களிலும் வழிபடும் நிலை உள்ளது.

ஸ்ரீ  சப்தகன்னியர்

No comments:

Post a Comment