மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Tuesday, September 9, 2014

புதன் கிரக தோஷ பரிகாரத் தலமான திருவெண்காடு

சுபமும், சுகமும் அருளும் திருவெண்காடு சுவேதாரேண்யேசுவரர் மற்றும் புதன்


புதன் கிரக தோஷ பரிகாரத் தலமான திருவெண்காட்டுத் தலத்திற்கென தனிச் சிறப்புகள் பல உள்ளன. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் குறிப்பிடப் பட்டுள்ளது. காசிக்குச் சம்மானதாகத் திகழும் ஆறு தலங்களுல் திருவெண்காடும் ஒன்று. 
இந்த்த் தலத்தில் சிவ மூர்த்திகள் மூன்று ,சக்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, மற்றும் தல விருட்சங்கள் மூன்று. சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்றதலம். பிரம்ம சமாதி அமைந்துள்ள தலம். ஐம்பத்தோறு சக்தி பீடங்களுள் ஒன்று
. சிவபெருமானின் அறுபத்தினான்கு மூர்த்தி பேதங்களுள் ஒன்றாகிய ஸ்ரீ அகோரஸ்திர மூர்த்தியை இங்கு மட்டுமே காணலாம். இந்திரன், ஐராவதம், சிவப்பிரியர், சுவேத கேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி முதலானோர் வந்து வழிபட்ட தலம். ஒவ்வொரு சிறப்பின் பின்னணியிலும் சுவையான புராண வரலாறு ஒவ்வொன்றையும் விவரிக்கப் புகுந்தால் நாளும் பற்றாது தாளும் பற்றாது. 
ஊருக்கு நடுவே திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்ஙகள் உள்ளன. கீழைக் கோபுரம் வரியே சென்றதும்கொடி மரத்தப் பிள்ளையார், பலிபீடம், கொடிமரம், ந்ந்தி,தெற்கே அக்னி தீர்த்தமும், கிழக்கே அக்னீஸ்வரன் கோயிலும் உள்ளன. திருவலம் வர தெற்குப் பிரகாரத்தில் திரும்பினால் சூரியன் கோயிலையும்,சூரிய தீர்த்தத்தையும் கானலாம் மேற்கு ராஜகோபுரத்திற்கு வடக்கில் நுற்றுக்கால். மண்டபத்தோடு இணைஆறுமுகப் பெருமான் கோயில். வெளிப் பிரகாரத்தில் சிறு கோபுரத்துடன் கிழக்கு நோக்கிய பிரம்ம வித்யாம்பிகை அம்மன் சந்நித். சந்நிதி உட்பிரகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்மையும் சுக்கிரவார அன்னையும் எழுந்தரளியுள்ளனர்.. பிள்ளை இடக்கி அன்னை குறித்து சுவாரஸ்யமான செவி வழிக் கதை ஒன்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஒருமுறை திருஞானசம்பந்தர் திருவெண்காட்டுக்கு வருகைபுரிந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும்,மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலால் இத்தலத்தை மிதிப்பதற்கு அஞ்சி அம்மா என்று அழைத்தாராம். அது கேட்டுப் பெரிய நாயகி அம்மை அங்கு தேர்ன்றி திருஞானசம்பந்தரைத் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டாராம். பிள்ளையை தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அன்னையின் சிலை பிரம்ம வித்யாம்மிகை கோயிலின் உட் பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அன்னையைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் கூப்பிட்டான் குளம் என்பர். அது நாளடைவில் மறுவி இன்று கோட்டான் குளம் என்ற வினோதமான பெயரால் வழங்கப்படுகிறது. அம்மன் கோயில் மண்டபத்தின் இடப்பகுதியில் பிரம்ம சமாதியும் , வில்வ விருட்சமும் உள்ளன.அம்மன் சன்னிதி எதிரில் சந்திர தீர்த்தமும், அதன் கரையில் மாபெரும் வடவால விருட்சமும் சந்திரன் கோயிலும் உள்ளன. திருக்கோயில் உட்பிரகாரத்தின் தென்பகுதியில் பெரிய வாரணப் பிள்ளையாருக்கும், சோமாஸ்கந்தருக்கும் தனித் தனிக் கோயில்கள் உள்ளன. தெற்கு நடையில் அறுபத்துமூவர், பத்திரகாளி, வீரப்த்ர்ர், இடும்பன், சுகாசன மூர்த்தி, ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர். மேற்கு நடையில் நாகேசுவரர் , விநாயகர், யோகமாணிக்கவாசகர், நால்வர், விசுவேஸ்வர்ர், விசாலாட்சி அங்காளப்பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியர், அஷ்ட்டலட்சுமி, மகாலட்சுமி, சரஸ்வதி , தனவிநாயகர் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் அகோரமூர்த்தி மூலவருக்கும், உற்சவருக்கும் தனித்தனிக் கோயில்கள். காட்சிநாயனார், சண்டேஸ்வரர் , சுவேதலிங்கம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர், காசி துண்டி விநாயகர், துர்கை, நவகிரகங்கள் ஆகியோர் உள்ளனர். நடுவில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில். மகா மண்டபம், அர்த்த மண்டபங்களுடன் கூடிய பெரிய சந்நிதி. வாயிலில் துவார பாலகர்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா ஆயோர் வீற்றிருக்கின்றனர்.கருவரையில் சுவேதாரண்யேசுவர்ர் என்னும் திருவெண்காடர் மகாலிங்க மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அம்பால் கோயில் மண்டபத்தின் இடப்பகுதியில் புதனுக்குத் தனிக் கோயில் அமைந்துள்ளது. புதன் பகவான் சந்திரனுடக்கும், தாரைக்கும் பிறந்தவர். ஆத்ரேய கோத்திரத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் திருவெண்காட்டில் பிறந்த அந்தனருக்கு உணவும், உடையும், மரகதப்பச்சைக் னல்லும் தானம் செய்து, விடியஙறகாலையில் முறைப்படி சாந்திசெய்து, புதன் கவசம், புதன்ஸ்தோத்திரம், புதன்காயத்ரி ஆகியவைகளை பாராயணம் செய்தால் புதன் அருளைப்பெறலாம். அது மட்டுமல்லாமல் திருமாலை வழிபடுவதாலும், பச்சைநிறப்பட்டு உடுத்துவதாலும், பச்சைக் கல் தரிப்பதாலும் பச்சைப் பயறு தானம் கொடுப்பதாலும், விஷ்ணுசகஸ்ர நாம பாராயணம் செய்வதாலும் புதன் கிரகதோஷங்கள் நிவர்த்தியாகும்.

திருத்தலக் குறிப்புகள்


தலத்தின் பெயர்: திருவெண்காடு சுவாமியின் திருநாம் : ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர்,புதன்.
எங்கே உள்ளது : தமிழ்நாட்டில் சீர்காழிக்கு அருகில். எப்படிச் செல்வது : சென்னையிலிருந்தும் கோவையிலிருந்தும் சீர்காழிக்கு ரயில் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். சீர்காழியிலிருந்து இருந்து பேருந்து கார் மற்றும் ஆட்டோ மூலம் சீர்காழி சென்றடையலாம்.
எங்கே தங்குவது : சீர்காழியில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம் : காலை 6.00 முதல் 12.00 வரை மாலை 4.00 முதல் 9.00 வரை

கோயில் முகவரி : நிர்வாக அலுவலர், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில், திருவெண்காடு அஞ்சல், சீர்காழி தாலுக்கா - 609 114
தொலைபேசி : 04364 -256424.



No comments:

Post a Comment