திருநாகேஸ்வரம்
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கான தலம்
மூலவர் - நாகேஸ்வரர்
அம்பாள் - கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணி நுதலாள்
தலமரம் - செண்பக மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் முதலான 12 தீர்த்தங்கள்
சேக்கிழார் திருப்பணி செய்த தலம் , இத்தலத்தை மிகவும் நேசித்தமையால் தனது ஊரான குன்றத்தூரில் இப்பெயரிலேயே ஒரு கோயில் கட்டியுள்ளதாக வரலாறு
ஆதிசேஷன் , தட்சன் , கார்க்கோடகன் முதலிய நாகராஜாக்களும் , நந்தி , கெளதமர் , நளன் , பராசரர் , பகீரதன் , விநாயகர் , பாண்டவர்கள் , வசிஷ்டர் , பிரம்மன் , இந்திரன் , சனக முனிவர் , சித்திரசேனன் , நற்குண முனிவர் முதலியோரும் வழிபட்டு அருள் பெற்ற தலம்
அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி அம்மை சிவனாரை வழிபட்ட தலம்
ராகுபகவான் தனிச்சந்நிதியில் தன் இரு மனைவியருடன் எழுந்தருளி சிறப்புடன் அருள்பாலிக்கிறார் . இவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாக மாறுவதாக சொல்லப்படுகிறது
கிரிகுஜாம்பிகை அம்மன் தனிக்கோயிலில் தனிச்சிறப்புடன் திகழ்கிறார் . கிரிகுஜாம்பிகை அம்மையின் திருவடிவம் சுதை வடிவத்தில் இருபுறமும் சரஸ்வதி , லட்சுமி தேவியருடன் தெற்கு நோக்கி திருக்காட்சி , அம்மைக்கு தை மாதத்தில் மட்டும் புனுகு சட்டம் சாற்றப்படுகிறது
சிவனார் கிழக்கு நோக்கியும் , பிறையணி நுதலாள் அம்மை சிவனாருக்கு அருகிலேயே தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கியும் திருக்காட்சி
தல விநாயகராக செண்பக விநாயகர் , சூரிய தீர்த்தக் கரையில் மழுப்பொறுத்த விநாயகர்
சேக்கிழார் மண்டபத்தில் சேக்கிழார் , அவரது தாயார் , தம்பி உருவங்கள்
2- ம் பிரகாரத்தில் நாகராஜன் உருவம்
கார்த்திகையில் பெருவிழா , வைகாசி பூசத்தில் சேக்கிழார் குரு பூஜை
கண்டராதித்த சோழன் காலத்திய பெரிய கோயில்
காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம் , நண்பகலில் திருநாகேஸ்வரம் , மாலையில் திருப்பாம்புரம் என ஒரே நாளில் வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது
தரிசன நேரம்
காலை 06:00 - 12:45 &
மாலை 04:00 - 08:45
ராகுகால நேரத்தில் ராகுபகவான் சந்நிதி மட்டும் திறந்திருக்கும் . பால் அபிஷேகமும் செய்யப்படுகிறது
கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது நவக்கிரக ராகுபகவானுக்கான இச்சிவத்தலம்
மிக அருகில் உள்ளது ஒப்பிலியப்பன் கோயில் திவ்யதேசம்
No comments:
Post a Comment