மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, September 7, 2014

கமலமுனி சித்தர்

பிறக்க முத்தி திருவாரூர்"-கமலமுனி சித்தர்

  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயில் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள் உள்ளது .

  இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.
தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. 


  கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.



  திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும் :
சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், "என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது' என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களை காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன..

  தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்..


  சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு.



  அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது. வெளி சுற்று பிரகாரத்தில் ஆனந்தீஸ்வரர் எனும் சிவ ஆலயத்தின் உள்ளே கமலமுனி சித்தர் இருக்கிறார் ..சித்துக்களில் கமலமுனி நிகரற்றவர் என போகர் கூறுகிறார்

பெயர்:கமலமுனி சித்தர் ..
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பூசம்
ஆயுள் காலம்: 4000 ஆண்டுகள், 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவாரூர்
குரு:போகர், கருவூரார்
சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
  தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.



No comments:

Post a Comment