ஸ்ரீ சிவவாக்கியர் -சிவன்மலை
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சிவன்மலை மீது அமைந்துள்ளது..சிவ வாக்கியர் எனும் சித்தர் பெருமான் அமைத்த கோயில் என்பதால் சிவ மலை எனப் பெயர் பெற்றதாக ஐதீகம். சிவ மலையே பேச்சு வழக்கில் சிவன்மலை ஆகிவிட்டது.
" சிவ வாக்கியம் " என்ற நூலை இங்கு தான் சிவவாக்கியர் இயற்றினார் .(இவரது சொருப சமாதி உள்ள இடம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மூலஸ்தானம் தான் ).இறை தத்துவத்தை அனைவரும் அறியும் படியான பாடல்களை பாடிய நிறை ஞானி. ஒப்பிலா சித்தர். முருகப் பெருமானிடம் அருளும் உபதேசமும் நேரிடையாகப் பெற்ற பேருடையவர். முருகனின் உபதேசம் பெற்று சிவவாக்கியர் இங்கு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் யோக நிஷ்டையில் கோயிலில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்... இங்கு சிவவாக்கிய சித்தர் தவம் செய்த இடம் உள்ளது ...இங்கு அமர்ந்து தவம் செய்யும் அனைவரும் இதை நன்கு உணரலாம் ...ஈர்ப்பு நிறைந்த கோவில் ..ஒருமுறை சென்று வாருங்கள்
இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை...
சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது. கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.( சன் டிவி இல் சித்தர்களை பற்றிய ""சிவமயம்"" எனும் தொடர் இந்த மலையில் தான் ஒளிபதிவு செய்யப்பட்டது )
No comments:
Post a Comment