ஸ்ரீ கடம்பவனேஸ்வரர்_ஆலயம்_குளித்தலை
இறைவன் வடக்கு நோக்கிய தலம்
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலைப் பேருந்து நிலையத்துக்கு சற்று தொலைவில் எழிலுற அமைந்திருக்கிறது
கடம்பவனேஸ்வரர் ஆலயம்.
இறைவன் - கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர்.
இறைவி - முற்றிலா முலையாள், பாலகுஜாம்பாள்.
தல மரம் - கடம்பு.
பொய்கை - காவேரி.
புராண பெயர் - கடம்பந்துறை, குழித்தண்டலை
பாடியவர் - திருநாவுக்கரசர்.
அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்குக் கொலைப் பழி (பிரம்மஹத்தி தோஷம்) வந்தது. அவர்கள் தங்களது பழி அகல அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ளது கடம்பவனேஸ்வரர் கோவில். முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் கோவில் உள்ளதால் அங்குள்ள சிவன் கடம்பவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம் ஆகும். பொதுவாக சிவன் கோவில் கிழக்கு அல்லது மேற்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கும்.
ஆனால் காசியில் வடக்கு நோக்கி சிவன் கோவில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து குளித்தலையில் மட்டும்தான் வடக்கு திசையில் சிவன் கோவில் அமைந்துள்ளது.
வேறு எங்கும் இந்த சிறப்பு இல்லை. இக்கோவிலின் மூர்த்தி கடம்பவனேஸ்வரர். அவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். நாயகி பால குஜலாம்பாள். 108 சைவ திருத்தலங்களில் இது இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
தேவார பாடல் பெற்ற 277 தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுவாகும். அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் போர் நடந்த போது கத்யாயனா முனிவரை சப்த கன்னியர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த முனிவர் அவர்களுக்கு பிரம்மஹத்தி சாபம் (தன் நிலை மறந்துபோதல்) இட்டார்.
உடனே பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ருத்ரணி, கவுமாரி, சாமுண்டி ஆகிய 7 சப்தகன்னிகளும் முனிவரிடம் தங்களை மன்னித்து அருளு மாறு வேண்டினர். அதற்கு அந்த முனிவர் வடக்கு திசையில் இருக்கும் சிவனை வழிபட்டால் சாபம் தீரும் என்று கூறினார். இதையடுத்து அந்த சப்த கன்னிகள் குளித்தலை வந்து சிவனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர்.
பின்னர் அவர்கள் சிவன் வீற்றிருக்கும் கருவறைக்கு பின்புறமே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்கள். பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோயில்களில் உப சன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்கு தனியாக கோவில் அமைந்திருக்கும். மூலஸ் தானங்களில் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு எங்கும் இருக்காது.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் கருவறையில் சிவனுக்கு பின்புறமாக சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.
காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர் மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால் காசிக்கு போனதற்கு சமம் என்பர்.
பொதுவாக துர்க்கை அம்மனுக்கு வடக்கு நோக்கியே கோவில் அமைந்திருக்கும். இங்கு சிவனே வடக்கு நோக்கி இருப்பதால் இங்கு துர்க்கை அம்மன் இல்லை. திருமணமாகாத பெண்கள் 48 நாட்கள் இங்கு வந்து சப்த கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமின்றி இங்குள்ள கடம்பவனேஸ்வரருக்கும், பாலகுஜலாம்பிகை அம்மனுக்கும் திருமணம் செய்து வைத்தால் தங்கள் திருமண தடை அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆகும். மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், தை மாதத்தில் பூசத்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். இது 13 நாள் திருவிழாவாக நடக்கும்.*
தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இரண்டாவது திருத்தலம்.
இன்றைய வழக்கு குளித்தலை. திருக்கடம்பந்துறை, குளிர் தண்டலை, குழித் தண்டலை, குழித்தலை இவை தலத்தைக் குறிக்கும் பண்டைய பெயர்கள்.
திருக்கடம்பந்துறை, திரு ஆலவாய் (மதுரை), திருக்கடம்பூர் (சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் வழி) இவை கடம்ப மரத்தைத் தலமரமாகக் கொண்ட திருத்தலங்கள்.
கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம்.
#"திருச்சிற்றம்பலம்'' #"திருச்சிற்றம்பலம்'' #"திருச்சிற்றம்பலம்
இறைவி - முற்றிலா முலையாள், பாலகுஜாம்பாள்.
தல மரம் - கடம்பு.
பொய்கை - காவேரி.
புராண பெயர் - கடம்பந்துறை, குழித்தண்டலை
பாடியவர் - திருநாவுக்கரசர்.
வரலாறு!
தூம்ரலோசனன் எனும் அசுரன் தேவர்களைத் துன்புறுத்துகிறான். அவர்கள் அம்பாளிடம் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர்.அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்குக் கொலைப் பழி (பிரம்மஹத்தி தோஷம்) வந்தது. அவர்கள் தங்களது பழி அகல அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ளது கடம்பவனேஸ்வரர் கோவில். முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் கோவில் உள்ளதால் அங்குள்ள சிவன் கடம்பவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம் ஆகும். பொதுவாக சிவன் கோவில் கிழக்கு அல்லது மேற்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கும்.
ஆனால் காசியில் வடக்கு நோக்கி சிவன் கோவில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து குளித்தலையில் மட்டும்தான் வடக்கு திசையில் சிவன் கோவில் அமைந்துள்ளது.
வேறு எங்கும் இந்த சிறப்பு இல்லை. இக்கோவிலின் மூர்த்தி கடம்பவனேஸ்வரர். அவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். நாயகி பால குஜலாம்பாள். 108 சைவ திருத்தலங்களில் இது இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
தேவார பாடல் பெற்ற 277 தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுவாகும். அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் போர் நடந்த போது கத்யாயனா முனிவரை சப்த கன்னியர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த முனிவர் அவர்களுக்கு பிரம்மஹத்தி சாபம் (தன் நிலை மறந்துபோதல்) இட்டார்.
உடனே பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ருத்ரணி, கவுமாரி, சாமுண்டி ஆகிய 7 சப்தகன்னிகளும் முனிவரிடம் தங்களை மன்னித்து அருளு மாறு வேண்டினர். அதற்கு அந்த முனிவர் வடக்கு திசையில் இருக்கும் சிவனை வழிபட்டால் சாபம் தீரும் என்று கூறினார். இதையடுத்து அந்த சப்த கன்னிகள் குளித்தலை வந்து சிவனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர்.
பின்னர் அவர்கள் சிவன் வீற்றிருக்கும் கருவறைக்கு பின்புறமே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்கள். பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோயில்களில் உப சன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்கு தனியாக கோவில் அமைந்திருக்கும். மூலஸ் தானங்களில் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு எங்கும் இருக்காது.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் கருவறையில் சிவனுக்கு பின்புறமாக சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.
காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர் மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால் காசிக்கு போனதற்கு சமம் என்பர்.
பொதுவாக துர்க்கை அம்மனுக்கு வடக்கு நோக்கியே கோவில் அமைந்திருக்கும். இங்கு சிவனே வடக்கு நோக்கி இருப்பதால் இங்கு துர்க்கை அம்மன் இல்லை. திருமணமாகாத பெண்கள் 48 நாட்கள் இங்கு வந்து சப்த கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமின்றி இங்குள்ள கடம்பவனேஸ்வரருக்கும், பாலகுஜலாம்பிகை அம்மனுக்கும் திருமணம் செய்து வைத்தால் தங்கள் திருமண தடை அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆகும். மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், தை மாதத்தில் பூசத்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். இது 13 நாள் திருவிழாவாக நடக்கும்.*
தலத்தின்_சிறப்புகள்!
இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இரண்டாவது திருத்தலம்.
இன்றைய வழக்கு குளித்தலை. திருக்கடம்பந்துறை, குளிர் தண்டலை, குழித் தண்டலை, குழித்தலை இவை தலத்தைக் குறிக்கும் பண்டைய பெயர்கள்.
திருக்கடம்பந்துறை, திரு ஆலவாய் (மதுரை), திருக்கடம்பூர் (சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் வழி) இவை கடம்ப மரத்தைத் தலமரமாகக் கொண்ட திருத்தலங்கள்.
கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம்.
#"திருச்சிற்றம்பலம்'' #"திருச்சிற்றம்பலம்'' #"திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment