அடிப்படையே அர்ப்பணமாக கடமையாற்றுவது தான்
பகவத்கீதையின் அடிப்படையே அர்ப்பணமாக கடமையாற்றுவது தான். எந்தச் செயலைச் செய்தாலும், அதை காமகுரோதம் இல்லாமல் தூய உள்ளத்தோடு கடவுளுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அதனால் நமக்கு நல்லறிவு உண்டாகும்.
* ஓரிடத்தில் ஒருவருக்கு ஒரு செயல் நியாயமாக தோன்றும். அதே செயல் வேறோரிடத்தில் இன்னொருவருக்கு மற்றொன்று நியாயமானதாக இருக்கும். இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான நியாயம் என்று ஒன்று உண்டு. அதைப் பின்பற்றுவது தான் சிறந்ததாகும்.
* நமக்கு எல்லாவற்றிலும் அஞ்ஞானம் இருக்கிறது. நாம் செய்யக் கூடாத செயல்களை தெரிந்து கொண்டிருந்தாலும் பல சமயங்களிலும் செய்யவே முற்படுகிறோம். அஞ்ஞானம் வியாதி போன்றது . இந்த வியாதிக்கு மருந்து ஞானம் தான். அந்த ஞானத்தை ஞானமே வடிவான அம்பிகையே நமக்கு அருள் செய்கிறாள்.
* பணம் நிறைய இருந்தாலும் கவலை; போனாலும் துக்கம் உண்டாகிறது. உலக இன்பங்கள் எல்லாமே அப்படித்தான். அவற்றுக்கு ஆசைப்படாமல் வாழப்பழகிக் கொள்ளவேண்டும். அதனால் மனதில் முழுமையான அமைதியும் ஆனந்தமும் உண்டாகும்.-காஞ்சிப் பெரியவர்
No comments:
Post a Comment