புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்
பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (பாலாஜி) புரட்டாசி மாதத்தில் பூமியில் தோன்றியதாக கூறப்படுகின்றது. புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கு மா விளக்கிடுவது மிகவும் உத்தமமானது.இப்படிப்பட்ட மகத்துவமான புரட்டாசி மாதத்தில் சனீஸ்வரனையும் , நாராயணமூர்த்தியையும் வழிபட எல்லா நன்மைகளும் வந்தடையும்.
கிரகங்களில் ஈஸ்வரன் பட்டதை சிவபெருமானிடமிருந்து பெற்றவர் சனீஸ்வர பகவான். முக்காலமும் அறிந்து கொள்ளும் ஞானத்தைத் தரும் வல்லமை படைத்தவர் சனீஸ்வரன் ஆவார்.சனீஸ்வர பகவானை புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் வணங்குவது மிகவும் உகந்தது.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருக்க, துன்பங்கள் தீரும், வறுமை நீங்கி தொழில் சிறக்கும்.ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அட்டமத்துச்சனியாக இருந்தாலும், ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவானை விரதமிருந்து எள்ளெண்ணையில் தீபமேற்றி எள்தானம் செய்து, கருநீலப்பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் குறையும்.
No comments:
Post a Comment