மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, July 27, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல புராணம்






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல  புராணம் 

பஞ்சபூதேஸ்வரம்- இராவணனோடு போரிட்ட ஸ்ரீ ராமபிரான் இந்த இடத்திற்கு வந்தபோது இது "வானரவீர மதுரை' என்றும்; சிவனின் அருளால் ஆஞ்சனேயர் தன் வானரப் படைகளுடன் தேன் பருகி இளைப்பாறுகை யில் திரேதாயுகத்தில் "கீசான மதுரை' என்றும்; வில்வவனக் காடுகள் சூழ்ந்திருந்ததால் கலியுகத்தில் "வில்வ வனம்' என்றும் கூறப்படுகிறது. மகரிஷி அகத்தியரும் அவரது மனைவி லோப முத்திரையும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசித்த இடமும், ஆஞ்சனேயர் ராமனுடன் இணைந்து இராவணனுடன் போரிடப் புறப்பட்ட இடமும், ராமன் சக்தியை நோக்கிப் பூஜை செய்த இடமும், பலராமனுக்கு சிவபூஜை பயிற்சி செய்வித்த இடமும் இதுவே ஆகும் என புராணங்களும், சிவவாக்கிய நாடி மற்றும் காகபுஜண்டர் நாடியும் தெரிவிக்கின் றன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் வேதியரேந்தல் விளக்கு என்னும் பகுதி யில் உள்ள இந்த பஞ்சபூதேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி. 2002-ல் ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருப்பணிகளைத் தொடங்கி, தற்போது ஆகம சிற்ப சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தெய்வ சங்கற்பமுள்ள கருங்கற்களால் அந்தக் கால மன்னர்கள் அமைத்ததுபோலவே, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய கற்கோவிலை இங்கே பிரத்யங்கிரா தேவிக்காக எழுப்பியிருக்கிறார்கள். இங்கே எழுந்தருளியிருக்கும் அம்பாளின் திருவுருவம் விஸ்வரூபிணியாக- அதேசமயம் சாந்த சொரூபிணியாக அமைந்திருக்கிறது. இங்கே பீடத்தில் பதினொன்றேகால் அடி உயரத்தில், மலர்ந்த தாமரையில், இருபது கரங்களுடன்- ஒரு கரம் ஆசி கூற, ஏனைய கரங்களில் பல்வேறு தத்துவங்கள் அடங்கிய ஆயுதங்களையும் கொண்டு விளங்குகிறாள் அன்னை. ஏழு தலை நாகம் குடைபிடிக்கும் வண்ணம் காணப்படுகிறது. இது மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யிலான மனிதனின் ஏழு சக்கரங்களை விளக்குவது என்பர். அன்னைக்குப் பின்னே நிற்கும் சிங்கத்தின் தலை இடப்புறமும், அதன் வலது கால் சற்று தூக்கிய வண்ணமும் அமையப் பெற்றிருக்கிறது. நவகிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் மண்டை ஓட்டு மாலையாக அணிந்து காட்சி தருகிறாள் தேவி. ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டி குருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஸ்ரீ மஹா வல்லப கணபதிக்கும் இங்கு ஆலயம் அமைத்து கடந்த 24-6-2010 அன்று இத்திருக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். தொடர்ந்து 25-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை ஸ்ரீ சகஸ்ரசண்டீ மகா யக்ஞமும் நடைபெற்றது. ""இந்த யாகம் மௌரியப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் செய்யப்பட்டது. சீமாற வல்லபன் காலத்திலும் செய்யப்பட்டது. அதன் பிறகு மைசூர் அரசர் காலத்திலும், காஞ்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் 1963-ஆம் ஆண்டிலும் நடந்தது. அதற்குப் பிறகு இப்படி ஒரு உயர்வான ஸ்ரீ சகஸ்ர சண்டீ மகா யக்ஞம், செய்முறைப் படி ஐந்து தினங்களும் சாதனையாக நடந்தேறியது இத்தலத்தில்தான். மேலும் இக்கோவிலைச் சுற்றிலும் தசமகா வித்யா, ஸ்ரீ விஜய ஆகர் ஷண பைரவர், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ சப்த ரிஷிகள் மற்றும் 18 சித்தர் களுக்கும் ஆலயங்களை அமைக்க விருக்கிறோம்'' என்றார் இக்கோவிலின் அறங்காவலரான ஸ்ரீ ஞானசேகர ஸ்வாமிகள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட மகா கும்பாபிஷேகத்தின்போது நம்மிடம் பேசிய வித்யா என்பவர், ""இந்தக் கோவிலில் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படு பவர்கள் இங்கே கால் வைக்க முடியாது. அற்புதமான இம்மகா சக்தியின் அருளைப் பெறவே கோவையிலிருந்து வந்திருக்கிறேன்'' என்றார். ""எல்லாநாட்களிலும் எந்த நேரத்திலும் அன்னதானம் நடக்கும் கோவில் இது. இங்கே ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடோ சாதி வேறுபாடோ கொஞ்சமும் கிடையாது. தனிமனிதனைத் துதிப்பது, மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டுவது, பாதகாணிக்கை செலுத்துவது போன்ற காரியங்கள் இங்கே அறவே கிடையாது. உலக அமைதிக்காக அமாவாசை தோறும் யாகமும் பௌர்ணமி நாட்களில் விளக்குப் பூஜையும் தவறாமல் இங்கு நடக்கிறது'' என்றார். ஸ்ரீ பிரத்யங்கிரா என்பவள் ஸ்ரீ மகா பத்திரகாளியேதான். பத்ரம் என்றால் மங்களம். அன்பர்களுக்கு மங்களத்தையே செய்யும் தேவியான இவள் அதர்வண வேதத்தின்படி அதர்வண பத்ரகாளி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவி பாவங்களை நீக்கக் கூடியவள். ஆங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் என்ற மகரிஷிகள் இவளது மந்திரங்களை உணர்ந்து வெளிப்படுத்தியதனாலேயே பிரத்யங்கிரா என்ற பெயரில் பூஜிக்கப்படுகிறாள். இராவணனை அழிக்க ஸ்ரீ ராமபிரானே வழிபட்ட சக்தி இவள். இரண்யகசிபுவை வதம் செய்ய, நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணிக்க சரபமூர்த்தியான சிவபெருமானுக்கு உதவியவள். பஞ்சமுகத்துடன் நடனமிடும் சக்தி இவள் என தேவியின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது இக்கோவில்.


ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் மானமதுரை அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில் ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா நலன்களை அருள்வாள் .இந்த கோவில மண்ணை மிதித்து அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூரியனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன "எந்தளவு ஏற்றம் மூலம் செழிப்பு வாழ்க்கை கொடுக்க உச்ச தெய்வம் இந்த ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி

அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236



No comments:

Post a Comment