மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 11-06-2018 வைகாசி (28) மாத திங்கட்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் குரு பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :+9842858236

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

Saturday, December 19, 2015

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி 

ஆலயத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா

கோயிலின் முதுகெலும்பாக கொடிமரத்தை கூறுகின்றன நமது ஆகமங்கள். துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரத்தைப் பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றுகளிலேயே கூறப்பட்டுள்ளது. ஆலய திருவிழாக் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது கொடிமரம். ஆலய வழிபாட்டில் கொடிமரம் அருகே பூமியில் நமது உடம்பை கிடத்தி செய்யப்படும் சர்வாங்க நமஸ்காரம் நமக்கு மன பலத்தையும், உடல் பலத்தையும் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கொடிமர நீள அளவு, பிரதிஷ்டை செய்யும் முறை, கொடிமரத்தை அலங்கரிக்கும் தேவதைகள், வாகனங்கள் பற்றிய அனைத்து விதிமுறைகளும் ஆகமங்களில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ்வகையில்,திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில்,மணிமூர்த்தீசுவரம்
அமைந்துள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதியதாக 33அடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.கோவிலில்
புதியதாக செய்யபட்டு உள்ள கொடிமரம் பிரதிஷ்டை 20.12.2015 ஞாயிறு காலை 9.00 முதல் 10.00மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது
கொடிமர பிரதிஷ்டையில் பங்கேற்பதால் அனைத்து செயல்களிலும் ஏற்றங்கள் ஏற்பட்டு உயர்ந்த வாழ்வினை தரும்.
அனைவரும் இந்த கொடிமர பிரதிஷ்டை கலந்து கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம்
சார்பாக அன்புடன் அழைகின்றார்கள்.
ஆலயத்திற்கு வரும் வழி :-
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733

No comments:

Post a Comment