மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Monday, September 22, 2014

தோலில் வெண் புள்ளி மறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

தோலில் வெண் புள்ளி மறைய


வெட்டிய எட்டிவித்து வேம்புவிதைச் சாற்றினிலே
பட்டிடவுண் வெண்புள்ளி நோய்க்கு .......குறள் 




விளக்கம் :
மூக்கை வெட்டிய எட்டிக் கொட்டையைச் சுத்தி செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து கடலையளவு மாத்திரை ஆக்கி உண்டுவர தோலில் உண்டான வெண்புள்ளி தீரும்

Sunday, September 21, 2014

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் மகம் நட்சத்திர அபிஷகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள

ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு நாளை 22.09.2014திங்கள் கிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு .மு.நாகராஜன் cell :9443007479


சகல தோஷம் நீக்கும் பிரதோஷ வழிபாடு

சகல தோஷம் நீக்கும்

பிரதோஷ வழிபாடு

 

21/09/2014  ஞாயிற்று கிழமை பிரதோஷம்


மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.


 பிரதோஷ விரத மகிமை

தோன்றிய வரலாறு- வீதி வலம் வரும் முறை.சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று.

பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷம் பிறந்த கதை!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே,

சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்


மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - பல வளமும் உண்டாகும்

நெய் - முக்தி பேறு கிடைக்கும்

சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்

ஞாயிறு:-மலர்-செந்தாமரை

இலை-வில்வம்

நைவேத்தியம்-பாயாசம்

திங்கள்:- மலர்-வெள்ளை நிற மலர்கள்

இலை-அரளி

நைவேத்தியம்- வெண்பொங்கல்

செவ்வாய்:- மலர்-சிவப்பு நிற மலர்கள்

இலை-விளா இலை

நைவேத்தியம்-எள் அன்னம்

புதன்:- மலர்-தாமரை

இலை-மாதுளை

நைவேத்தியம்- சர்க்கரை பொங்கல்

வியாழன்:- மலர்-குவளை

இலை-நாயுருவி

நைவேத்தியம்-தயிர்சாதம்

வெள்ளி:- மலர்-வெண் தாமரை

இலை-நாவல் இலை

நைவேத்தியம்-சுத்த அன்னம்

சனி:- மலர்-நிலோற்பவம்

இலை-விஷணுகிரந்தி

நைவேத்தியம்-உளுந்து அன்னம்


பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

Saturday, September 20, 2014

புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்


புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்




பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (பாலாஜி) புரட்டாசி மாதத்தில் பூமியில் தோன்றியதாக கூறப்படுகின்றது. புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கு மா விளக்கிடுவது மிகவும் உத்தமமானது.இப்படிப்பட்ட மகத்துவமான புரட்டாசி மாதத்தில் சனீஸ்வரனையும் , நாராயணமூர்த்தியையும் வழிபட எல்லா நன்மைகளும் வந்தடையும்.


கிரகங்களில் ஈஸ்வரன் பட்டதை சிவபெருமானிடமிருந்து பெற்றவர் சனீஸ்வர பகவான். முக்காலமும் அறிந்து கொள்ளும் ஞானத்தைத் தரும் வல்லமை படைத்தவர் சனீஸ்வரன் ஆவார்.சனீஸ்வர பகவானை புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் வணங்குவது மிகவும் உகந்தது.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருக்க, துன்பங்கள் தீரும், வறுமை நீங்கி தொழில் சிறக்கும்.ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அட்டமத்துச்சனியாக இருந்தாலும், ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவானை விரதமிருந்து எள்ளெண்ணையில் தீபமேற்றி எள்தானம் செய்து, கருநீலப்பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் குறையும்.

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்


விளக்கம் :
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசோக

மரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்
அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும் .


Friday, September 19, 2014

பூவனூர் அகஸ்தியக்கு அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்

"அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி"



மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள
ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ருஅகஸ்தியக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் நாளை 20.09.2014 சனிகிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

.மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன் : 94436 55399]


மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி


















 எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,
எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்
ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்
மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை
நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா
நலன்களை அருள்வாள் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மானா
மதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்
24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்
தர்மமே ஆகும் .

இக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்