சந்திர கிரகணம் .நேரம் :
மதியம் 2.44 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.04 வரை நீடிக்கும் .
சந்திர கிரகணம் வரும் புரட்டாசி மாதம் 22 ஆம் தேதி அதாவது 8.10.2014 புதன்கிழமை ரேவதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் நிகழும் .இந்த கிரகணம் மதியம் 2.44 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.04 வரை நீடிக்கும் .அன்றைய சந்திரோதயம் மாலை 5.53 மணிக்கு ஆரம்பிக்கும் மாலை 6.04 மணிக்கு முடியும் .அதாவது 11 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும் .
உத்திரட்டாதி ரேவதி அஸ்வினி ஆயில்யம் கேட்டை ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு கிரகண தோஷம் உண்டு இவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்
பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது சந்திர கிரகணம்
மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ...
கிரகணதோஷ சாந்தி என்பது கிரகணத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக உணவு அருந்தி விட வேண்டும் கிரகண காலத்தில் குளித்து விட்டு காயத்திரி மந்தரத்தையோ அல்லது அவர்களுக்கு தெரிந்த மந்தரத்தையோ ஜெபம் செய்யலாம் .
கிரகணம் முடிந்த பின் குளித்து விட்டு அருகில் உள்ள இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் . கிரகணம் முடிந்த பின் புதிதாக சமைத்த உணவை உண்ணலாம் .கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது..
கர்ப்பிணி பெண்களும் இது போல் சாந்தி செய்ய வேண்டும்...
No comments:
Post a Comment