மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, October 15, 2014

இடு மருந்து உடலில் இருந்து நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

 இடு மருந்து உடலில் இருந்து  நீங்க 



தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்தின் நல்லெண்ணெய்
போங்காண் இடுமருந்து பொய்த்து -------------------குறள்


விளக்கம் :-
 இடு மருந்தால் துன்பபடுபவர்களுக்கு

தேங்காய் பால் 200 மில்லி
பொட்டிலுப்பு 2 கிராம்
நல்லெண்ணெய் 200 மில்லி
இவற்றை ஒன்றாகக் கலந்து காலையில் பருக கொடுத்தால் இடு மருந்தின் வேகம் குறையும் மனமயக்கம் தீரும் .
அடுத்த வேளை உணவில் சோயாவில் கறி மசாலை சேர்த்து குழம்பாக்கி அதை உணவாக (சோற்றில் ) உண்ண வேண்டும் .
அதனால் அவ் இடு மருந்தானது கழிந்து (வெளியாகி ) மனம் உடல் நன்மை பெரும் .


Tuesday, October 14, 2014

மலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல

மலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல 


பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும்.

ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது.

 இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.


சகல நோய்களுக்கும் ஒரு மருந்து .

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

  சகல நோய்களுக்கும் ஒரு மருந்து .

திரிகடுகு சூரணம்

சுக்கு ,மிளகு ,திப்பிலி இம் மூன்றையும் சம அளவு எடுத்து வெய்யிலில் காயவைத்து பொடியாக்கி சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும் .
சூரணம் பயன் படுத்தும் முறை :
அளவு : சிறு நெல்லிக்காய் அளவு
நோயாளியின் தன்மை ,நோயின் தன்மை இவைகண்டு தண்ணீரிலோ ,
தேன்னில் ,பாலில் அருந்த வேண்டும் .
தேன்னில் காலையும் மாலையும் உண்டால் ஜன்னி நோய்கள் ,குளிரினால் உண்டாகும் நோய்கள் தீரும்
நீரில் உண்டால் மாந்தம் நீங்கும் .
பனைவெல்லத்தில் உண்டால் வயிற்று நோய்கள் நீங்கும் .
தினமும் ஒருவன் உண்டு வந்தால் வைத்தியனை தேடிச் செல்லவேண்டியது இல்லை சகல நோய்களும் தீரும் .
இது அகத்தியர் வாக்கு அகத்தியர் பரிபூரண நூலில் கூறியிருக்கிறார்




Monday, October 13, 2014

சென்னிமலை தலபுராணம் சென்னி மலை முருகன்கோவில்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

சென்னி மலை முருகன்கோவில்


கந்த கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம், மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.



 சென்னிமலை தலபுராணம் பாடியவர் சரவண மாமுனிவர்.

சென்னிமலையில் சிறப்புக்களையும், முருகனின் திருவருளையும் தன் செந்தமிழ் கவிகளால் போற்றிப் பாடியிருக்கிறார்.
சரவண மாமுனிவரும் கடைசி வரை சென்னிமலையிலேயே வாழ்ந்து, அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். புண்ணாக்கு சித்தர் கோவில் அமைந்துள்ள இடத்திலேயே, சரவண மாமுனிவரின் சமாதியும் அமைந்துள்ளது.
இக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண ஸ்வாமிக்கு தனிக் கோவில் உள்ளது. இதற்கு பக்தர்கள் கோழி, ஆடு பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர்.


கருப்பண ஸ்வாமி கோவிலுக்கு செல்ல கரடுமுரடான மலைப்பாதைதான் இருந்தது. இதனால் பக்தர்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். அதன் பிறகே, 10 லட்சம் ரூபாய் செலவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.
இங்குள்ள தன்னாசி அப்பனை வணங்குவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை ஆகிய துன்பங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழலாம் என்ற ஐதீகம் பக்தர்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

வானில் வந்தவர்             இங்கேயே வாழ்ந்தார்


இவரது இயற்பெயர் தன்னாச்சி அப்பன் சித்தர். "இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்களின் நாவானது புண் பொருந்திய நாக்கு' என்று கூறிய முனிவர் இவர். இதனால் இவரை "புண் நாக்கு' சித்தர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் "புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது.
சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே புண்ணாக்குச் சித்தர் சிவ சமாதி அடைந்தார்.
அவர் சமாதி அடைந்த பின்னர் அவருடைய சிலையை தற்போதைய இடத்தில் நிறுவி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர்.
சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில் இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது.



சென்னிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம், இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்கு உரிய பாராயண நூலாகத் திகழ்கிறது. இதைப் பாடியவர் பாலதேவராயசுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல். இதைப் பாடுவோரை கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டதால் ‘கந்த சஷ்டி கவசம்’ எனப் பெயர் பெற்றது. கி.பி., 1654ல் பிறந்த இந்நூலின் இன்றைய வயது 360. ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இந்த பாராயணம், பக்தர்களின் நோய், பயம் தீர்க்கும் மாமந்திர நூலாகும். இக்கவசத்தை மனப்பாடமாக நெஞ்சில் பதிய வைப்போருக்கு செல்வம் பெருகும் 

தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.
சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)


சிறுநீர் பாதை சதையடைப்பு /கல்லடைப்பு நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சிறுநீர் பாதை சதையடைப்பு /கல்லடைப்பு நீங்க



நீர்கல் சதையடைப்பு நீங்கிவிடும் வெள்ளரியே
தேர்வித்து தூள்பாலில் கொள்----------------- ,குறள்



விளக்கம் :-
சிறுநீர் பாதையில் ஏற்படும் நீர் அடைப்பு,கல்லடைப்பு ,சதைஅடைப்பு இவற்றிற்கு வெள்ளரி விதையின் தூளை பாலில் குழைத்து உண்டு வர அனைத்து அடைப்பும் நீங்கும்

குலதெய்வம்

குலதெய்வம் வழிபாடு


குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின்பெருமை என்ன...?

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்
பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால்உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்தவழிவழி பாதையில் நம் தாத்தாக்களின்
வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்தவிஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம்.
அதற்கு உத்தரவாதமில்லை.ஆனால், குலதெய்வகோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்
அங்கு கொண்டு செல்லப்பட்டு,முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம்
பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்தவிதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின்பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம்இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?இந்த வழி வழி போக்கில் ஒருவர்மூட்டை மூட்டையாகபுண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாகவெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம்
முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”


குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான்
உயிரை எடுக்கமுடியும்.குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.யாருக்கு

கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்போவதும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்களும்கர்மவினைகளை நீக்க வல்லவை.யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்போவதும் உண்டு.பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்தவீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில்
வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வவழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.எனவே உங்கள் குலதெய்வத்தின்கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக
ஆராதனைகள் செய்யுங்கள்.அக்கோவிலுக்கு உதவுங்கள்.பூஜைகள் நடைபெற
ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்றதன்மையை போதிக்கிறது,அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்தகுலதெய்வம் மனிதன் லௌகீகவாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

Sunday, October 12, 2014

மங்கள ஆரத்தி

மங்கள ஆரத்தி

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். .

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.


தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.


ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.


திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

  ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.


வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
.
.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.


.