மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Monday, June 13, 2016

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள 
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 18.06.2016 ஆனி  4 மாத சனி கிழமை  அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று  அபிஷகம், 
ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி cell : 8754016236

9843016651
9842078733

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்



ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் 



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

காரைக்காலில் அமைந்துள்ள 
ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு ஆனி   மாதம் (2) வியாழக்கிழமை 16.06.2016   சுவாதி நட்சத்திரதன்று  அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்


மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர அபிஷகம், ஆராதனைஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள

ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 
11-06-2016  வைகாசி  (29) மாதம் சனி கிழமை  காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
திரு .மு.நாகராஜன் cell :94430 07479

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும்  அடிவாரத்தில் ஸ்ரீ  ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு  12.06.2016 ஞாயிற்று கிழமை வைகாசி  மாத (30)உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் 
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்  சார்பாக  
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

மேலும் தகவல்கள்களுக்கு 

திரு .அண்ணாமலை cell :94425 59844

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236

Saturday, June 11, 2016

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு பூரம் நட்சத்திர பூஜை அழகர் கோவில் மலை மேல்

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம் வைகாசிமாதம் 29ம் நாள் (12.06.2016)ஞாயிற்றுக்கிழமை பூரம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அபிஷேகம், ஆராதனைகள் பூஜை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமதேவர் சித்தர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்


புறப்படும் நேரம்:அதிகாலை 5 .30மணி புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.மதுரை

Wednesday, June 8, 2016

கொக்கராயன் பேட்டை கோயில்

எமதர்மராஜன் தன உதவியாளர்கள் அன்று எடுத்துவந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் .எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....
ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான் எனில் , அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான்

இப்படி ஒரு திருகோயிலா? தலமா ?


.
எங்கு உள்ளது ? நம் கொங்கு நாட்டில் தான் .....திருச்செங்கோடு அருகில் ...16 கிலோமீட்டரில் ..
திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....

திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.

சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது. சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.

இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.
இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பொ¢ய தீபஸ்தம்பம் உள்ளது.

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், 
ஸ்ரீ தட்க்ஷணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம். சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்தகிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

Monday, June 6, 2016

சர்ப்ப தோஷம்,காலசர்ப்பதோஷம் நீங்க துவித நாகபந்தம்



துவித நாகபந்தம்

சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா நேயாவோ யாயே தேயாளே.


சர்ப்ப தோஷம்,காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை,மாலை சுற்றிப் பிறந்த தோஷம்,மகப்பேறு கால
துன்பம்,இராகு கேது கிரக தோஷம் நீங்கப் பெறலாம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்அருளியது