மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, October 17, 2014

ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு 19.10.2014 ஞாயிறுகிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்குஐப்பசி மாதஅபிஷேகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


 ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு ஐப்பசி மாதஅபிஷேகம்



ஐப்பசி மாதம் 3 - ம் நாள் திங்கள்கிழமை (20-10-2014) பூரம் நட்சத்திரம் அன்று
 ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அழகர் கோவில் மலைக்கு மேல் 7கி .மீ   நடைபெறும்.
புறப்படும் நேரம் : அதிகாலை 5.15 மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.

குருவருளுடன் திருவருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.,

Thursday, October 16, 2014

ஆடி மாதம் நடைபெற்ற சத சண்டி யாக பெரு விழா புகைபடங்கள் 2014



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் கடந்த  ஆடி மாதம் நடைபெற்ற சத சண்டி யாக  பெரு விழா புகைபடங்கள்













இங்கு போடபடும்ஆன்மீக பதிவுகள்அனைத்தும் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஷீர்டி சாயிபாபா

ஷீர்டி சாயிபாபா

 

 

இந்திய ஆன்மிகத்தில் ஷீர்டி சாயிபாபா ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர். அவர் ஒரு முஸ்லிம் என்றும் இந்து என்றும் இன்றும் வாத பிரதிவாதங்கள் தொடர்கின்றன. அவரது பிறப்பு பற்றி யாரும் அறிய முடியாததாகவே உள்ளது. சாந்த்பாய் பாட்டீல் என்பவர் வீட்டுத் திருமண கோஷ்டியுடன் அவர் பதினாறு வயது இளைஞனாக ஷீர்டிக்குள் வந்த போது கண்டோபா கோவில் பூசாரியும் பின்னாட்களில் பாபாவின் மிக நெருங்கிய அடியவராகவும் ஆன பகத் மஹல்சாபதியால் ‘ஆவோ சாயி’ என்று வரவேற்கப்பட்டார். ‘சாயியே வருக’ என்பதே அதன் அர்த்தம்.

இங்கிருந்துதான் பாபாவின் அதிகாரப்பூர்வ ஷீர்டி வரலாறு தொடங்குகிறது. தொலைதூரத்தில் இருந்து வந்து, தரிசனம் செய்து ஆசி பெற்றுச் சென்றனர்.பாலகங்காதர திலகரின் உதவியாளர் கிருஷ்ண கபர்டே போன்றவர்கள் குடும்பத்தோடு மாதக் கணக்கில் தங்கியிருந்து பாபாவைத் தரிசனம் செய்ததுண்டு.

 ஆன்மீகத்தில் அதிசயங்கள்,. அற்புதங்கள் என்றும், எங்கும், எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கலியுகத்திலும் கூட. அதிலும் ஷீரடி சாய்பாபா. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் கொஞ்சம் அல்ல. நீரில் விளக்கு எறிய வெய்த்ததில் ஆரம்பித்து புயலை நில் என்று கூறி ஓடும் ஒரு குழந்தையை அதட்டி நிறுத்துவது போல் நிறுத்தியது. 300 கிலோ மீட்டர் தள்ளி நெருப்பில் விழுந்த தனது பக்தன் குழந்தையை ஷீரடியில் கொதித்து கொண்டு இருக்கும் பானையில் கையை விட்டு காப்பாற்றியது. பாம்பு கடித்த தனது பக்தனின் உடலில் உள்ள விஷத்தை இறங்கு, இறங்கு என்று கூறி வார்த்தையாலேயே இறக்கியது. கொட்டாங்குச்சி சாம்பலால் ஆயிரக்கணக்கானவர்களின் பிணிகளை போக்கியது. இன்றும் அவர் அருட்பிரசாதமான ஊதி போக்கி கொண்டு இருக்கிறது.
இவர் புராண காலத்திலோ இல்லை ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்போ வாழ்ந்தவர் அல்ல. சென்ற 1918 வரை பூத உடலோடு வாழ்ந்தவர். இன்றும் சூட்சும ஸொரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஷீரடி சாய் பாபாவின் பெருமைகளை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாள் என்ன. ஓராயிரம் வருடங்கள் கூட போராது. இது போன்ற ஒப்பற்ற ஞானிகளின் பெருமைகளை யாரும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரவர் தனது சொந்த சுயானுபவத்தில் உணர்ந்தால் தான் உண்டு. இந்த மகான் பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்று சேர்ந்து உருவான தத்தாத்ரேயரின் அவதாரம் என்று ஷீரடி சாய் அடியவர்களால் நம்பப்படுகிறது. அதற்க்கு ஏற்றாற்போல் யாருக்கு எந்த கடவுள் பிடிக்குமோ அந்த கடவுளாகவே இவர் காட்சி அளித்து உள்ளார்.
இவர் வெறும் மாயை அல்ல. அனைத்திற்கும் மேற்பட்ட மஹா மாயை.


பாபா கொடுத்த முன்குறிப்பு1916-ம் ஆண்டு பாபா தம் ஆயுளை முடித்துக் கொள்வது தொடர்பான ஒரு குறிப்பையும் கொடுத்திருந்தார். ஆனால், அதை அப்போது யாரும் புரிந்து கொள்ளவில்லை.அன்று விஜயதசமி தினம். ஷீர்டியில் சீமொல்லங்கன் எனப்படும் எல்லை தாண்டும் நிகழ்ச்சி அன்றைய தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த ஆண்டும் அதுபோல நடந்தது. அதன் இறுதிக்கட்டமாக கிராம எல்லையிலிருந்து கிராமத்திற்குள் செல்வார்கள். அப்படி நிகழ்ச்சி முடிந்து கிராமத்திற்குள் திரும்பும்போது, பாபா திடீரென கோபாவேசம் அடைந்தார்.
அவருக்குத் திடீரென வந்த கோபத்தில் தாம் அணிந்திருந்த கஃப்னி, லங்கோடு மற்றும் தலையில் கட்டியிருந்த துணியையும் கழற்றி வீசி எறிந்தார். அப்படி வீசி எறிந்ததோடு நிற்காமல் அவற்றைக் கிழத்துத் துண்டு துண்டாக்கி அப்படியே அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பிலும் போட்டார். அவர் நெருப்பில் துணிகளைப் போட்டதும் அது பிரகாசமாய்க் கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்போது பாபாவின் இரண்டு கண்களும் அதுவரையில் இல்லாத வகையில் சிவந்து காணப்பட்டன. பாபா அங்கிருந்தவர்களிடம், “ஓ... ஜனங்களே! இப்போது என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இந்துவா, முஸ்லிமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.
பாபாவின் இந்த ஆவேசத்தைப் பார்த்த ஜனங்கள் பெரிதும் பயந்து போய் விட்டனர். அவர் அருகே செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. பாபாவின் கோபத்தைக் கட்டுப்படுத்தி அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று கவலைப்பட்டனர்.
இந்நிலையில் பாபாவின் அடியவரான பாகோஜி ஷிண்டே மட்டும் கொஞ்சம் தைரியத்துடன் பாபா அருகே சென்றார். இந்த அடியவருக்குத் தொழுநோய் இருந்தது. அதை பாபா தம் கரங்களால் சுத்தம் செய்து குணமாக்கியதால், அவர் பாபாவே கதி என்று அவர் பாதங்களிலேயே விழுந்து கிடந்தார். அதனால் அவரால் பாபாவை எளிதாக அணுக முடிந்தது.
“என்ன பாபா இதெல்லாம். இன்று சீமொல்லங்கன் நாள். நீங்கள் இப்படி இருக்கலாமா?’’ என்று பாகோஜி ஷிண்டே, பாபாவிடம் தைரியமாய்க் கேட்க பாபா மேலும் கோபம் அடைந் தவராய்த் தமது கைகளில் எப்போதும் வைத்திருக்கும் சட்காவை எடுத்துத் தரையில் வேக வேகமாய் அடித்தபடியே ‘‘இன்று எனக்குச் சீமொல்லங்கன்” என்றார். அதாவது அவர் தம் ஆயுளைப் பிரிந்து போகக்கூடிய நாள் என்கிற அர்த்தத்தில் பாபா சூட்சுமமாக அப்படிக் கூறினார். 1918-ம் ஆண்டு விஜயதசமி அன்று அவர் உடலை விட்டுப் பிரியப்போவதை 1916-ம் ஆண்டு விஜயதசமி அன்றே பாபா குறிப்பால் உணர்த்தினார்.

பாபாவின் இறுதி நிமிடங்கள்

பாபாவின் இறுதிநாட்களில் ஒன்றில் அவர் அமர்ந்திருந்த மசூதியில் அவர் கை வைத்து அமர ஏதுவாக ஒரு செங்கல் இருந்தது. பாபா பல நேரங்களில் அதன் மீது சாய்ந்து கொண்டுதான் உட்காருவார்; எழுவார். பல ஆண்டுகளாக பாபா இவ்விதமாக அந்தச் செங்கல்லைப் பயன்படுத்தி வந்தார். மசூதியில் ஒருநாள் பாபா இல்லாத சமயத்தில் அங்கு தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் செங்கல்லை எடுத்து விட்டு அந்த இடத்தையும் சுத்தப்படுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்தச் செங்கல் உடைந்து விட்டது.
அப்பையனின் கைதவறி உடைந்ததால் செங்கல் இரண்டு பாகங்களாகி விட்டது. பிறகு மசூதிக்கு வந்து உடைந்த செங்கல்லைப் பார்த்த மாத்திரத்தில் பாபாவின் மனமும் உடைந்துவிட்டது. மிகவும் கவலைபடர்ந்த முகத்துடன் பாபா உடைந்த செங்கல்லைப் பார்த்தார். பிறகு அவரே அதைக் குனிந்து எடுத்து. ‘‘உடைந்தது செங்கல் அல்ல; எமது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் ஸ்பரிசத்துடன்தான் நான் எப்போதும் ஆன்ம தியானம் செய்தேன்.
அது என் உயிரைப் போன்று அவ்வளவு பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது” என்று கூறி வருத்தப்பட்டார் பாபா. லெக்ஷ்மிபாய் ஷிந்தே பாபாவுடன் இருந்து உணவு பரிமாறி சேவை செய்தவர். அதை நினைவுபடுத்திக்கொண்ட பாபா அவரை அருகே அழைத்து முதுலில் ஐந்து நாணயத்தையும், பிறகு மீண்டும் நான்கு நாணயத்தையும் அளித்து ஆசிர்வதித்தார்.
அதன் பிறகு பாபா, மசூதி தமக்கு சௌகரியமாக இல்லை என்றும், பூட்டி கட்டி வைத்த தகடிவாடா (இருப்பிடம்) விற்கு தம்மை அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என்றும் கூறிக் கொண்டே பய்யாஜி கோதேயின் மேனியில் சாய்ந்து உயிரை விட்டார்.
பாபாவின் மூச்சு நின்று போனதை அறிந்த பாகோஜி அருகில் இருந்த நானாசாஹேப் நிமோன்கரிடம் அதுபற்றிப் பதற்றத்துடன் கூறினார். உடனே நிமோன்கர் சிறிது நீர் எடுத்து வந்து அதை பாபாவின் வாயில் ஊற்றினார். ஆனால், அந்நீர் உடனே வெளியே வந்துவிட்டது.
ஷீர்டி மக்களுக்குள் கருத்துவேறுபாடு
பாபாவின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக ஷீர்டி மக்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு சிலர் அவர் உடலைத் திறந்தவெளியில் அடக்கம் செய்து சமாதி கட்ட வேண்டும் என்றும், பெரும்பாலானோர் கிருஷ்ணர் சந்நிதி அமைய ஒதுக்கப்பட்ட வாதாவிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். இப்பிரச்சினை சுமார் 36 மணி நேரம் நீடித்தது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பும் நடந்தது.
அதன் பிறகு பாபாவின் உடல் ஊர்வலமாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாலா சாஹேப் பாடே, உபாசினி ஆகியோரால் பாபாவிற்கான இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.பாபா அடக்கம் செய்யப்பட்ட அந்த இடம் ஷீர்டியில் இன்று ஸித்தி மந்திராக உள்ளது.

இன்று ஷீரடி சாய் பாபா மஹா சமாதி அடைந்த தினம்.

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.


விஜயதசமி - பாபா ஸித்தி  நாள்
ஷீர்டி சாயிபாபா, 1918-ம் ஆண்டு விஜயதசமி நாளில் சித்தி அடைந்தார்.சாயிபாபா பக்தர்கள் இந்த நாளை பாபாவின் மகாசமாதி நாளாக வழிபடுகின்றனர்.

குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக


அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனுடன் கலந்து குழந்தையின் நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய் மாறி நன்கு பேச வரும்

Wednesday, October 15, 2014

தேய்பிறை அஷ்டமி அபிஷேகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 16-10-2014
014 வியாழன் கிழமை  
மாலை 6.30 மணிக்கு


தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.