மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, June 5, 2016

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை









அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி 
கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 09-06-2016  வைகாசி  (27) மாதம் வியாழகிழமை  ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்


மேலும் தகவல்கள்களுக்கு

cell :9842078733
9043942091,
9843016651

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர சண்டி யாகம், அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி  ,அருபமான ஸ்ரீ போகர்
மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்  
09-06-2016  வைகாசி  (27) மாதம் வியாழகிழமை
 ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 8.30 மணியிலிருத்து சண்டி யாகம் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் 
ற்றும்  திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

Friday, June 3, 2016

குடற் பூச்சீ நீக்கம்




குடற் பூச்சீ நீக்கம் 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

எளிய முறையில் நமது வயிற்றை சுத்தம் செய்து கொள்ள வழி இதை மாதம் ஒருமுறை செய்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கி சுத்தமாகும்


கடுக்காய் ,வேப்பை ஈர்க்கு ,பிரண்டை இம்முன்றையும் எடுத்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி காலை,மாலையில் அருந்தினால் குடல் சுத்தமாகும் .
அளவு ; கடுக்காய் 1
வேப்பை ,ஈர்க்கு 2 பங்கு
பிரண்டை 1 பங்கு

Thursday, June 2, 2016

கொடிய பஞ்சத்தைப் போக்கிய கோரக்கர்!




கொடிய பஞ்சத்தைப் போக்கிய கோரக்கர்!



பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம்; ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பதுதான். அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின. ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர்; இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா! அனைவரும் அதிர்ந்தனர்.

இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார். பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது.

இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார். “தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும்; நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும்’’ என்று கூறினார். உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத் து வங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்; தண்ணருளைப் பொழிந்தார். இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது. தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.

சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச் செய்பவர்களே சித்தர்கள். இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ‘ஆர்ஷ லிங்கம்’ என்பார்கள். இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே. கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களையெல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார். அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார். பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன. எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.
சந்திரனை  அருளினார்


அத்ரிமலை யாத்திரை சுமார் 6 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும். மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரி தபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம். பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும். முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்; ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்துவிடுங்கள்.

பிதாமகன்' பீஷ்மர்


பிதாமகன்' பீஷ்மர்



"கங்கையின் மைந்தன்' என்றும்; "பிதாமகன்' என்றும் போற்றப்படும் பீஷ்மரின் இயற்பெயர் காங்கேயன் என்பதாகும். இவர் கங்கையிடம் பிறந்தது எப்படி?


கங்கையைக் கண்டு அவள் அழகில் மயங்கிய சாந்தனு மன்னன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதற்கு கங்கை ஓர் நிபந்தனை விதித்தாள்.


""திருமணத்திற்குப்பின் நமக்குப் பிறக்கும் குழந்தையை எடுத்துச் சென்று நதியில் வீசிவிடுவேன். ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்கக் கூடாது. இந்த நிபந்த னையை மீறிக் காரணம் கேட்டால் நான் உம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவேன்'' என்றாள். கங்கையின் நிபந்த னைக்குக் கட்டுப்பட்டு அவளுக்கு மாலை சூடினார் சாந்தனு. முதலில் ஒரு குழந்தை பிறந்தது. அதை எடுத்துச் சென்று நதியில் வீசினாள் கங்காதேவி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தனு மகாராஜாவின் மனம் கலங்கியது. ஆனால் நிபந்தனை அவரைத் மௌனியாக்கி விட்டது! இவ்வாறு ஏழு குழந்தைகளை நதியில் வீசிவிட்டாள் கங்கை. அடுத்து தான் பெற்ற எட்டாவது குழந்தையுடன் நதியை நோக்கிச் சென்றாள் கங்கை. இதனைப் பொறுக்க முடியாமல் சாந்தனு மகாராஜா, ""கங்கா, பெற்றெ டுத்த குழந்தையை ஏன் நதியில் வீசுகிறாய்?'' என்று கேட்டு விட்டார். உடனே கங்கையானவள், ""மகாராஜா! நீங்கள் நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி உங்களுக் கும் எனக்கும் எந்த சம்பந்த மும் இல்லை'' என்று குழந் தையை சாந்தனுவிடம் கொடுத்துவிட்டு, நதியில் சங்கமமாகி மறைந்தாள். அந்தக் குழந்தைதான் பிரபா சன் என்னும் காங்கேயன்.


காங்கேயன்தான் பின்னா ளில் "பீஷ்மர்' என்று பெயர் பெற்றார்.


ஒருசமயம் சாந்தனு மகாராஜா வேட்டை யாடச் சென்றார். அப்போது மீனவ குலப் பெண்ணைக் கண்டு, அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் கொண்டார். அப்பெண்ணின் தந்தை யான மீனவர் குலத் தலைவனி டம் சென்று சாந்தனு தன் விருப்பத்தைக் கூறிய போது, அவர் தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளுக்கே அரசுரிமை தருவதாக இருந்தால் சம்மதிப்பதாகக் கூறினார்.


அரசுரிமை பெற்ற மூத்த மகன் இருக்கும்போது இந்த நிபந்தனையை எவ்வாறு ஏற்பது என்று தவித்தார் சாந்தனு. அதேசமயம் அந்தப் பெண்ணை யும் அவரால் மறக்க முடியவில்லை. இதையறிந்த காங்கேயன் (பீஷ்மர்) மீனவர் குலத் தலைவனிடம் சென்று தன்னுடைய அரசுரிமையைத் துறப்பதாக வும், பின்னாளில் உரிமைப்போர் வராத வகையில் தான் திருமணமே செய்துகொள்ளாமல் சுத்த பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். சாந்தனுவின் ஒரே வாரிசான காங்கேயன் தன் தந்தையின் பொருட்டு அரச பதவியையும் மணவாழ்க்கையையும் துறந்ததை அறிந்த அஸ்தினாபுரத்தின் மக்கள் மட்டுமல்ல; தேவர்களும் வியப்படைந்தார்கள். அப்போது வானுலகினர் பூமாரி பொழிந்து, "பீஷ்ம... பீஷ்ம...' என்று வாழ்த்தினார்கள். பீஷ்மரைப் பற்றிய இந்தக் கதை நாம் அறிந்த ஒன்றுதான்! "பீஷ்ம' என்ற சொல்லுக்கு கடுமையான விரதத்தை உடையவன் என்று பொருள்.


தன் மகனின் தியாகத்தைப் போற்றிய சாந்தனு, ""எப்போது நீ மரணம் வேண்டும் என்று விரும்பு கிறாயோ அப்போதுதான் உனக்கு மரணம் சம்பவிக்கும்'' என்று வரம் கொடுத்து வாழ்த்தினார்.


பீஷ்மர் சகல கலைகளிலும் வல்லவர். பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாட்டனார் ஆவார்.


விதிவசத்தால் பீஷ்மர், துரியோதனன் கூட்டத்துடன் இருக்க நேர்ந்தது. சகுனியுடன் சூதாடி பாண்டவர்கள் நாட்டை இழந்தது, பாஞ்சாலி மானபங்கம், அவளை கண்ணன் காத்தது, பின் பாண்டவர் வனவாசம், இறுதியாக நடந்த பாரதப் போர் போன்றவற்றை நாம் அறிவோம்.


பாரதப்போர் தட்சிணாயன கால இறுதி மாதமான மார்கழியில் நடைபெற்றது. துரியோதனன் படைக்கு பீஷ்மர் தலைமை தாங்கினார். பாண்டவர் சார்பில் அவரை எதிர்க்க வந்த அர்ச்சுனன் சிகண்டி எனப்படும் அலியை முன்நிறுத்திக் கொண்டான். சுத்த வீரனுடன் போரிட்டு வெற்றி கண்ட பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் அம்பு தொடுக்காமல் நின்றார். இதுதான் சமயம் என்று கண்ணபிரான் ஜாடை காட்ட, பீஷ்மர்மீது பானங்களை எய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனனின் பாணங்கள் பீஷ்மரின் உடலைத் துளைத்தன. பீஷ்மர் போர்க்களத்தில் விழுந்தார். ஆனால் அவரது உயிர் பிரியவில்லை.


தட்சிணாயன காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிட்டாது என்பதால், உத்தராயண காலம் துவங்கும் வரை காத்திருக்க விரும்பி னார் பீஷ்மர். அதுவரை அம்புப் படுக்கை யில் படுத்துத் தவம் செய்தார்.


பீஷ்மரைக் காண்பதற்கு பாண்டவர்கள் வந்தனர். தலைப்பக்கத்தில் துரியோதனன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மரின் காலடிப் பக்கம் பாண்டவர்கள் நின்றிருந்தனர். அப்போது தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் பீஷ்மர். துரியோதனன் பழரசம் கொண்டுவர ஓடினான். பீஷ்மர் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் ஓர் அம்பினை மந்திரம் ஜெபித்து பூமியில் எய்தான். அம்பு துளைத்த இடத்திலிருந்து கங்கை ஊற்றெடுத்து மேலே பீறிட்டு வந்து பீஷ்மரின் தாகத்தைத் தணித்தாள். மகனுக்கு கங்கை அளித்த கடைசி நீர் இதுவாகும்.


உத்தராயணம் பிறக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மர் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துப் பிரார்த்தித்தார். அப்பொழுது பீஷ்மர் துதித்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.


பாரதப் போரினால் இந்த உலகிற்கு கீதையும் கிடைத்தது.


உத்தராயண காலம் ஆரம்பமானது. தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள், பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, "பீஷ்மாஷ்டமி' என்று போற்றப்படுகிறது.


பீஷ்மர் பிரம்மச்சாரி. அவர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால், அவர்மீது அன்பு கொண்டவர்கள், தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுத் தார்கள். அதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது. சாஸ்திரம் அறிந்தவர்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.


பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பர். பீஷ்மாஷ்டமி நாளில் யார் வேண்டுமானாலும் பீஷ்மருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் !!


பீஷ்மாஷ்டமி ஸ்லோகம் !!


"வையாக்ரபாதி கோத்ராய

ஸாங்க்ருதி ப்ரவராயச

கங்கா புத்ராய பீஷ்மாய ஆஜநம

ப்ரஹ்ம சாரிணே.

பீஷ்மாய நம: இத மர்க்யம்'


என்று சொல்லி நீர் விடவேண்டும்...


"அபுத்ராய ஜலம் தத்மி

நமோ பீஷ்மாய வர்மணே

பீஷ்ம: ஸாந்த நவோ வீர:

ஸத்ய வாதி ஜிதேந்த்ரிய:

ஆபி ரத்பி ரவாப் நோது

புத்ர பௌத் ரோசிதாம் க்ரியாமி

பீஷ்மாய நம: இத மர்க்யம்'


என்று சொல்லி நீர் விடவேண்டும்..


"வஸூநா மவதாராய ஸந்தநோ

ராத்மஜாய ச

அர்க்யமி ததாமி பீஷ்மாய

ஆபால ப்ரஹ்ம சாரிணே

பீஷ்மாய நம: இத மர்க்யம்'


என்று சொல்லி நீர் விட வேண்டும்..


முதலில் சுத்தம் செய்த ஒரு செம்பில் (தாமிரச்செம்பு மிகவும் விசேஷம்) தண்ணீர் நிறைத்து இடது கையில் அதை வைத்துக்கொண்டு, வலது கையால் ஒரு தட்டில் நீர் வார்க்க வேண்டும். இதுதான் அர்க்கி யம் என்பது. இவ்விதம் அர்க்கியம் விடுவதால் நாம் செய்த பாவங்கள் விலகும் என்று புராணம் கூறுகிறது.

விஷ்ணுசகஸ்ர நாமம்  அருளியதும் பிதாமகன்' பீஷ்மர்

Tuesday, May 31, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் வைகாசி மாதம்

அமாவாசை யாகம் 04.06.2016 சனி கிழமை வைகாசி   மாதம் 22









மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 04.06.2016 
சனி கிழமை வைகாசி மாதம்  அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

கீழா நெல்லி மூலிகை ஒன்று பயன் பல


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கீழா நெல்லி இதன்  வேறு  பெயர்கள்  ----இளஞ்சியம் ,அவகதவாய் ,மாலினி,காமாலை நிவர்த்தி .கீழா நெல்லி

மூலிகை ஒன்று பயன் பல கீழா நெல்லி

மஞ்சள் காமாலை நோய்க்கு கண் கண்டமருந்து  :--

கீழா நெல்லி இலை ,தும்பை இலை , மஞ்சள் கரிசலாங் கண்ணி  இலை சம  அளவு  எடுத்து அரைத்து சுண்டைகாய் அளவு  ஒரு டம்ளர்  பசும் பாலில்  கலந்து  இரு வேளை  குடித்து வர நாள் பட்ட மஞ்சள் காமாலை  நோய்
தீரும் .

கல்லீரல்  நோய்க்கு :

கீழா நெல்லியை  வைத்து  சிறிது சீரகம்  சேர்த்து அரைத்து  சுண்டைகாய்  அளவு  எலுமிச்சை  பழ  சாற்றில்  சேர்த்து  பருகி வர  கல்லீரல்  கோளாறு  குணமாகும் ..

நீர் சுருக்கு  தீர :--

கீழா நெல்லி  இலை யை  டைமண்ட்  கல்கண்டு  வைத்து  மை  போல் அரைத்து  ஒரு  வாரம் இரு வேளை  அருந்திவர  நீர் சுருக்கு  தீர்ந்துவிடும்