மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, May 21, 2015

கருப்பை புற்று நோய் மருந்து Ovarian Cancer medicine

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கருப்பை புற்று நோய் மருந்து   Ovarian Cancer medicine

    



பெண்கருவாய்ப் புற்றைப் பிழையில் சேங் கொட்டைத்தூள் ,
தண்சந்  தனம்தேற்றான் மாற்று      ......................குறள் 

விளக்கம் ;
பெண்களுக்கு கருப்பை வாயில் உண்டாகின்ற புற்று நோய்க்கு தேற்றான் 
விதையின் தூளும் ,சந்தனத்தூளும் ,சுத்தி செய்த சேராங்கொட்டை  தூளும் சமமாக எடுத்து இருநேரம் அருந்தி வரவும்,இவற்றின் கொதி நீர் கொண்டு வெளியே கழுவி வரவும் .

Monday, May 18, 2015

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு: Menstrual problems

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு Menstrual problems



நிலப்பனை,பறங்கிச் சக்கை இவற்றை அவித்து இருத்து குடி நீராக குடித்து வர நன்மை .


கருஞ்சீரகம் ,சதக்குப்பை ,பெருங்காயம் சம அளவு பொடியாக்கி பனை வெல்லம் இட்டு பாகாக்கி உணவு உண்பதற்கு முன் காலை ,மாலை மூன்று நாள் மட்டும் கொடுத்து வந்தால் ருது வாகாத பெண் ருதுவாக்கும் .
சீரான மாத விடாய் இல்லாதவர்களும் அருந்தினால் சீராகும் .



Friday, May 15, 2015

அமாவாசை யாகம்  17.05.2015 ஞாயிற்று கிழமை வைகாசி  மாதம்  




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்

17.05.2015 ஞாயிற்று கிழமை வைகாசி  மாதம்  அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்குஅபிஷகம்,ஆராதனை அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 17-05-2015 வைகாசி   மாத 

ஞாயிற்று  கிழமை  பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 9095102377///9095102695

Thursday, May 14, 2015

ஸ்ரீ தத்தாத்ரேயர் மகரிஷி

ஸ்ரீ தத்தாத்ரேயர்  மகரிஷி 

அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, தத்தாத்ரேயன் என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.
ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ஐயனே... உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே... உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்... என்று, கேட்டான். எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர்.
அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன்.
தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன்.
எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.
பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது.
ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன்.
வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.
உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன்.
தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.
உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்... என்று, அடுக்கிக் கொண்டே போனார்.
பார்த்தீர்களா... இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள்.
மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை இது


Wednesday, May 13, 2015

கடுக்காய் பயன்கள்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கடுக்காய் பயன்கள் 


கடுக்காயின் மேல் தோலை மட்டுமே பயன் படுத்த வேண்டும் .

கடுக்காய் தூளை நெய் சேர்த்து ஒரு சிட்டிகை காலை நேரம் உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும் .மூல உபாதை குறையும்

தேனில் கடுக்காய் தூளை குழைத்து அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் ,வாய் புண் ஆறும் .

இருதய நோய் உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து இரவில் தொடர்ந்து அருந்தி வந்தால் நோய் குறையும் ..



மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 
உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் மற்றும் பூஜை புகைபடங்கள்