மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, August 10, 2014

முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் அன்னதானம்

முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்
சிங்கம்புணரியில் அமைந்துள்ள முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் இன்று 10.08.2014 ஞாயிற்று கிழமை பௌர்ணமி புத்த புரனிமா இன்று இரவு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ,முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

Friday, August 8, 2014

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -பழனி செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
09-08-2014 சனி கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844

Thursday, August 7, 2014

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்





கடந்த 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்த நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சிறுவயது முதலே அறிவுக் கொழுந்தாக விளங்கியவர்.
சிறு வயதில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் இயற்பெயர் சிவராமன் லௌகீக வாழ்வை வெறுத்து கும்பகோணம் மடத்தில் தம்முடைய குரு பரம சிவேந்திர சரஸ்வதியை சந்திக்கிறார் ...குருவின் திருவடியில் சரண் அடைந்த சிவராமனுக்கு ஞான குரு மந்திர உபதேசம் செய்தார் ...சிவராமனின் மன உறுதியையும் ,பக்குவ நிலை அடைந்து விட்டதை குரு அறிந்து “”சதாசிவன்”” என்ற புதிய திருநாமம் வழங்கினார் .மேலும் திருமூலரின் பிரம்ம சூத்திரம் விளக்கும் தத்துவமசி என்ற நிலையை யோக நிஷ்டையில் அனுபவித்தார்
  மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் திருமூலர் கடைபிடித்த கடினமான சித்த யோக மார்க்கத்தின் வழிமுறைகள் மற்றும் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளை எல்லாம் சுய அனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் ஆவார்.. 

  வேதாந்த ,சித்தாந்தங்களுக்கெல்லாம் மணிமகுடமாக திகழும் மூன்று மகா வாக்கியங்கள் 1.தத்துவ மசி ..2.அகம் பிரம்மாஸ்மி 3.சர்வம் பிரம்ம மயம் -இந்த யோக நிஷ்டையின் உயர்ந்த மூன்று நிலைகளில் சதாசிவ பிரம்மேந்திராள் தேர்ந்தெடுத்த வழிமுறை என்பது சர்வம் பிரம்ம மயம் என்ற வழிமுறை ஆகும் ...
 கொடுமுடியில் ஆற்றில் மண் எடுக்க குழி வெட்டும்போது மண்வெட்டி ஒரு கடினமான பொருள் மீது பட்டு திடீரென இரத்தம் பீறிட்டு வர தோண்டி பார்க்கும் போது உள்ளே யோக நிஷ்டையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் இருந்திருக்கிறார் ...

அதே போல ...வைக்கோல் போர்வைக்குள் பல காலம் யோக நிஷ்டையில் இருந்து இருக்கிறார் ..


  ஒருமுறை குறுநில நவாப் ஒருவன் தன்னுடைய நகரத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் உடம்பில் எந்த ஆடையும் இன்றி நிர்வாண கோலத்தில் யாரையும் இலட்சியம் செய்யாமல் உலவி வரும் காட்சியை கண்டான்.. இதன் காரணத்தை அறிய வேண்டி பக்கத்தில் நிற்கும் படி உத்தரவும் இட்டான் ..சர்வ காலமும் பிரம்ம நிஷ்டையில் இருந்த சதாசிவ பிரம்மேந்திராளின் செவிகளில் அவன் கட்டளை விழவில்லை ..இதனால் கோபமுற்ற நவாப் அவமானம் அடைந்ததாக கருதி தன் வாளை உருவி ஒரு கையை வெட்டி வீ ழ்த்த ..கை துண்டாக தரையில் விழுந்தது ...ஆனால் இதை எல்லாம் சிறிதும் அலட்சியம் செய்யாமல் பிரம்மேந்திராள் வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தார்..பின்பு இவர் பெரிய மகான் என்பதை உணர்ந்த நவாப் வெட்டுண்ட கையை எடுத்து கொண்டு அவர் பின் ஓடிச்சென்று மன்னிப்பு கோர கையை வாங்கி தனது தொள்பட்டையில் வைக்க கை ஒட்டி கொண்டதாம் ...
  இவர் மூன்று இடங்களில் ஜீவசமாதி கொண்டுள்ளார் 1.ஸ்தூல சரீரத்தை கரூர்க்கு 12 கிலோ மிட்டர் தொலைவில் நெரூர் எனும் இடத்திலும் ..2.சூட்சும சரீரத்தை மானாமதுரையிலும், 3.காரண சரீரத்தை தற்போது பாகிஸ்தான் பகுதியான கராச்சியில் என மூன்று இடங்களில் சமாதி கொண்டுள்ளார் ..
  இங்கே படத்தில் காண்பது கரூர் அருகே உள்ள நெரூர் ஜீவசமாதி மிகவும் அருமையாக இருந்தது .கரூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .நெரூர் ""சதா சிவம் கோவில்""என்றே பேருந்து வசதி உள்ளது .ஒருமுறை சென்று வாருங்கள் ..மிகவும் அருமையாக உள்ளது ...
> நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்-அவர்களை ஆராதனை செய்து முக்தி பெற்ற அடியாரின் சமாதி அருகில் இருக்கும் ஆசிரமத்தில் உள்ளது…

 

சித்தர் போகர் ஜீவசமாதி - பழனி

சித்தர் போகர் ஜீவசமாதி - பழனி



  பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சித்தர் போகரின் ஜீவசமாதி.திருநந்தி தேவரே பல்வகை பிறப்புற்று பின் போகராக தோன்றினார் என்பர்.இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.தனது சீடர் புலிப்பாணி சித்தருடன் பழனி மலையில் மேல் தான் அமைத்த திருக்கோயிலின் கண் நவபாஷான கட்டினால் தண்டாயுதபாணி சுவாமியின் அருள் திருமேனியை நிறுவினார்.ஆண்டவன் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதபடுகிறது. இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம். இங்கு இன்றும் போகர் வழிபட்ட அருள்மிகு புவனேஸ்வரி அம்மை, மரகதலிங்கம் , வலம்புரி சங்கு ஆகியவற்றை காணலாம். இச்சன்னதியில் இருந்து தண்டாயுதபாணி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க பாதை உள்ளது. கடைசியாக இதன் வழியாக சென்ற போகர் திரும்பாமல் இதனுள் அமர்ந்துவிட்டார் என்பர் .

போகரை சமாதியில் வைத்தது அவரது சீடர்களில் ஒருவர் கோரக்க சித்தர் ...தன்னை பழனியில் சமாதி வைத்து நாகப்பட்டினம் செல்லுமாறு கோரக்கரை பணித்தார் போகர் ..பின்பு சமாதியில் இருந்து எழுந்து நாகப்பட்டினம் சென்று கோரக்கரை சமாதியில் வைத்தார் போகர் ..என சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன ..போகர் அருள் இருந்தால் மட்டுமே பழனிக்கு வரவும் முருகன் அருளும் கிடைக்கும்
பதினெண் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படும்
போகர் பெருமான் ககன குளிகையின் மூலம் விண்
வெளியில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.
 
 இவர் ஒருமுறை வெளிநாட்டிலுள்ள மூலிகைகளை 
ஆராய்ந்து அறிவதற்காக நாடு விட்டு நாடு பறந்து
சென்ற போகர் சீன தேசத்தில் இறங்கி ஆய்வுகள்
செய்யத் தொடங்கிய போது இவ்வுலகின் சாதாரண
மக்களைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அங்கேயே
வசிக்கத் தொடங்கி விட்டார்.இதனால் அவரிடமிருந்த அற்புத சக்திகளும்,ஆற்றல்களும்,ஒவ்வொன்றாய் மறைந்தது.போகருடைய சித்திகள் எல்லாம் சக்தி இழந்து போய்விட்டது.
 போகரிடம் சீடராக இருந்தவர்களில் "புலிப்பாணி"மிகவும்
விசுவாசத்துடன் பிரியமான சீடனாக இருந்து வந்தார்.
அதனால் அவருக்கு அனைத்து விதமான சித்துக்களையும்
கற்றுக்கொடுத்திருந்தார் போகர் பெருமான். தமது குருவிற்குத் தெரிந்த அனைத்து சித்துக்களும் தமக்கு கைவரப்பெற்ற பிறகும் கூட புலிப்பாணி தமது குருநாதரை விட்டுப் பிரியாமல் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்
டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில்
இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை
அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார்.

தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை
இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு
புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா
சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு
குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம்
வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று கூற புலிப்பாணி
ஆறுதல் பெற்றாலும்,தமது குருவை சீடனாக ஏற்க மனம்
தடுமாறுகின்றார்.

அப்போது போகர் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானின்
கதையைச் சொல்ல புலிப்பாணி ஆறுதல் அடைகின்றார்.பிறகு
இருவரும் ஒரு முடிவிற்கு வருகின்றனர்.அதன்படி ஒரு தண்டம்
ஒன்றை நிறுவி அதற்கு புலிப்பாணி அனைத்து கலைகளையும்
உபதேசிக்க அதன் அருகில் அமர்ந்து போகர் கேட்டு எல்லா வித
சித்துக்களும் மீண்டும் கைவரப்பெறுகிறார். அதன் பிறகு உலக மக்கள் அனைவரும் நோய்களில் இருந்து சுலபமாக நிவாரணம் பெரும் விதமாக "நவபாஷாண முருகன்" திரு உருவ சிலையை வடிக்கின்றார்.அதற்கு புலிப்பாணியின் மூலமாக தாம் சித்து நிலையை அடைந்ததை நினைவு கூறும் பொருட்டு தாம் அமைத்த நவபாஷாண விக்ரகத்திற்கு போகர் "தண்டாயுதபாணி"என்று பெயர் சூட்டினார்.இப் பெயரையே மக்களும் தங்களின் குழந்தைகளுக்கு முருகப் பெருமானின்
பெயராக சூட்டி மகிழ்கின்றனர்.

  போகருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து அங்கு செய்து வந்தார் .அவரது ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆஸ்ரம் என்று இன்றும் அந்த இடம் அவரது கருவழி பரம்பரையினர் வழிபட்டு வரப்படுகிறது .மேலும் புலிப்பாணி பரம்பரையினர் தான் இன்றும் பழனி மலையின் மேல் அமைந்துள்ள போகர் சமாதியில் பூஜைகள் செய்து வருகின்றனர் .

முருகப் பெருமானின் நவ பாஷாண திருமேனி ஆண்டிக்
கோலத்தில் தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது.

தண்டம் -கழி -கம்பு
ஆயுதம் -ஆயுதம் போல் உள்ளதால்
பாணி - புலிப்பாணி

போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம்
தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில்
பிரதிஷ்ட்டை செய்தார்.இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம்
செய்கின்ற விபூதி,சந்தனம்,பன்னீர்,தேன்,பஞ்சாமிர்தம்,சிலையின்
"நவபாஷாண கட்டு மருந்தின்"சத்தைப் பெற்று பிரசாதமாக
மாறுகின்றது.இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நாட்
பட்ட கொடிய நோய்களையும் போக்குகின்றது.

இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடியபிணிகளில்       இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண

திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால்
இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை.

இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்கலப்படமில்லா    (ஒரிஜினல்)பொருட்களைக் கொண்டு அபிஷேகம்
செய்யப்படுகின்றது.இப்போது

மூலவருக்கு :-நவ பாஷாண தண்டாயுதபாணி முருகனுக்கு

ஆறு கால பூசை -
பதினாறு வித அபிஷேகம் -
எட்டு வித வேடம் -
1-சாது,
2-சன்னியாசி,
3-வேடர்,
4-விருத்தர்,
5-சண்முகர்,
6-சுப்பிரமணியர்,
7-வேதியர்,
8-இராஜ அலங்காரம்,
என எட்டு வித அலங்காரம் செய்யப்படுகின்றது.

நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின்போது சந்தனக் கட்டையை அரைத்து சிரசில் வைத்து விடுவர்.

அதிகாலை "விழா பூசை"யின் போது "கவ்பீன தீர்த்தம்"மற்றும்சிரசில் வைத்த சந்தனமும் வழங்குவர்.இது ஒரு சிலருக்குமட்டுமே கிடைக்கும். இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்துதுன்பங்களும் நீங்கி,  சந்தோசமும்,மிகப்பெரிய
பொருளாதார  முன்னேற்றமும் பெறுகின்றனர்.
  

அன்னதானம் -அன்னதர்மம்ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்


 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

-சுவாமிஜி - மாதாஜி


 அன்னையின் பிரசாதமாக இங்கு தினதோறும் 24மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.   

   அன்னதானம் -அன்னதர்மம்



ஸ்ரீ அகஸ்திய மகரிஷி,கண்ணேறு,சாபம் ,பாவம் தோஷம் இவைகளுக்கு ஒரு மாமருந்தே அன்னதானம் -அன்னதர்மம் என்று விவரித்து கூறியுள்ளார் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது செய்யபடுகிறகின்ற அன்னதானமே -அன்னதர்மம் என்பதாகும்-அது மறைமுகமாக நன்மை
சார்ந்த தீயவைகளை விரட்டவல்லது .

அன்னதர்மம் மானாமதுரை வேதியரேந்தல் விளக்கு பஞ்சபூதேஸ்வரம் ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்யில் அன்னையின் பிரசாதமாக இங்கு 24மணி நேரமும்
வழங்கப்படுகிறது
யார் எதைக் கொண்டுவருகின்றனர்-யார் சமைகின்றனர் - யார் பரிமாறுகின்றனர்,என்பதிரியாது வண்ணம் அன்னையே நேடைரியாக வழிநடத்தி,
அற்புதமாய் அதிசயமாய் தொடர்த்து நடத்தி வரும் அன்னதர்மம் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.ஏழை -பணக்காரன் .அதிகாரி -ஊழியன் என்று
அனைத்தற்க்கும் அப்பாற்பட்டு,அனைவரும் சமமாக பாவிக்கும் பார்வைக்கு வித்திட்டு, அம்பளை ம ட்டுமே நினைக்கும்படி செய்து தன்னை மறந்து அன்னையிடம் லயிக்கும் நிலைக்கு அருள் பாலிக்கிறாள்.
அன்னதானம் -அன்னதர்மம் இலக்கணங்ககளை அம்பாள் உலகமெங்கும்
பரப்பிட மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்ட மைய சக்தி இடமாக கொண்டு மற்ற புனிதமானஇடங்கள்

1. விஜயாபதி ,---அனுஷம்  நட்சத்திரம்----ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி

2.இடைக்காடூர், ---திருவாதிரை நட்சத்திரம் ---ஸ்ரீ இடைகாடர்

3.காரைக்கால்,-----சுவாதி நட்சத்திரம்------ஸ்ரீ காரைக்கால் அம்மையார்

4.கரூர் -------பரணி நட்சத்திரம்------ ஸ்ரீ பாலசுப்ரமணி சாமிகள்

5.சிங்கம்புணரி,-----பௌனர்மி -----ஸ்ரீ முத்து  வடுகநாத ஸ்வாமிகள்

6.சென்னிமலை, -----உத்திரம் நட்சத்திரம் -------ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்

7.ஊதியூர்,-------உதித்ரடம் நட்சத்திரம் ----ஸ்ரீ கொங்கன சித்தர்

8.ஆவுடையார்கோவில்,------மகம்நட்சத்திரம் ------- ஸ்ரீ மாணிக்கவாசகர்

9.திருஈங்கோய்மலை,-------பரணி நட்சத்திரம்-------ஸ்ரீ போகர் சித்தர்( ஸ்ரீ அகஸ்திய மகரிஷி)

 10.பூவனூர்  ------ஆயில்யம் நட்சத்திரம்-------- ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ( ஸ்ரீ போகர் சித்தர்)

அழியாநிலை ம்ற்றும் பல பகுதிகளில் அன்னதர்மம் நடைபெருகிறது அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ ,பசியில்லா உலகம் செய்யும் இலக்கணங்கள் இங்கிறந்தே
புறப்படட்டும்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236 என்பது அம்பாளின் கருணையே.


Wednesday, August 6, 2014

ஸ்ரீ ராமதேவர் சித்தர்


ஸ்ரீ ராமதேவர் சித்தர் ஆடி புரம் அன்று நடை பெற்ற பூஜைகள்

சென்னிமலை ஆண்டவருக்கு 600 பால் குடம்

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

-சுவாமிஜி - மாதா
ஜி


சென்னிமலை ஆண்டவருக்கு 600

பால் குடம் எடுத்து சென்ற பக்தர்கள்