Saturday, July 25, 2015

வாழ்வில் இன்பம் அடைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வாழ்வில் இன்பம் அடைய 




வேலா சரணஞ் சரணமென் மேல்வெகு ளாமலினி
மேலா யினும் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க் கும் உபதேசித்தஎன் னாண்டவனே ...

--------------------------முருகர் அந்தாதி ------------------------------

முருகனிடம் உபதேசம் பெற்றவர்கள் மூவர்

தேவ தேவன் --சிவபெருமான் 
முனிசிரேஷ்டர் ---அகத்தியர்
நரசிரேஷ்டர் ------ அருணகிரிநாதர்


நக்கீரர்,கபிலர் ,இடைக்காடர் ,பொய்யாமொழி புலவர்,ஔவையார் ,சிகண்டி ,சிதம்பர ஸ்வாமிகள்,கச்சியப்பர் ,வசிட்டர் இவர்கள் முருகனின் அருள் பெற்றவர்கள் .
இராமயணத்தில் வரும் குகன் ராம பக்தன் ,இறுதியில் திருவடி பேறு அடைந்தது முருகனிடம் தான் .

உயிர் இந்த உடம்பில் இருக்கும் போதே இறைவனை வணங்கி பயனுடைய வேலைகளை செய்து வந்தால் ஆத்மா உடலை விட்டு நீங்கினாலும் கவலை பட வேண்டியதில்லை .தவம் செய்து இறைவழிபாட்டில் இருந்த உயிர் இறைவனை சென்றடையும் .இதுதான் பரமசுகம் .இதை பெற இப்போதே
முருகனை சேவித்து வணங்கி பயன் பெருக.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ,வேண்டமுழுதும் தருவோய் நீ
என்ற மணிவாசகரின் கூற்றுப்படி
குழந்தைக்கு வேண்டியதை தாய் தருவதை போல் ,நமக்கு வேண்டியதை இறைவன் தருவான் .
நிஷ்காமிய வழிபாடு தான் சிறந்தது .பலனை எதிர் பார்க்காமல் ஆண்டவனை வணங்க வேண்டும் .



No comments:

Post a Comment