Friday, September 12, 2014

சுகப்பிரசவம் அருளும் அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் (மலைக்கோட்டை)

அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் (மலைக்கோட்டை)திருச்சி 



தல வரலாறு


வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்கு போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இம்மலையில், மூன்று தலைகளுடைய "திரிசிரன்" என்னும் அசுரன், சிவனை வேண்டி தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.அசுரனின் பெயராலேயே, "திரிசிரநாதர்" என்று பெயர் பெற்றார். தலம் "திரிச்சிராமலை" என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.
 
தலச் சிறப்பு

பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.


 சுகப்பிரசவம் ஆன பின் வாழை பழ தார்ரோடு பூஜை சமர்பணம் அதிகளவில்  நடைபெறும் 
அருளு ம் 

No comments:

Post a Comment