Tuesday, January 31, 2017

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல புராணம்



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல  புராணம் 

பஞ்சபூதேஸ்வரம்- இராவணனோடு போரிட்ட ஸ்ரீ ராமபிரான் இந்த இடத்திற்கு வந்தபோது இது "வானரவீர மதுரை' என்றும்; சிவனின் அருளால் ஆஞ்சனேயர் தன் வானரப் படைகளுடன் தேன் பருகி இளைப்பாறுகை யில் திரேதாயுகத்தில் "கீசான மதுரை' என்றும்; வில்வவனக் காடுகள் சூழ்ந்திருந்ததால் கலியுகத்தில் "வில்வ வனம்' என்றும் கூறப்படுகிறது. மகரிஷி அகத்தியரும் அவரது மனைவி லோப முத்திரையும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசித்த இடமும், ஆஞ்சனேயர் ராமனுடன் இணைந்து இராவணனுடன் போரிடப் புறப்பட்ட இடமும், ராமன் சக்தியை நோக்கிப் பூஜை செய்த இடமும், பலராமனுக்கு சிவபூஜை பயிற்சி செய்வித்த இடமும் இதுவே ஆகும் என புராணங்களும், சிவவாக்கிய நாடி மற்றும் காகபுஜண்டர் நாடியும் தெரிவிக்கின் றன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் வேதியரேந்தல் விளக்கு என்னும் பகுதி யில் உள்ள இந்த பஞ்சபூதேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி. 2002-ல் ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருப்பணிகளைத் தொடங்கி, தற்போது ஆகம சிற்ப சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தெய்வ சங்கற்பமுள்ள கருங்கற்களால் அந்தக் கால மன்னர்கள் அமைத்ததுபோலவே, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய கற்கோவிலை இங்கே பிரத்யங்கிரா தேவிக்காக எழுப்பியிருக்கிறார்கள். இங்கே எழுந்தருளியிருக்கும் அம்பாளின் திருவுருவம் விஸ்வரூபிணியாக- அதேசமயம் சாந்த சொரூபிணியாக அமைந்திருக்கிறது. இங்கே பீடத்தில் பதினொன்றேகால் அடி உயரத்தில், மலர்ந்த தாமரையில், இருபது கரங்களுடன்- ஒரு கரம் ஆசி கூற, ஏனைய கரங்களில் பல்வேறு தத்துவங்கள் அடங்கிய ஆயுதங்களையும் கொண்டு விளங்குகிறாள் அன்னை. ஏழு தலை நாகம் குடைபிடிக்கும் வண்ணம் காணப்படுகிறது. இது மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யிலான மனிதனின் ஏழு சக்கரங்களை விளக்குவது என்பர். அன்னைக்குப் பின்னே நிற்கும் சிங்கத்தின் தலை இடப்புறமும், அதன் வலது கால் சற்று தூக்கிய வண்ணமும் அமையப் பெற்றிருக்கிறது. நவகிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் மண்டை ஓட்டு மாலையாக அணிந்து காட்சி தருகிறாள் தேவி. ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டி குருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஸ்ரீ மஹா வல்லப கணபதிக்கும் இங்கு ஆலயம் அமைத்து கடந்த 24-6-2010 அன்று இத்திருக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். தொடர்ந்து 25-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை ஸ்ரீ சகஸ்ரசண்டீ மகா யக்ஞமும் நடைபெற்றது. ""இந்த யாகம் மௌரியப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் செய்யப்பட்டது. சீமாற வல்லபன் காலத்திலும் செய்யப்பட்டது. அதன் பிறகு மைசூர் அரசர் காலத்திலும், காஞ்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் 1963-ஆம் ஆண்டிலும் நடந்தது. அதற்குப் பிறகு இப்படி ஒரு உயர்வான ஸ்ரீ சகஸ்ர சண்டீ மகா யக்ஞம், செய்முறைப் படி ஐந்து தினங்களும் சாதனையாக நடந்தேறியது இத்தலத்தில்தான். மேலும் இக்கோவிலைச் சுற்றிலும் தசமகா வித்யா, ஸ்ரீ விஜய ஆகர் ஷண பைரவர், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ சப்த ரிஷிகள் மற்றும் 18 சித்தர் களுக்கும் ஆலயங்களை அமைக்க விருக்கிறோம்'' என்றார் இக்கோவிலின் அறங்காவலரான ஸ்ரீ ஞானசேகர ஸ்வாமிகள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட மகா கும்பாபிஷேகத்தின்போது நம்மிடம் பேசிய வித்யா என்பவர், ""இந்தக் கோவிலில் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படு பவர்கள் இங்கே கால் வைக்க முடியாது. அற்புதமான இம்மகா சக்தியின் அருளைப் பெறவே கோவையிலிருந்து வந்திருக்கிறேன்'' என்றார். ""எல்லாநாட்களிலும் எந்த நேரத்திலும் அன்னதானம் நடக்கும் கோவில் இது. இங்கே ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடோ சாதி வேறுபாடோ கொஞ்சமும் கிடையாது. தனிமனிதனைத் துதிப்பது, மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டுவது, பாதகாணிக்கை செலுத்துவது போன்ற காரியங்கள் இங்கே அறவே கிடையாது. உலக அமைதிக்காக அமாவாசை தோறும் யாகமும் பௌர்ணமி நாட்களில் விளக்குப் பூஜையும் தவறாமல் இங்கு நடக்கிறது'' என்றார். ஸ்ரீ பிரத்யங்கிரா என்பவள் ஸ்ரீ மகா பத்திரகாளியேதான். பத்ரம் என்றால் மங்களம். அன்பர்களுக்கு மங்களத்தையே செய்யும் தேவியான இவள் அதர்வண வேதத்தின்படி அதர்வண பத்ரகாளி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவி பாவங்களை நீக்கக் கூடியவள். ஆங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் என்ற மகரிஷிகள் இவளது மந்திரங்களை உணர்ந்து வெளிப்படுத்தியதனாலேயே பிரத்யங்கிரா என்ற பெயரில் பூஜிக்கப்படுகிறாள். இராவணனை அழிக்க ஸ்ரீ ராமபிரானே வழிபட்ட சக்தி இவள். இரண்யகசிபுவை வதம் செய்ய, நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணிக்க சரபமூர்த்தியான சிவபெருமானுக்கு உதவியவள். பஞ்சமுகத்துடன் நடனமிடும் சக்தி இவள் என தேவியின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது இக்கோவில்.


ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் மானமதுரை அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில் ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா நலன்களை அருள்வாள் .இந்த கோவில மண்ணை மிதித்து அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூரியனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன "எந்தளவு ஏற்றம் மூலம் செழிப்பு வாழ்க்கை கொடுக்க உச்ச தெய்வம் இந்த ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி

அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236


Tuesday, January 24, 2017

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அன்னதானம்



ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  

27-01-2017 தை 14 மாத வெள்ளி கிழமை   உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்



திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

அமாவாசை யாகம் 27.01.2017 வெள்ளி கிழமை தை மாதம் 14





மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம் மாதம்தோறும்  நடைபெறுகிறது 

உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 
27.01.2017 வெள்ளி  கிழமை தை  மாதம்14 அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Sunday, January 22, 2017

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள 
ஸ்ரீ ஓமகுண்டகணபதி , ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்  
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 
23.01.2017 தை  10 மாத திங்கட் கிழமை  
அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,  ஆராதனை, அன்னர்மம்  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்  
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி 
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி cell : 8754016236

9843016651
9842078733

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Friday, January 20, 2017

ஸ்ரீ ஷீரடி சாய் நாதன் சனாதன தர்ம பீடம் (திருச்சி -மதுரை இடையில் ) கொட்டாம்பட்டி ஸ்ரீ ஆனந்த ஐஸ்வர்ய லட்சுமி சாய் நாதன்க்கு பூமி பூஜை










 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலின் அங்கமான

ஸ்ரீ ஷீரடி சாய் நாதன் சனாதன தர்ம பீடம் (திருச்சி -மதுரை இடையில்)

கொட்டாம்பட்டி பெருவழிச்சாலையில். கொட்டாம்பட்டியில் ஸ்ரீ ஆனந்த ஐஸ்வர்ய லட்சுமி சாய் நாதன்க்கு பூமி பூஜை

21-01-2017 தை மாதம் 8 சனிகிழமை காலை 10.30 மணியிருந்து 12.00மணிக்குள் தஞ்சை குருஜி ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் தலைமையில்

நடைபெறுகிறது.அனைவரும் கலந்து கொள்ள

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

இடம்-கொட்டாம்பட்டி

பெருவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கரடிகுட்டு கருப்பண சுவாமி கோவில் பின்புறம் .மேலூர் அருகில். தொடர்புக்கு..9842858236.



Thursday, January 19, 2017

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 19-01-2017 தை (6) மாதம்
வியாழ கிழமை காலை 9.00 -11.00மணிக்கு  ஆவரணபூஜை 
மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு    தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

cell : +91 98428 58236

Monday, January 16, 2017

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்



சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம் 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும்  அடிவாரத்தில் ஸ்ரீ  ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு  17.01.2017 செவ்வாய்  கிழமை தை மாதம்(04)
உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் 
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்  சார்பாக  
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

மேலும் தகவல்கள்களுக்கு 

திரு .அண்ணாமலை cell :94425 59844

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236

Saturday, January 14, 2017

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு பூரம் நட்சத்திர பூஜை அழகர் கோவில் மலை மேல்



ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல்  பூரம் நட்சத்திர அபிஷேகம் 16.01.2017 தை    மாத (03)திங்கட் கிழமை   அன்று ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அபிஷேகம், ஆராதனைகள் பூஜை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமதேவர் சித்தர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்


புறப்படும் நேரம்:அதிகாலை 5 .31 க்கு மணி புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.மதுரை

Thursday, January 12, 2017

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும்           
ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 
15-01-2017 தை(2) மாதம் ஞாயிற்று கிழமை  காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில்   ,அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
திரு .மு.நாகராஜன் cell :94430 07479

மானாமதுரை சுவாமிஜி - மாதாஜி சார்பாக அனைவருக்கும் இனிய போகி பண்டிகை , பொங்கல் , மற்றும் மாட்டு பொங்கல்திருவிழா நல்வாழ்த்துக்கள்





ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி கோவில்
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்  சார்பாக 


மானாமதுரை சுவாமிஜி - மாதாஜி சார்பாக அனைவருக்கும் இனிய போகி பண்டிகை , பொங்கல் , மற்றும் மாட்டு பொங்கல்திருவிழா நல்வாழ்த்துக்கள்

Wednesday, January 11, 2017

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்



மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர   பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி  ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்  
14-01-2017 தை (01) மாதம் சனி கிழமை
 ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து  அபிஷகம், ஆராதனை,அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் 
ற்றும்  திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :85250 56537


மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட 
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது 

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை









அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர  பூஜை    அபிஷகம், அலங்காரம் , ஆராதனை அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 13-01-2017 மார்கழிமாதம்  (29) வெள்ளி  கிழமை(அத்ரி மலையில் மட்டும் )
  ஆயில்யம் நட்சத்திர   தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , வெள்ளி ஆராதனைஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்


மேலும் தகவல்கள்களுக்கு

cell :9842078733
9043942091,
9843016651


மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட

சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது 

Monday, January 9, 2017

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்


சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்
11-01-2017 மார்கழி  (27) மாத புதன் கிழமை   பௌர்ணமி அன்று இரவு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :9787521143 ,98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்













அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

11-01-2017 மார்கழி  (27) மாத புதன் கிழமை   

 காலை 10.00 மணிக்கு மேல்    பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்

காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Friday, January 6, 2017

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம்






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 08-01-2017 மார்கழி (24) மாத ஞாயிற்று  கிழமை  
பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+9842858236