Thursday, June 23, 2016

கந்தர் அந்தாதி






திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,

திதி - திருநடனத்தால் காக்கின்ற

தாதை - பரமசிவனும்

தாத - பிரமனும்

துத்தி - படப்பொறியினையுடைய

தத்தி - பாம்பினுடைய

தா - இடத்தையும்

தித - நிலைபெற்று

தத்து - ததும்புகின்ற

அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி - தயிரானது

தித்தித்ததே - தித்திக்கின்றதென்று

து - உண்ட கண்ணனும்

துதித்து - துதி செய்து வணங்குகின்ற

இதத்து - பேரின்ப சொரூபியான

ஆதி - முதல்வனே!

தத்தத்து - தந்தத்தையுடைய

அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத - தொண்டனே!

தீதே - தீமையே

துதை - நெருங்கிய

தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து - மரணத்தோடும்

உதி - ஜனனத்தோடும்

தத்தும் - பல தத்துக்களோடும்

அத்து - இசைவுற்றதுமான

அத்தி - எலும்புகளை மூடிய

தித்தி - பையாகிய இவ்வுடல்

தீ - அக்கினியினால்

தீ - தகிக்கப்படுகின்ற

திதி - அந்நாளிலே

துதி - உன்னைத் துதிக்கும்

தீ - புத்தி

தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. எனவே உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment