Saturday, June 18, 2016

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 512 ம் ஆண் டு தேரோட்டம்







திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 512 

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 512ம் ஆண் டு தேரோட்டம் ஆனி (5)மாதம் 19.06.2016 (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இதையொட்டி நெல்லை நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.



தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், சப்பர வீதி உலாக்களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

8-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தியும், பின்னர் பச்சை சாத்தியும் உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது.

இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பருவத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா சென்று தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது

நெல்லையப்பர் சுவாமி தேர், தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேர் 28 அடி நீளமும், 28 அடி அகலமும், 450 டன் எடையும் கொண்டதாகும். கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கென 5 தேர்கள் உள்ளன.

ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 19.06.2106(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கிறார்கள். காலை 8.06 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள். தேரோட்டத்தையொட்டி 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர்,
3-வது சுவாமி நெல்லையப்பர் தேர், அதன் பின்பு காந்திமதி அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் ஓடும்.


ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் கண்ணதாசன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள். 512ம் ஆண் டு தேரோட்டம்

No comments:

Post a Comment