Tuesday, May 31, 2016

கீழா நெல்லி மூலிகை ஒன்று பயன் பல


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கீழா நெல்லி இதன்  வேறு  பெயர்கள்  ----இளஞ்சியம் ,அவகதவாய் ,மாலினி,காமாலை நிவர்த்தி .கீழா நெல்லி

மூலிகை ஒன்று பயன் பல கீழா நெல்லி

மஞ்சள் காமாலை நோய்க்கு கண் கண்டமருந்து  :--

கீழா நெல்லி இலை ,தும்பை இலை , மஞ்சள் கரிசலாங் கண்ணி  இலை சம  அளவு  எடுத்து அரைத்து சுண்டைகாய் அளவு  ஒரு டம்ளர்  பசும் பாலில்  கலந்து  இரு வேளை  குடித்து வர நாள் பட்ட மஞ்சள் காமாலை  நோய்
தீரும் .

கல்லீரல்  நோய்க்கு :

கீழா நெல்லியை  வைத்து  சிறிது சீரகம்  சேர்த்து அரைத்து  சுண்டைகாய்  அளவு  எலுமிச்சை  பழ  சாற்றில்  சேர்த்து  பருகி வர  கல்லீரல்  கோளாறு  குணமாகும் ..

நீர் சுருக்கு  தீர :--

கீழா நெல்லி  இலை யை  டைமண்ட்  கல்கண்டு  வைத்து  மை  போல் அரைத்து  ஒரு  வாரம் இரு வேளை  அருந்திவர  நீர் சுருக்கு  தீர்ந்துவிடும்

No comments:

Post a Comment