Thursday, January 14, 2016

ஆயிரம் நோய்க்கு ஒரே மருந்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி கும்பாபிசேகம்




ஆயிரம் நோய்க்கு ஒரே மருந்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி கும்பாபிசேகம் 


கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக குழந்தை  பாக்கியம் 
     ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம்தமிழகம்தான்.
வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில்


கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு.

எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார். கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிஉச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார்
அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது
திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :-

இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம்.

இத்திருத்தலத்தில் உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார்.

வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி) ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத் தோஷங்கள் யாவும் நீங்கும்.

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம் இது மட்டுமே.

இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வழிபாட்டின் பயன்கள் :-

திருமணத்தடை நீங்கும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும்.
பல ஜோதிடர்கள் பரிகார ஸ்தலமாக இவ்வாலய தரிசனத்தைப் பரிந்துரைப்பதால் பல அன்பர்கள் நாடெங்கிலும் இருந்து வந்து கிரக தோஷங்கள் நீங்கிப் பலன் பெற்று வருகின்றனர்.

இவ்வாலயத்தில் ராஜகோபுரம் எழுப்பும் திருப்பணி பல நல்ல உள்ளங்களின் உதவியினாலும்
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி அருளாலும் இனிதே நிறைவடைந்துள்ளது.ஏனைய திருப்பணிகளை விரைவாக நிறைவு செய்து கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், திருப்பராய்த்துறை துணைத்தலைவரும் திருநெல்வேலி சாரதா கல்லூரியின் தாளாளருமான ஸ்ரீ மத் சுவாமி சங்கரானந்தா அவர்களை புரவலராகக் கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் (Regd) அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோவில் கோபுரம்,சுற்றுச்சுவர் மற்றும் ஆலய நிர்மாணம் தொடர்பான எந்த சிறிய பெரிய திருப்பணி புரிபவர்களும் முன்னே அவற்றைச் செய்தவர்கள் பெற்ற புண்ணியத்தைப் போல் நான்கு மடங்கு அதிகமாக புண்ணியம் பெறுவார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புகள் கொண்ட இவ்வாலயத் திருப்பணிக்கு தாங்கள் மனநிறைவோடு தாராளமாக நிதி வழங்கி
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிபெருமானின் அருளால் எல்லா வளங்களையும் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்க்காணும் வங்கி கணக்கில் தங்களின் நன்கொடையை நேரடியாகவும் செலுத்தலாம்.

கனரா வங்கி,திருநெல்வேலி ஜங்ஷன்
A/C NO:1119101044777
ஆலயத்திற்கு வரும் வழி :-

ரயிலில் வருபவர்கள் :-

திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது.
பஸ்ஸில் வருபவர்கள் :-
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .
காரில் வருபவர்கள் :-
மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வடக்கே இருந்து வருபவர்கள் சங்கர்நகர் தாண்டி 5 கிலோ மீட்டரில் தச்சநல்லூர் பைபாஸ் வரும் அதில் இருந்து கன்யாகுமரி சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுப் பாலத்துக்கு சிறிது முன்னால் இடது புறம் வழிகாட்டும் பலகை இருக்கும் அந்த வழியில் வரவும்.
இறைப்பணியில்
உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் (Regd)
67,மதுரை ரோடு,திருநெல்வேலி 627001
தலைவர்
திரு.K.V.ராஜேந்திரன்
cell :9443735777
செயலாளர்
திரு.M.ஜெயப்ரகாஷ்
cell: 9443774000
பொருளாளர்
திரு.A.நடேசன்
cell:9865345458
திரு.A.வித்யாசேகர்
cell: 9842109113

No comments:

Post a Comment