Sunday, January 31, 2016

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 03.02.2016 தை 
20 மாத புதன் கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : :9842078733
9043942091,
9843016651

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!






Friday, January 29, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 31-01-2016 தேதி தை  (17) மாதம் ஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

cell : +91 98428 58236

Tuesday, January 26, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 27-01-2016 தை  (13)மாத புதன் கிழமை  சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ளஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , 
ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு  28-01-2016 தை(14)மாத வியாழகிழமை
    உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ,ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :94425 59844
98428-58236

Sunday, January 24, 2016

பூரம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்

 ஸ்ரீ ராமதேவர்  சித்தர்க்கு அபிஷேகம்ஆராதனைகள் 


தை மாதம்13ம் நாள் (27.01.2016 15ம் நாள் புதன்கிழமை பூரம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அபிஷேகம்ஆராதனைகள் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமதேவர் சித்தர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்

புறப்படும் நேரம் : அதிகாலை 5 .30மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்
.மதுரை 

தெய்வத்தின் அருள்



தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும்.

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.

* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும்.


* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான்.

* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு.

* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம்.

* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.

ஆதி சித்தன்

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு அபிஷகம், ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 

26-01-2016 தேதி தை  (16) மாதம் செவ்வாய்   கிழமை  காலை 10.00மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007

Friday, January 22, 2016

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி  ,அருபமான ஸ்ரீ போகர்
மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்  25-01-2016 தை (11) மாதம் திங்கட் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை குரு பூஜை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் அன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 23.01.2016 தை  மாதம் (9) சனிக்கிழமை பௌர்ணமி அன்று  இரவுஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :9787521143 ,98428 58236

Wednesday, January 20, 2016

பிரதோஷ விரத மகிமை

  பிரதோஷம்






பிரதோஷ விரத மகிமை 21-01-2016 தை  7 மாதம்    அன்று வியாழக்கிழமை    பிரதோஷம் 

தோன்றிய வரலாறு- வீதி வலம் வரும் முறை.சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று.

பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷம் பிறந்த கதை!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே,

சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்


மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - பல வளமும் உண்டாகும்

நெய் - முக்தி பேறு கிடைக்கும்

சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்

ஞாயிறு:-மலர்-செந்தாமரை

இலை-வில்வம்

நைவேத்தியம்-பாயாசம்

திங்கள்:- மலர்-வெள்ளை நிற மலர்கள்

இலை-அரளி

நைவேத்தியம்- வெண்பொங்கல்

செவ்வாய்:- மலர்-சிவப்பு நிற மலர்கள்

இலை-விளா இலை

நைவேத்தியம்-எள் அன்னம்

புதன்:- மலர்-தாமரை

இலை-மாதுளை

நைவேத்தியம்- சர்க்கரை பொங்கல்

வியாழன்:- மலர்-குவளை

இலை-நாயுருவி

நைவேத்தியம்-தயிர்சாதம்

வெள்ளி:- மலர்-வெண் தாமரை

இலை-நாவல் இலை

நைவேத்தியம்-சுத்த அன்னம்

சனி:- மலர்-நிலோற்பவம்

இலை-விஷணுகிரந்தி

நைவேத்தியம்-உளுந்து அன்னம்


பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

 மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

23.01.2016 தை  மாதம் (9) சனி கிழமை பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை

மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை   நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Friday, January 15, 2016

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 18-01-2016 தை  4 மாத திங்கட்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக் கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+91 909510237

Thursday, January 14, 2016

ஆயிரம் நோய்க்கு ஒரே மருந்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி கும்பாபிசேகம்




ஆயிரம் நோய்க்கு ஒரே மருந்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி கும்பாபிசேகம் 


கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக குழந்தை  பாக்கியம் 
     ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம்தமிழகம்தான்.
வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில்


கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு.

எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார். கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிஉச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார்
அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது
திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :-

இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம்.

இத்திருத்தலத்தில் உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார்.

வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி) ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத் தோஷங்கள் யாவும் நீங்கும்.

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம் இது மட்டுமே.

இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வழிபாட்டின் பயன்கள் :-

திருமணத்தடை நீங்கும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும்.
பல ஜோதிடர்கள் பரிகார ஸ்தலமாக இவ்வாலய தரிசனத்தைப் பரிந்துரைப்பதால் பல அன்பர்கள் நாடெங்கிலும் இருந்து வந்து கிரக தோஷங்கள் நீங்கிப் பலன் பெற்று வருகின்றனர்.

இவ்வாலயத்தில் ராஜகோபுரம் எழுப்பும் திருப்பணி பல நல்ல உள்ளங்களின் உதவியினாலும்
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி அருளாலும் இனிதே நிறைவடைந்துள்ளது.ஏனைய திருப்பணிகளை விரைவாக நிறைவு செய்து கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், திருப்பராய்த்துறை துணைத்தலைவரும் திருநெல்வேலி சாரதா கல்லூரியின் தாளாளருமான ஸ்ரீ மத் சுவாமி சங்கரானந்தா அவர்களை புரவலராகக் கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் (Regd) அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோவில் கோபுரம்,சுற்றுச்சுவர் மற்றும் ஆலய நிர்மாணம் தொடர்பான எந்த சிறிய பெரிய திருப்பணி புரிபவர்களும் முன்னே அவற்றைச் செய்தவர்கள் பெற்ற புண்ணியத்தைப் போல் நான்கு மடங்கு அதிகமாக புண்ணியம் பெறுவார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புகள் கொண்ட இவ்வாலயத் திருப்பணிக்கு தாங்கள் மனநிறைவோடு தாராளமாக நிதி வழங்கி
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிபெருமானின் அருளால் எல்லா வளங்களையும் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்க்காணும் வங்கி கணக்கில் தங்களின் நன்கொடையை நேரடியாகவும் செலுத்தலாம்.

கனரா வங்கி,திருநெல்வேலி ஜங்ஷன்
A/C NO:1119101044777
ஆலயத்திற்கு வரும் வழி :-

ரயிலில் வருபவர்கள் :-

திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது.
பஸ்ஸில் வருபவர்கள் :-
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .
காரில் வருபவர்கள் :-
மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வடக்கே இருந்து வருபவர்கள் சங்கர்நகர் தாண்டி 5 கிலோ மீட்டரில் தச்சநல்லூர் பைபாஸ் வரும் அதில் இருந்து கன்யாகுமரி சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுப் பாலத்துக்கு சிறிது முன்னால் இடது புறம் வழிகாட்டும் பலகை இருக்கும் அந்த வழியில் வரவும்.
இறைப்பணியில்
உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் (Regd)
67,மதுரை ரோடு,திருநெல்வேலி 627001
தலைவர்
திரு.K.V.ராஜேந்திரன்
cell :9443735777
செயலாளர்
திரு.M.ஜெயப்ரகாஷ்
cell: 9443774000
பொருளாளர்
திரு.A.நடேசன்
cell:9865345458
திரு.A.வித்யாசேகர்
cell: 9842109113

Wednesday, January 13, 2016

ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி

ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி



ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று.
கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்”
என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம்.மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?”
என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”
என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார். “குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள்.
உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார்.
மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: "பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர்.
திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலையில்  " இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார்.
பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்." "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர்.
இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"
சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன். "அது என்னுடைய தாத்தா! மேலே ஏறிப் பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கி நாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார், இதுவே சரியான வழி! அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.
"அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று. குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார்.
காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள்.
பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.
மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் ‘ஹிரண்யகர்பர்’. அதை சூத்திரங்களாக்கிவைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர்.
இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்வர்.
தந்தை: அத்திரி முனிவர்.
தாய்: கோணிகா.
வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் ‘ஆத்திரேயர்’, கோணிகாவின் பிள்ளையென்பதால் ‘கோணிகாபுத்திரர்’.
இவர் எழுதிய மூன்று நூல்கள்:
யோகத்தினை விளக்கும் ‘யோக சாஸ்திரம்’,
மொழி இலக்கணமான ‘மஹாபாஷ்யம்’,
ஆயுர் வேத்மாகிய ‘சரகம்’ என்ற ‘ஆத்திரேய சம்ஹிதை’.
ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்
ஓம் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி திருவடியே போற்றி போற்றி ! !

பர்வத மலை அதிசயங்கள்

பர்வத மலை அதிசயங்கள்.


பர்வதகிரி என்றும் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படும் இந்த மலை திருவண்ணாமலையிலிருந்து 37 கி.மீ. தூரத்திலும், போளூரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும் உள்ளது. செங்கம் செல்லும் சாலையில் தென்மாதி மங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் மலையை நோக்கிப் பயணித்தால் முதலில் வருவது பச்சையம்மன் கோவில். சப்த முனிகள் கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி நம் கண்களையும் மனதையும் நிறைக்கின்றது. பச்சையம்மன் ஆலயத்தின் உள்ளே சென்றால் மிகுந்த தேஜஸோடு பச்சை நிறத்தில் பச்சையம்மன் காட்சி தருகிறார். வனச்சரக சோதனைச் சாவடியைத் தாண்டி உள்ளே நடந்தால் முதலில் வருவது பஞ்சமுக ஆஞ்சனேயர், ஒரு கையில் கதையும், இன்னொரு கையில் சஞ்சீவி மலையும் ஏந்திய வண்ணம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார்.
நாம் வீரபத்திர சுவாமி ஆலயத்தை அடைகிறோம். பெரிய கண்களும் கையில் வாளுமாக வீரபத்திரர் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் பின்பகுதியில் நடந்து சென்றால் அங்கே தென்படுகிறது ரேணுகா பரமேஸ்வரி ஆலயமும் ஆகாச கங்கையும். திவ்ய சொரூபிணியான ரேணுகா பரமேஸ்வரி சகல பிணிதீர்க்கும் தீர்த்தக் குளமான ஆகாச கங்கையின் குளக்கரையிலேயே அமர்ந்திருக்கின்றார். சிறிது தூரத்தில் வனதுர்க்கையையும் ஜகதீசரையும் காண முடிகிறது. தொடர்ந்து நடந்தால் மலையேறுவதற்கான முதல் படி வருகிறது. அங்கே கணநாதரையும் சிவலிங்கத்தையும் தரிசிக்கலாம்.
'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 'ஓம் நமசிவாய' என்ற கோஷங்கள் மலையில் எதிரொலித்தவாறு ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து மலையை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கின்றன.
படிகளில் நடக்கும்போது ஏற்படும் சிரமம் நாம் இறைவனை தரிசிக்கப் போகிறோம் என்ற நினைவு வந்ததும் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது. இங்கே விசேஷம் என்னவென்றால் நமது கைகளால் நாமே இறைவனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்யலாம்.
சிறிது தூரம் சென்றதும் சித்தர்கள் அமைத்து வழிபட்ட நாகலிங்க மணி மண்டபம் சிதிலமடைந்திருந்தாலும் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வெளிச்சம் இல்லாத நிலையிலும் அந்த மண்டபத்தின் உன்னதம் நமக்குத் தெரிகிறது. அங்கிருந்த பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ள பாதை மிக வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
மிக மிக முக்கியமான இடம் வந்துவிட்டது. மிகவும் செங்குத்தான 700 அடி உயரமுள்ள மலையின் துவக்கம். மலையில் ஏற ஏதுவாகப் பழங்கால முறைப்படி மலையில் துளை இட்டு கடப்பாரையை அதில் நுழைத்து மூலிகை ரசம் கொண்டு இறுக்கமாக்கி எந்த நிலையிலும் வெளியே வந்துவிடாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முகப்பில் உள்ள வீரபத்திரர், காளி சிலைகளுக்குக் கற்பூரம் ஏற்றி வழிபட்டபின் கடப்பாரைகளாலான படியில் ஏறுகிறோம். அதன் பின்னர் ஏணிப் படியும், ஆகாயப் படியும் வருகின்றன. இரண்டு மலைகளை இணைக்கும் ஆகாயப்படி மிகவும் ஆபத்தானது.
மண்டபத்தில் நுழைந்து மேலே சென்றால் இடது பக்கம் சித்தர் குகையும் ஆசிரமமும் தென்படுகின்றன. வலதுபுறம் நாம் வெகுநேர ஆவலுடன் எதிர்பார்த்து நடந்து வந்த ஸ்ரீபிரம்மராம்பிகை சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி சன்னதி வந்துவிட்டது. அதைக் கடந்து சென்றால் திருக்குளம். மழை தவிர வேறு எந்த நீர் ஆதாரமும் இந்த மலையில் இல்லை.
கோவிலின் உள்ளே நுழைகிறோம். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், வீரபத்திரர், காளி ஆகியோர் வரிசையாக அமைந்துள்ளனர். அவர்களை முறையாகப் பூஜித்துவிட்டு ஈசான்ய மூலையில் அமைந்துள்ள போகர் மற்றும் அகத்தியரை வணங்குகிறோம்.
அதன் பின் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியும் ஆகாயத்தில் இருந்துகொண்டு அடியவரை ரட்சிக்கின்ற அன்னையாம் பிரம்மராம்பிகையும்… ஆஹா! பார்க்கப் பார்க்க ஆனந்தம். அன்னைக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்த பின் இந்த அகிலத்தையே ஆட்டுவிக்கின்ற நாயகனாம் ஸ்ரீமல்லிகார்ஜுனரைப் பார்க்கின்றோம்.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், ஓங்காரத்தின் முழுவடிவம், திவ்ய சொரூபிணியானான ஐயன் எம்பெருமான் நடு நாயகமாக நந்தியம் பெருமான் முன்னிலையில் அமைதியாக, பரப்பிரம்மமாக, மேலே ஜலதாரையுடன் வீற்றிருக்கின்றார்.
கண்களில் நீர் மல்க, உடல் சிலிர்க்க இறைவனைக் குளிர்விக்க எடுத்துச் சென்ற அபிஷேகத் திரவியம் மற்றும் பூஜைப் பொருட்களை எல்லாம் கொண்டு பூஜிக்க ஆரம்பித்தோம்.
ஒவ்வொரு அபிஷேகத்தின் முடிவில் அலங்காரமும் ஆராதனையும் செய்யும்போது ஓம் நமசிவாய கோஷம் விண்ணைப் பிளந்து நமது எண்ணமெல்லாம் நிறைந்து சிவானுபவம் எங்கும் பரிபூர்ணமாய் விளங்கியது. சிவ நாமம், சிவ ஸ்தோத்திரம் மற்றும் பாடல்களுடன் பூஜையை நிறைவு செய்தோம்.
மனமும் உடலும் லேசாக இறைவன் அனுபூதியை ரசித்து, உணர்ந்து மகிழ்ந்து ஆனந்தம் அடைந்து சிறிது நேரம் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்தோம். அப்போதும் தென்னாடுடைய சிவனே போற்றி! ஓம் நமசிவாய! என்கிற கோஷங்கள் நமது காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.

திருக்குறிப்புநாயனார்

திருக்குறிப்புநாயனார்


திருக்குறிப்புநாயனார்.
சித்திரைச் சுவாதி – ஏகாலியர் – தொண்டை நாடு – காஞ்சிபுரம் – கி.பி. 660 – கி.பி. 840
உமை நங்கை உளங்களித்து பூசித்த ஓர் நகரே காஞ்சி அம்மை தழுவக் குழைந்த பெருமானின் அருள் மிகவே முப்பத்திரண்டு வித அறங்கள் ஆற்றிய சிறப்புமிக்க இந்நகரிலே வண்ணார் திருக்குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பார்.
அடியவர்கள் அணியும் துணிகளை குறிப்பறிந்து வாங்கி, அதை அழுக்கு நீக்கி வெளுத்துக் கொடுக்கும் அதீதப் பணியில் தன்னை ஈடுபடுத்தி இன்பமுற்று ஈடறு செயல் செய்வார். அடியவர் குறிப்பறிந்து அவர்கட்குப் பணி செய்ததால் இவரது பெயரும் திருக்குறிப்பார் என்று ஆயிற்று.
இவரது சிறப்பினை உலகம் அறிய, இறைவன் முடிவு கொண்டு, காஞ்சியின் தெருக்களில் நடந்து, இவர் முன் நிற்கின்றான். மாசானப் பெருமாளும், மாசான கந்தை சுற்றி மாசிலா அடியர் முன் வருவார். கந்தையின் அழுக்கை நோக்கும் நம் நாயனாரும், வந்தவரை வேண்டி, அவரது துணியை தோய்த்துத் தந்திடுவேன் தருக என வேண்டுவர். வந்த பெருமானோ, ‘ஐய, எனக்கிருப்பதோ இந்த ஒரு கந்தைதான். தருவதற்கு அட்டியில்லை. குளிர் இரவு வருமுன்னே, இதை வெளுத்து உலர்த்தித் தரமுடிந்தால் நன்று. இல்லையேல் வயதான நான், குளிரால் வருந்தும் நிலை வந்துவிடும். முடியும் என்றால் எடுத்துச் செல்லும்’ என்பார்.
திருக்குறிப்பாரும் மிஞ்சிய ஆவலில் முடியும் எனக் கூறிக் கந்தையை வாங்கிச் சென்று, நல்லதோர் திருக்குளத்தில் அழுக்கு நீங்க உவர் மண் தோய்த்துத் துவைத்துக் கசக்குவார். ஓரளவு நீங்கிய அழுக்கில் மனம் ஒப்பாத நாயனாரும், வெள்ளாவில் வைத்து நன்கு சுத்தமாக்க முனைந்து பின் துவைக்க அழுக்கு முற்றும் நீங்கி விடும். இத்துணியை உலர்த்தக் கொடியில் இட, வானம் கருத்து இடி இடித்து நெடிய மழை வரும். ஆடையை அதிகமாக நனைக்கும். மாலை நேர மழையை எண்ணி திருக்குறிப்பார் மிகவும் மனம் உளைவார். சொன்ன உறுதிப்படி துணியை வெளுத்து உலர்த்தித் திருப்பித்தர இயலவில்லையே. அடியவர் குளிரில் வருந்துவாரே! எப்படி அவர் முகத்தில் விழிப்பது? தனது வாழ்வில் இது நாள் வரை இப்படிப்பட்ட இடரைச் சந்தித்ததில்லை. ஏன் இந்தச் சோதனை. எண்ணி உருகுவார். மாற்று நிலை அறியாத குறிப்புத் தொண்டர் மாள்வது ஒன்றே வழி என்று எண்ணி தன் தலையை துணி துவைக்கும் கல்லில் மோதி மடிய முடிவார், இவரது எண்ணம் அறிகின்ற எம்பெருமான் இவ்வடியவர் துயரகற்ற, பாறையிடை தன் கரம் நீட்டி திருக்குறிப்பாரின் பாறை மோதும் தலையினைத் தாங்குவார்.
இறைவனது தீட்சையில் தன்னிலை பெற்ற குறிப்பாரும் வானத்திடை, விடைமேல் தோன்றும் உமை சமேதராய் சிவபெருமான் காட்சி தரக் கண்டு மெய்சிலிர்த்து திருவடியைச் சார்வார். பெய்த மழை நின்று, பெரும்பூ மழை பெய்யும். குறிப்பறிவார் அரன் அடி அமைவார்.
திருச்சிற்றம்பலம்
காஞ்சிபுரத்தில் ஆடிசன் பேட்டைக் கடைவீதியில் திருக்குறிப்பாருக்கு ஓர் கோயில் உண்டு.

ஸ்ரீ சக்தி வழிபாடு

ஸ்ரீ சக்தி வழிபாடு 





ஸ்ரீ சக்தி வழிபாடு என்பது நம் மண்ணில் வேரூன்றிய ஒன்று. சக்தி என்பவள் எல்லாவற்றையும் கடந்த மகாசக்தியாக, பராசக்தியாக போற்றப்படுவள். அவளே பக்தி, ஞானம்,அமைதி, கோபம், பசி, தாகம், இன்பம், துன்பம், ஒளி, இருள் - என எல்லாவற்றிலும் விரவி நிற்பதாக - எல்லா படைப்புகளிலும் தாயாக நின்று அன்புடன் அரவணைத்துக் காப்பதாக சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

பராசக்தி தத்துவம் பன்னெடுங்காலமாக பாரதத்தில் நிலைத்துள்ள ஒன்று. ''சக்தி இல்லையேல் சிவம் இல்லை - சிவம் இல்லையேல் சக்தி இல்லை'' என்று இணைத்து ஆணையும் பெண்ணையும் சரிபாதியாக நிலை நிறுத்தியதே அதன் உச்சம்.

காஞ்சியில் காமாட்சி, மதுரையில் மீனாட்சி, காசியில் விசாலாட்சி, குமரியில் கன்னி, தில்லையில் சிவகாம சுந்தரி - என எங்கெங்கும் அம்பிகை கொலு வீற்றிருக்கின்றாள்.

ஒரு புறம் கோபாக்னி வீச கொடுமைகளை வேரறுக்கும் மகாகாளி எனில் மறுபுறம் சிம்ம வாஹினியாய் சீறிச் சினந்து சிறுமைகளைச் சிதறடிக்கும் ஸ்ரீதுர்க்கை என அம்பிகை நம்முடன் துணைக்கு வருகின்றாள்.

இவற்றையும் தாண்டி - மற்றொரு அம்சமாக - தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் எதிரொலிக்கும் திருப்பெயர் - மாரியம்மன்.

தமிழகத்தில் மாரியம்மன் திருக்கோயில் இல்லாத ஊரும் உண்டோ!.....

சமயபுரத்தில், தஞ்சையில், மதுரையில், திருவேற்காட்டில், திண்டுக்கல்லில், காரைக்குடியில், பட்டுக்கோட்டையில், பன்னாரியில், பெரியபாளையத்தில், சேலத்தில், ஈரோட்டில், மருவத்தூரில் - திசையெங்கும் அன்னை மாரியின் திருக்கோயில்கள்.

மக்களின் பிணிகளைப் போக்குவதில் அவளுக்கு ஈடு இணை கிடையாது. நோயுற்ற மக்கள் மாரியம்மனின் திருக்கோயில்களில் தங்கி - நலம் பெறுவது இன்றளவும் கண்கூடு. வேப்பிலையும் மஞ்சளும் எலுமிச்சையும் அவளுடைய புனித அடையாளங்கள்.

வழக்கமான திருவிழாக்கள் ஒருபுறம் இருந்தாலும் - கிராமங்களிலும், நகரங்களிலும் - ஆங்கே வீற்றிருந்து அருள் புரியும் மாரியம்மனுக்கு சிறப்பாக, அபிஷேக அலங்காரம் என வழிபாடுகளை நடத்தி மகிழும் நாள் - தை வெள்ளிக் கிழமை.

இயன்றவரை திருக்கோயில்களுக்குச் சென்று வணங்கி வழிபட்டாலும் , நாம் குடியிருக்கும் வீடு விளங்க - வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வருவதாகும்.

தினமும் காலை, மாலை வேளைகளில் திருவிளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சுத்தமான வெள்ளை நூல் இழைகளால் திரியிட்டு தீபமேற்றி - சிவப்பு நிற மலர்களைச் சூட்டி, "பாயஸன்ன ப்ரியை" - என அன்புடன் அழைக்கப் படும் அன்னைக்கு, பால் பாயசத்துடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக சமர்ப்பித்து மஹிஷாசுரமர்த்தனி ஸ்தோத்திரம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி - என இயன்றவரை தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.

செவ்வாய், வெள்ளி - இரு தினங்களும் அம்பிகை வழிபாட்டுக்கு ஏற்றவை. பிரத்யேக பிரார்த்தனை எனில் ஞாயிறு உகந்தது.

ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகளில் திருக்கோயில்கள் தோறும் குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. கன்னியரும் சுமங்கலிகளும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் திருவிளக்கினை அம்பிகையாக வணங்கி குங்குமம் மலர்களால் தாமே அர்ச்சனை செய்து பெரும்பேறு எய்துகின்றனர்.

அம்பிகை - '' நம் வாழ்வின் துன்ப இருளை அகற்றி, இன்ப ஒளியினைப் பெருக்கும் திருவிளக்காகி சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றாள் '' - என்பதே திருவிளக்கு பூஜையின் தத்துவம்.

"அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்..." என்பது மகாகவி பாரதியாரின் திருவாக்கு.

"முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..." என்கின்றார் அபிராமி பட்டர்.

'' யா தேவி சர்வ பூதேஷூ: சக்தி ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ''

'' எல்லா உயிர்களிலும் சக்தி வடிவாக நிறைந்திருக்கின்ற தேவி அவளுக்கு எங்கள் வணக்கம்...'' - என்று பணிந்து புகழ்வது தேவி மஹாத்மியம்.

அம்பிகையைச் சரணடைவோம்!... அதிக நலம் பெறுவோம்!...
திருச்சிற்றம்பலம்.

Tuesday, January 12, 2016

சுவாமிஜி - மாதாஜி சார்பாக அனைவருக்கும் இனிய போகி பண்டிகை , பொங்கல் , மற்றும் மாட்டு பொங்கல்திருவிழா நல்வாழ்த்துக்கள்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி சார்பாக
அனைவருக்கும்  இனிய போகி பண்டிகை , பொங்கல் , மற்றும் மாட்டு 
பொங்கல்திருவிழா நல்வாழ்த்துக்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236