Wednesday, September 30, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 01-10-2015 புரட்டாசி (14)மாத வியாழ கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி
திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

cell :98428 58236

அரிவாற்றலுடன் அழகாய் குழந்தை பெற

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அரிவாற்றலுடன்   அழகாய் குழந்தை  பெற

மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின்
மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள்

விளக்கம் :
கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .

அழகாய் குழந்தை  பெற :-

கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன்
செம்மை நிறமாய்  பிறக்கும் ,

செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .



Monday, September 28, 2015

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 01-10-2015 புரட்டாசி மாத வியாழ கிழமை   பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்குருபூஜை  அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 909510237


ஸ்ரீ ஸத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 77 வது குருபூஜை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஸ்ரீ ஸத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 77 வது குருபூஜை 


*புதுக்கோட்டை , இலுப்லூரில்   அமைந்துள்ள தன்றிஸ்வரத்தில் 
  அன்று 01-10-2015 புரட்டாசி மாத வியாழ கிழமை  மகா பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்குருபூஜை  அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள்


.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842858236




Friday, September 25, 2015

இருதயம் வலுப்பெற,மாரடைப்பை தவிர்க்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

இருதயம் வலுப்பெற ,மாரடைப்பை தவிர்க்க 




செம்பரத்தம் பூமிச்சைச் சாருதேன் நீர்ப்பாகு

நம்பிக்கை நல்லிதயச் சத்து . ......குறள்


விளக்கம் :


செம்பரத்தம் பூ 300 ,எலுமிச்சம்பழம் 60 எடுத்து சாறு பிழிந்து அதில் செம்பருத்தி பூவை கசக்கி போட்டு 24 மணி நேரம் ஊற வைத்து சாற்றை வடிகட்டி ,சாறு அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலக்கி பதமுறகாய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும் .
தினமும் காலை ,மாலை 2 தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் அருந்திவர இருதயம் வலுபெறும் ,மாரடைப்பு வராது 




Thursday, September 24, 2015

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் அன்னதானம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 27.09.2015 புரட்டாசி (10) மாத ஞாயிற்றுகிழமை பௌர்ணமி அன்று இரவு

அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

cell :9787521143 ,98428 58236



Tuesday, September 22, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
  27.09.2015 புரட்டாசி மாத(10) ஞாயிற்று  கிழமை   பௌர்ணமி  -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

 மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236




Monday, September 21, 2015

கருவுற மகப்பேரியல் (1)

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கருவுற மகப்பேரியல் (1)



தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- குறள்



விளக்கம் :-
சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்


ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான்  சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  23-09-2015 
புதன் கிழமை புரட்டாசி 6 மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236







Friday, September 18, 2015

பித்ருகளுக்கு நன்றிக் கடன் மஹாளயஅமாவாசை


 மஹாளயஅமாவாசை மற்றும் பித்ருகளுக்கு நன்றிக் கடன்



மஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு ‘நிறைந்த நாள்’ என்ற பெயரும் கூட உண்டு.
நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எவ்வித குறைகளும் இன்றி நலமோடு வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான் புண்ணிய காரியங்கள் செய்தாலும், கோவில் கோவிலாக சுற்றினாலும் அது பலன் தராது.
காரணம், நீங்கள் செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் அவர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். நீங்கள் அவற்றை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். பலரின் வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்படும் காரணம் இது தான்.

அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான் புண்ணிய காரியங்கள் செய்தாலும், கோவில் கோவிலாக சுற்றினாலும் அது பலன் தராது.
அப்படிப்பட்டவர்கள், இந்த மஹாளய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். “கடைசி நேரத்தில் சொன்னா நான் என்ன பண்ணுவேன்?’ என்று எவரும் கலங்க வேண்டியதில்லை. கீழே தரப்பட்டுள்ள முழு கட்டுரையையும் படியுங்கள். உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் அடுத்த முறை, நன்கு திட்டமிட்டு மனநிறைவோடு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.

இது மிக மிக அற்புதமான கட்டுரை இது. படியுங்கள். பயன்பெறுங்கள்.
————————————————————————————————
23.09.2014 செவ்வாய் கிழமை மஹாளய அமாவாசை. முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நாள்.
மஹாளய அமாவாசை & 7 தலைமுறைகளுக்கு மரபணுக்கள்!!
இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோருகளுக்கு (பித்ருக்களுக்கு) வழிபாடு செய்கிறோம்.  




பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.


மஹாளய பட்ச அமாவாசை


ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்.
இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்யவேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.

இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்யவேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.
பித்ருக்களுக்கு விசேஷ தினம்
பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.
7 தலைமுறைகளுக்கு மரபணுக்கள்
மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.

மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது.
இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.

பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.
சூரியோதய நேரத்தில் அமாவாசைதர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது.

திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது.
சூரிய, சந்திரர்கள் 12 டிகிரிக்குள் ஒருங்கிணையும் நாள் தான் அமாவாசை ஆகும். இந்த ஆண்டு 12.10.2015 திங்கள்  கிழமைகாலை சூரியோதய நேரத்தில் அமாவாசை இருப்பது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. ‘அமாசோமவாரம்’ என்று கூறப்படும் இந்த நேரத்தில் அரசமரத்தை வளம் வருவது நன்மை பயக்கும். அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன், என்னும் மும்மூர்த்திகளில் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மஹாளய அமாவாசையான நாளைய தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம். -



பித்ருகளுக்கு நன்றிக் கடன்(சிரார்த்தம்) செய்ய எளியமுறைகள் :


ஹிந்து புனிதநூல்களின்படி, ஒவ்வொருவரும் பித்ருகளுக்கு நன்றிக் கடனை(சிரார்த்தத்தை) செய்தே ஆகவேண்டும். பணமில்லாதது அல்லது சிரார்த்தம் செய்யப் பண்டிதர்கள் கிடைக்காதது போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் ஒருவரால் செய்ய இயலவில்லை என்றால், கீழ்க்கண்ட எளியமுறைகளை, ஹிந்து சாஸ்திரங்கள் வகுத்துள்ளன. எனினும், இம்முறைகளிலிருந்து, சிரார்த்தத்தின் முழுப்பயனையும் பெறுவதற்கு, இவற்றில் ஒன்றை முழு ஆன்மீக உணர்வுடன் செய்ய வேண்டும்.
1) மூதாதையருக்கு வேள்வித்தீயில்(ஹோமசிரார்த்தம்) படையல் அளிக்கலாம்.
2) ஒரு பிராமணனுக்கு நீர் நிரப்பிய குடத்தை அளிக்கலாம்
3) ஒரு பிராமணனுக்கு உணவு அளிக்கலாம்.
4) ஒரு பிராமணனுக்கு எள் விதைகளை அளிக்கலாம்.
5) ஒரு பிராமணனுக்கு பணம் அளிக்கலாம்.
6) ஒரு பிராமணனுக்கு, தனது வசதிக்கேற்ப உணவுதானியங்களை அளிக்கலாம்.
7) பசுமாட்டிற்கு புல் கொடுக்கலாம்.
8) சடங்குகளுக்குப் பதிலாக, பிண்டதானம் மட்டும் செய்யலாம்.
9) குளித்தபின் பித்ரு தர்ப்பணமாக, கையில் எள்விதைகளை வைத்து, அதில் நீரூற்றிக் கீழே (அர்க்கியம்) விடலாம்.
10) ஹிந்துப் பஞ்சாங்கப்படி சிரார்த்தத் திதியில் விரதம் இருக்கலாம்.
11) சிரார்த்தத் தேதியில், சிரார்த்த சடங்கை உச்சாடனம் செய்யலாம்.
இதுகூட முடியவில்லை என்றால், காட்டிற்குச் சென்று அல்லது ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று, கைகளை உயரே நேர்த் தூக்கி, சூரியன் போன்ற மண்டல தேவதையை நோக்கி, ஒரு புல்லின் தாளை ஆரத்திபோல் சுற்றிக்காட்டி,” என்னிடம் சிரார்த்தம் செய்வதற்கான செல்வம் இல்லை, என் மூதாதையர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மூதாதையர் எனது பக்தியினால் மகிழ்ச்சி அடைவார்களாக. நான் கையறு நிலையில் இருக்கிறேன்” என வேண்டிக் கொள்ளவேண்டும்.
இதுவும்கூட முடியவில்லையெனில், தெற்கு நோக்கி நின்று, அழுது புலம்பலாம்.
நம் மூதாதையருக்கு சிரார்த்தம் செய்ய நம்மாலான முயற்சியை மேற்கொள்வோமாக.



மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்



"மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.


இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.


மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.


ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.


நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.


மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.


முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்


2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்


3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்


4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்


5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்


6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்


7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்


8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்


9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.


10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்


11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி


12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்


13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்


14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.


15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.


எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

Thursday, September 17, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் விநாயக சதுர்த்தி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
17-09-2015 இன்று ஆவணி  மாதம் 31 தேதி வியாழகிழமை காலை 9.00 -11.00 மணிக்கு விநாயக சதுர்த்தி  கன்யா ரவி  சங்க்ரமண    ஆவரணபூஜை 

அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை  நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி
 திருவருள் ஆசிர்வாதம் மற்றும்

ஸ்ரீ லக்ஷ்மீ கணபதியின்  திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236





Tuesday, September 15, 2015

குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக


அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனுடன் கலந்து குழந்தையின் நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய் மாறி நன்கு பேச வரும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 19.09.2015 ஆவணி மாத சனி கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
cell : :9842078733
9043942091,
9843016651

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!





Friday, September 11, 2015

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ளஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 14.09.2015 தேதி திங்கள்கிழமை ஆவணி  28   மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ,ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :94425 59844
98428-58236


Wednesday, September 9, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் ஆவணி மாதம்

அமாவாசை யாகம்  12.09.2015 சனிகிழமை ஆவணி    மாதம்  




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
12.09.2015 சனி  கிழமை ஆவணி  மாதம்அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அபிஷகம், ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

 ஆவுடையார்கோவில் அமைந்துள்ள
 ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 11-09-2015 தேதி  ஆவணி 25 மாத வெள்ளி  கிழமை காலை 10.00மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479



Monday, September 7, 2015

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 10-09-2015 தேதி ஆவணி (24) மாதம் வியாழ கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651









பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும்10-09-2015 தேதி ஆவணி (24) மாதம் வியாழகிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .
மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923




Saturday, September 5, 2015

ஈரல் புண் குணமாக

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஈரல் புண் குணமாக


ஈரல்புண் கொண்டோரை ஈக்கள் மொய்ப்பதைக் காணலாம் 
கனிந்த பழத்தை ஈ மொய்ப்பது போல் .-----நோய் அறிகுறி

மருந்து :

கருநொச்சி வாதநோய் கல்ஈரல் நோய்க்காம்
ஒரு இலவங்கம் பூண்டு மிளகொடு ........குறள்

விளக்கம் :
கருநொச்சி இலையோடு இலவங்கம் ,பூண்டு, மிளகு இவற்றை சேர்துண்ண கல்லீரல்,மண்ணீரல் ,நுரையிரல் ஆகிய மூவிரல் நோயும் வாத நோயும் தீரும்


 .

Wednesday, September 2, 2015

உடம்பில் க்ரியாடின் அளவைக் குறைக்க உப்பு குறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்







உடம்பில் க்ரியாடின் அளவைக் குறைக்க

உப்பு குறைய



பிஞ்சுக் கடுக்காய் படிகாரம் நெல்லிவற்றல் ,
விஞ்சுமுடல் உப்புக்கு மாற்று ........குறள்

விளக்கம் ,

பிஞ்சுக்கடுக்காய் ,படிகாரம் ,நெல்லிவற்றல் இம் முன்றையும் தூளாக்கி உண்டு வந்தால் உடலில் மிகுந்துள்ள உப்பு குறையும்