Thursday, January 29, 2015

குரு என்ற ரூபத்தில் ஒரு காரியஸ்தர் எதற்கு?

குரு



நமக்கும் இறைவனுக்கும் இடையே குரு என்ற ரூபத்தில் ஒரு காரியஸ்தர் எதற்கு?

சிறு சிறுவிஷயத்திற்கு கூட நமக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு “இந்த சாலை எங்கு செல்கிறது?” நாம் கல்வி கற்க ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். அதேபோல் பரம்பொருளை உணர நாம் செல்ல வேண்டிய பாதையை காட்ட ஒரு குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.


ஒருவன் தன்னுடைய சொந்த முயற்சியில் ஆன்மீகத்தில் முன்னேற முடியும். ஆனால் ஒரு சரியான குருவை பின்பற்றும் போது இப்பாதை சுலபமாகிறது. ஒரு கப்பல் சேரும் இடத்தை அடைய நான்கு மணி நேரம் தேவைப்பட்டால், ஒரு சிறிய படகு அதே இடத்திற்கு செல்ல பன்னிரண்டு மணி நேரம் ஆகும். அதே அப்படகு கப்பலுடன் இணைத்து கட்டினால் அதுவும் நான்கு மணி நேரத்தில் அவ்விடத்தை சென்றைடையும். 


அதேப்போல் நாம் நம்முடைய முயற்சியால் ஆன்மீக பயிற்சி செய்தால் நம்முடைய குறைகள் மற்றும் அகங்காரத்தால் முன்னேற அதிக நேரம் ஆகும். அதே ஒரு சரியான குருவை பின்பற்றும் போது நம் முன்னேற்றம் வேகமாக இருக்கும். ஆகவே மகான்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து அவர்களின் வழிகாட்டுதலை பெறவேண்டும்.

No comments:

Post a Comment