Tuesday, January 13, 2015

கற்றாழை பல நோய்க்கு ஒரூ மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


கற்றாழை பல நோய்க்கு ஒரூ மருந்து

சித்தர்களின் காய கல்ப மூலிகைகளில் முதன்மையானது கற்றாழை
எளிதில் எங்கும் கிடைக்கும் சுலபமாக உபயோகப்படுத்தலாம் .

பயன் படுத்தும் விபரம்

கற்றாழை ,சோற்றுக் கற்றாழை ,குமரி ,கன்னி என பல பெயர்கள் உண்டு
தேரையர் இதை பயன்படுத்தினால் இளமையாக வாழலாம் என குறிப்பிட்டுள்ளார் .

விஷ முறிவிற்கு


உடலில் இருக்கும் எவ்விதமான விஷமானாலும்
கற்றாழையின் தோலை சீவி சதையை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் சம எடை நன்னாரி வேர் இவை இரண்டையும் கலந்து சாப்பிட்டால் விஷம் முறியும் .இதை சாப்பிட இயலாதவர் இதனுடன் கொஞ்சம் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடலாம் .
மூன்று நாள் உணவுக்குமுன் சாப்பிட்டால் நன்று .

                                                அல்சருக்கு கை கண்ட மருந்து


பல விதமான அல்சருக்கு உணவுக்கு முன் சிறிதளவு கற்றாழை சோறை எடுத்து சாப்பிட்டால் குணமாகும் .கசப்பின் காரணமாக சாப்பிட இயலாதவர் கற்றாழை ஜூஸ் வாங்கி 30 மில்லி தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .

                                                         தீப்புண் ஆருவதற்கு

சமையல் செய்யும் போது ஏற்படும் தீப்புண்களுக்கு
மேல் பூச்சாக பூசி வந்தால் புண் விரைவில் ஆறும் .

                                                       தலைமுடி நன்கு வளர

100 கிராம் கற்றாழை சோறை 500 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டுவது நின்று நன்கு வளரும் ,தலை,கண் குளிர்ச்சியடையும் .


No comments:

Post a Comment