Saturday, January 31, 2015

தாய் சேய் நலம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

தாய்  சேய்  நலம்


தாய்ப்பாலில் வேம்பு துளிர் சீரகம் கார்மிளகு
சேய்வேப்பங் காரச் சிறப்பு .----------------குறள்



விளக்கம் :
வேம்பின் துளிர் இலை -5 உடன் 4 சீரகம் மிளகு 1 இம் மூன்றையும் (எண்ணிக்கையில் எடுக்க)இடித்து மெல்லிய வெள்ளை துணியில் முடிந்து அதை தாயின் பாலில் ஊற வைத்துவிட்டு குழந்தையை குளிப்பாட்டிவிட்டு ,பிறந்த ஒரு மாதத்தில் இருந்து 16 நாள் இருதுளி அளவு நாவில் தடவி வர குழந்தைக்குஇளமையில் நோய் எதுவும் வராது .

Friday, January 30, 2015

கருவுற மகப்பேரியல் (1)

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கருவுற மகப்பேரியல் (1)



தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- குறள்



விளக்கம் :-
சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்


Thursday, January 29, 2015

குரு என்ற ரூபத்தில் ஒரு காரியஸ்தர் எதற்கு?

குரு



நமக்கும் இறைவனுக்கும் இடையே குரு என்ற ரூபத்தில் ஒரு காரியஸ்தர் எதற்கு?

சிறு சிறுவிஷயத்திற்கு கூட நமக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு “இந்த சாலை எங்கு செல்கிறது?” நாம் கல்வி கற்க ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். அதேபோல் பரம்பொருளை உணர நாம் செல்ல வேண்டிய பாதையை காட்ட ஒரு குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.


ஒருவன் தன்னுடைய சொந்த முயற்சியில் ஆன்மீகத்தில் முன்னேற முடியும். ஆனால் ஒரு சரியான குருவை பின்பற்றும் போது இப்பாதை சுலபமாகிறது. ஒரு கப்பல் சேரும் இடத்தை அடைய நான்கு மணி நேரம் தேவைப்பட்டால், ஒரு சிறிய படகு அதே இடத்திற்கு செல்ல பன்னிரண்டு மணி நேரம் ஆகும். அதே அப்படகு கப்பலுடன் இணைத்து கட்டினால் அதுவும் நான்கு மணி நேரத்தில் அவ்விடத்தை சென்றைடையும். 


அதேப்போல் நாம் நம்முடைய முயற்சியால் ஆன்மீக பயிற்சி செய்தால் நம்முடைய குறைகள் மற்றும் அகங்காரத்தால் முன்னேற அதிக நேரம் ஆகும். அதே ஒரு சரியான குருவை பின்பற்றும் போது நம் முன்னேற்றம் வேகமாக இருக்கும். ஆகவே மகான்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து அவர்களின் வழிகாட்டுதலை பெறவேண்டும்.

முகப்பரு வராமல் தவிர்க்க வேண்டியது


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

முகப்பரு வராமல் தவிர்க்க வேண்டியது 

கடலையின் மாவில்  கடிபூ ஆவாரை ,
விடின்சுருக் கில்லை  முகத்து ..................குறள்


விளக்கம் :-
பொட்டுக்கடலை  மாவும்  ,அழகு மிகுந்த  ஆவரம்பூவின்  தூள் இரண்டையும்  சேர்த்து காலையில்  5 கிராம்  உண்டு வர உடல்  வன்மையுரும் ,மேனி  பொன் நிறமாகும் .இதை நீரில் குழைத்து முகத்தில் தடவி  அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவிவர  முகம் பொலிவாகும் ,பரு நீங்கும் ,முகச்சுருக்கமும்  நீங்கும் .
முக அழகுண்டாகும்  .

இளமையில் முகப் பரு ஏற்படுவது  இயல்புதான் 
நெய் சேர்ந்த  இனிப்பு  பண்டங்கள்  உண்பதை தவிர்க்கவும் ..
பயத்தினால்  வருவதும்  உண்டு ..
ஒவ்வாமையினாலும் வருவது உண்டு..

Wednesday, January 28, 2015

உடம்பில் க்ரியாடின் அளவைக் குறைக்க உப்பு குறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்







உடம்பில் க்ரியாடின் அளவைக் குறைக்க

உப்பு குறைய



பிஞ்சுக் கடுக்காய் படிகாரம் நெல்லிவற்றல் ,
விஞ்சுமுடல் உப்புக்கு மாற்று ........குறள்

விளக்கம் ,

பிஞ்சுக்கடுக்காய் ,படிகாரம் ,நெல்லிவற்றல் இம் முன்றையும் தூளாக்கி உண்டு வந்தால் உடலில் மிகுந்துள்ள உப்பு குறையும்

Tuesday, January 27, 2015

செம்மடபட்டி பழனி முருகனுக்கு ஊஞ்சல் சேவை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
செம்மட பட்டியில் அரன்மனன பொங்கல் ஐயா வீடு பழனி ஸ்ரீ முருகனுக்கு ஊஞ்சல் சேவை , காவடி பூஜை மற்றும் விருந்து 31-01-2015 தை மாத சனி கிழமை அன்று நடை பேறுகிறதுஅனைவரும் கலந்து கொண்டு
.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


உடல் எடை குறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

உடல் எடை குறைய


மிளகு 100கிராம் ,
சீரகம் 100 கிராம்
லவங்கம் 100 கிராம்
லவங்கப் பட்டை 100 கிராம்

மேற்கண்ட நான்கையும் காய வைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை,மாலை, வெந்நீரில் 5 கிராம் அளவு நன்றாக கொதிக்கவைத்து குடித்து வர உடல் எடை குறையும்

Monday, January 26, 2015

மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து


கூட்டுங்கா மாலைக்கு கொழுந்திலைப் பூவரசு
நாட்டுமிள கோரேழு நாள் .---------------------------குறள்

விளக்கம் :
பூவரசுக் கொழுந்தும் மிளகும் சேர்த்தரைத்து
நெல்லிக்காய் அளவு ஏழு நாள் காலையில் தொடர்ந்து அருந்தினால்
கமலை நோய் தீரும் .




திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 28-01-2015 தை மாத புதன்  கிழமை  பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 909510237


Sunday, January 25, 2015

Tonsil medicine டான்சில் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

Tonsil medicine டான்சில் நீங்க

கர்பூரவள்ளியின்  கழலிலையை  தின
நற்ப்பாலர்  நோயெல்லா நாசமா யகலுமே   ..........தேரையர் 
விளக்கம் :
கற்பூரவள்ளியின்  இலையை  புதிதாக  எடுத்து  சாரு பிழிந்து  குழந்தைகளுக்கு சங்கில் புகட்டினால்  சளி, இருமல் ,மாந்தம் ,நீர்கோவை  நீங்கி விடும்.ஒன்று முதல் மூன்று  இலை மேல்  மீகாமல் குழந்தையின் வயதுக்கு தகுந்தாற்போல .  
உள்நாக்கு அழற்சி  (டான்சில் ) உள்ள குழந்தைகளுக்கு  வயதுக்கு தக்க  அளவு கர்பூரவள்ளியின் இலையை மருந்தாகக் கொடுக்கவும் .இலையை  அரைத்து 
அப்படியே கொடுக்கலாம் ஒரு நெல்லிக்காய்  அளவு  காலையில்  கொடுக்கவும் .கொதிக்கவைத்த தண்ணிரை  பயன்படுத்தவும்




Saturday, January 24, 2015

ஸ்ரீ ராஜமாதங்கீ நவராத்திரி தை மாத 21.01.2015 புதன் கிழமை முதல் 28.01.2015வரை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


  ஸ்ரீ ராஜமாதங்கீ நவராத்திரி தை மாத   21.01.2015 புதன் கிழமை முதல் 28.01.2015வரை 






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
  உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வங்களை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 



தை மாத புதன் கிழமை 21-01-2015இரூந்து  28-01-2015 புதன் கிழமைவரை

  ஸ்ரீ ராஜமாதங்கீ நவராத்திரிநடைபெறுகிறது

தினமும் காலை 6மணிலிரூந்து 9.30 வரை கணபதிஹோமம், மஹஎகதசருத்ராபிசேகம், 28-01-2015 புதன் கிழமை மாலை

ஸ்ரீ ராஜமாதங்கீ யாகம்

  இந்த யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக


அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனுடன் கலந்து குழந்தையின் நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய் மாறி நன்கு பேச வரும்

Friday, January 23, 2015

குழந்தை நலம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

  குழந்தை நலம்


சேய் சாம்பல் மண் தின்றால் கிழாநெல்லி வேர்கடுக்
காய்மிளகு வெந்நீர் அருத்து ----குறள்

விளக்கம் :

சாம்பல் ,மண் இவற்றை தின்னும் குழந்தைகளுக்கு கீழாநெல்லி வேர் ,கடுக்காய் ,மிளகு இம் 3யும் மை போல் அரைத்துக் காலையில் நான்கு கிராம் அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும் .அதனால் தீயமலக்கிருமிகளுடன் திண்ற மண் ,சாம்பல் இவையும் வெளியாகும் .குழந்தையும் அப் பழக்கத்தையும் மறந்து விடும் .







Wednesday, January 21, 2015

இதய நோய் குணமாக :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

இதய நோய் குணமாக


இதயநோய் வாராமல் எந்நாளும் காக்கும்
பதப்பாலில் வெங்காயம் பூண்டு .


பாலில் வெங்காயமும் பூண்டும் சேர்த்து காய்ச்சிப் பக்குவமாக அருந்திவர இதய வாராமல் காக்கும்
.

வரும்முன் காக்க :

பச்சை பூண்டு ஐந்து பல் அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி குடிக்கவும் இதய நோய்
வராது .



Sunday, January 18, 2015

தோலில் வெண் புள்ளி மறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

தோலில் வெண் புள்ளி மறைய


வெட்டிய எட்டிவித்து வேம்புவிதைச் சாற்றினிலே
பட்டிடவுண் வெண்புள்ளி நோய்க்கு .......குறள் 



விளக்கம் :
மூக்கை வெட்டிய எட்டிக் கொட்டையைச் சுத்தி செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து கடலையளவு மாத்திரை ஆக்கி உண்டுவர தோலில் உண்டான வெண்புள்ளி தீரும்


Saturday, January 17, 2015

பிரதோஷ விரத மகிமை

பிரதோஷம்

பிரதோஷ விரத மகிமை 18/01/2015

தோன்றிய வரலாறு- வீதி வலம் வரும் முறை.சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று.

பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷம் பிறந்த கதை!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே,

சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்


மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - பல வளமும் உண்டாகும்

நெய் - முக்தி பேறு கிடைக்கும்

சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்

ஞாயிறு:-மலர்-செந்தாமரை

இலை-வில்வம்

நைவேத்தியம்-பாயாசம்

திங்கள்:- மலர்-வெள்ளை நிற மலர்கள்

இலை-அரளி

நைவேத்தியம்- வெண்பொங்கல்

செவ்வாய்:- மலர்-சிவப்பு நிற மலர்கள்

இலை-விளா இலை

நைவேத்தியம்-எள் அன்னம்

புதன்:- மலர்-தாமரை

இலை-மாதுளை

நைவேத்தியம்- சர்க்கரை பொங்கல்

வியாழன்:- மலர்-குவளை

இலை-நாயுருவி

நைவேத்தியம்-தயிர்சாதம்

வெள்ளி:- மலர்-வெண் தாமரை

இலை-நாவல் இலை

நைவேத்தியம்-சுத்த அன்னம்

சனி:- மலர்-நிலோற்பவம்

இலை-விஷணுகிரந்தி

நைவேத்தியம்-உளுந்து அன்னம்


பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

 மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுகதேவி கோவிலில் ப்ரத்யங்கிரா அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

  அமாவாசை யாகம் தை மாத   19.01.2015 திங்கட்கிழமை




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 



தை மாத திங்கட்கிழமை 19-01-2015அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236



மூலநோய் மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழவேண்டும்

மூலநோய் மருந்து 

குறள் 

ஆவாரைப்  பூத்துளிர்  அப்பட்டை  வேரரசு ,
மேவார்க்குள்  முல  மிலை .....
வீ ளக்கம்
ஆவாரை இலைத்துளிர் ,பூ ,பட்டை  இவற்றுடன்  அரச மர வேர்பட்டைத்தூளும்  சேர்ந்த  ஊறல்நீர்  அல்லது  கொதிநீர்  காலை  மாலை  அருந்திவர  உள்முலம் நோய்  தீரும் .




ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ளஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான்  சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  20-01-2015 செவ்வாய் கிழமை தை மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Thursday, January 15, 2015

பொங்கல் திருவீழா

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்னாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
கோவிலில்பொங்கல் திருவீழா   சுவாமிஜி - மாதாஜி புகைப்படம்