Wednesday, October 8, 2014

சந்திர கிரகணம் நம்மை பாதிக்காமல் காக்கும் வழிமுறைகள்

ந்திர கிரகணம் நம்மை பாதிக்காமல் காக்கும் வழிமுறைகள் 



சந்திர கிரகணம் பற்றி மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், காந்த வயலில் அசைக்கப்படும் செப்பு கம்பியில் எப்படி மின்சாரம் உருவாகிறதோ (Electrons starts moving and producess electric current) அதே போல் சந்திர கிரகணத்தின் போது சூரியனில் இருந்து வரும் ஆற்றல் பூமியால் மறைக்க படுவதால் சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பாதிகப்படும். அது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களிலும் சில பாதிப்புகளை உருவாக்குகிறது

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அந்த நிழலில் சந்திரன் மெல்ல மெல்ல நகரும்போது, இளம் சிவப்பு நிறத்தில் இருப்பதாகச் சொல்வர். இந்த நாளில், கதிரியக்கத்தின் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அப்போது உணவு ஏதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த உணவில் தாக்கம் ஏற்பட்டு, அதனை உட்கொள்வதன் மூலமாக நோய் ஏற்படலாம் கிரகணம் முடிந்த பின் புதிதாக சமைத்த உணவை உண்ணலாம் .அதேபோல், மௌனம் அனுஷ்டிப்பதும், அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பதும் நன்று.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது


கிரகணக் கதிர்வீச்சுகள்,

 நம் தோல் பகுதியைத் தாக்காமல் இருக்க அது உதவும்.
வீட்டில் உள்ள பொருள்களில் கிரகணத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம். அதனால்தான் விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி-டீ ஆகியன உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். கிரகணத்தின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க தர்ப்பை புல்லை குடிக்கும் நீரிலும், உணவுப்பொருள்களிலும், சுவாமி அறையிலும் வைப்பது நல்லது. அத்துடன் கிரகண தோஷங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, நம் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை மனதாரப் பிரார்த்தனை செய்வது நற்பலனைத் தரும்

No comments:

Post a Comment