Tuesday, September 9, 2014

திருஅண்ணாமலை கிரிவலம் !

அம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தரும் திருஅண்ணாமலை கிரிவலம் !
யாருக்கு பூர்வபுண்ணியம் இருக்கிறதோ,அவர்கள் மட்டுமே ஒரு சாதாரண நாளில் திருஅண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல முடியும்.இந்த உண்மை காலம் காலமாக நிரூபணமாகிவருகிறது.தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் எட்டுக்கோடித் தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு தவிர்த்து,உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இரண்டு கோடி தமிழர்களில் யாருக்குப் பூர்வபுண்ணியம் வலுவாக இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அண்ணாமலைக்கு வர முடியும்.கிரிவலம் செல்ல முடியும்.
சைவத்தின் பிறப்பிடம் இன்றைய நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுக்காவைச் சேர்ந்த உதயத்தூர் என்ற கிராமம் ஆகும்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இங்கேதான் சைவ வழிபாட்டுமுறை உதயமானது;வைஷ்ணவத்தின் பிறப்பிடமோ,சைவத்தின் தலைநகரமாகவும்,ஆதிசிவன் மலையாக இருந்து பூமியை இயக்கும் அண்ணாமலை ஆகும். சக்தியை வழிபடும் சாக்தம்,விநாயகரை வழிபடும் காண்பத்தியம்,முருகக்கடவுளை வழிபடும் கவுமாரம்,சூரியனை வழிபடும் சவுரம் ஆகும்.இந்த ஆறுவிதமான வழிபாட்டுமுறைகளும் சேர்ந்ததே ஹிந்துதர்மம் ஆகும்.ஹிந்துதர்மம் ஷண்மத வழிபாட்டுமுறைகளால் பல லட்சம் வருடங்களாக செழித்துவளர்ந்து வருகிறது;
திருவாதிரை நட்சத்திரத்தன்று இராகுகாலத்தில் கிரிவலம் புறப்பட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 12 திருவாதிரைகளுக்கு அண்ணாமலையில் கிரிவலம் சென்றால்,அண்ணாமலையாரே நமக்கு தகுந்த ஆன்மீக குருவை இந்தப் பிறவியிலேயே அடையாளம் காட்டுவார்;நமது பிறந்த நட்சத்திர நாளன்று கிரிவலம் செல்ல வேண்டும்.நமது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நேரத்தில் கிரிவலம் புறப்பட்டு,நமது பிறந்த நட்சத்திரம் மறையும் முன்பே கிரிவலத்தை முடித்துவிட்டு,நமது ஊருக்குப் புறப்பட்டுப் போய்விடவேண்டும்.இவைகளெல்லாம் ஒவ்வொருவிதமான கிரிவலமுறைகள் ஆகும்;இன்னொரு முறை இருக்கிறது.இது மிகவும் கஷ்டமான கிரிவலமுறை! ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும்;1008 முறை ஓம் அண்ணாமலையே போற்றி என்று சொல்ல வேண்டும்;அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்;மீண்டும் 1008 முறை ஓம் அண்ணாமலையே போற்றி என்று சொல்ல வேண்டும்;இப்படிப்பட்ட கிரிவலத்தை ஒருமுறை முடிக்கவே சில மாதங்கள் ஆகும்;இதே போல ஒரு லட்சத்து எட்டுமுறைகளில் அண்ணாமலை கிரிவலமுறைகள் இருக்கின்றன;இவற்றில் பல சித்தர்கள் மட்டுமே அறிந்தவை;
திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் ஒரு கிரிவலமுறையை நமக்கு உபதேசித்துள்ளார்;இந்த வழிபாட்டுமுறையை உங்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறது;இந்த முறைப்படி அண்ணாமலை கிரிவலம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாட்களில் ஏதாவது ஏழு நாட்களுக்குச் செல்வதால்,
1)சக்தி உபாசகர்கள் அம்பாளின் அருளை விரைவாகப் பெற்றுவிடுவார்கள்;எந்தவிதமான அம்பாள் உபாசாகராக இருந்தாலும்,அவர்கள் நிச்சயமாக அம்பாளின் அருட்பார்வைக்குள் வந்துவிடுவர்;
2)தமிழ்நாடு முழுவதுமே ஏராளமான குடும்பங்கள்,தனி நபர்கள்,நிறுவனங்கள் பில்லி,ஏவல்,சூனியம் போன்றவற்றினால் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்;இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக பல ஜோதிட ஆலோசனைகளையும்,மாந்திரீக தற்காப்புகளையும் செய்து வருகின்றனர்;அவர்கள் அதற்குப் பதிலாக,இந்த கிரிவலமுறையைப் பின்பற்றினாலே போதும்;எப்பேர்ப்பட்ட மாந்திரீகப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்;
3)ரத்தம் சார்ந்த நோய்களால் அவதிப்படுவோர்,வீடு/மனை சார்ந்த பிரச்னைகளுடன் பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருப்போர் இந்த கிரிவலமுறையைப் பின்பற்றினால் நிச்சயமாக பரிபூரணமான பலன்களைப் பெறுவார்கள்.
4) செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுடன் இருப்பவர்களும்,குழந்தையின்மையால் வேதனைப்படுவோர்களும்,கணவன் மனைவி பிரிந்து வாழ்பவர்களும் தத்தம் துயரம் நீங்கி நிம்மதியடைவார்கள் என்பது சர்வ நிச்சயம்.
5)இடைக்காடர் சித்தரின் அருளைப் பெற விரும்புவோர் இந்த வழிமுறைப்படி கிரிவலம் சென்றால்,உறுதியாக அவரது அருளைப் பெறுவார்கள்;
இடைக்காடர் சித்தர்,ஆதிசிவனின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்;எனவே,திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இந்த வழிமுறைப்படி கிரிவலம் செல்வதால் ஒரே நேரத்தில் அவர்கள் பிரச்னைகளிலிருந்து மீண்டு விடுவர்;இடைக்காடர் சித்தரின் அன்புக்குப்பாத்திரமாகிவிடுவர்;அண்ணாமலையாரின் அருளைப் பெறுவர்.லக்னாதிபதி திருவாதிரையில் நிற்கப் பிறந்தவர்களும் இதே ஆன்மீக முன்னேற்றத்தைப் பெறுவர்.
9.9.2014(பவுர்ணமி)=ரொம்ப கூட்டமாக இருக்கும் - செவ்வாய்க்கிழமை
16.9.2014 - செவ்வாய்க்கிழமை
23.9.2014(அமாவாசை) - செவ்வாய்க்கிழமை
30.9.2014 - செவ்வாய்க்கிழமை
7.10.2014 - செவ்வாய்க்கிழமை
14.10.2014 - செவ்வாய்க்கிழமை
21.10.2014(பிரதோஷம்) - செவ்வாய்க்கிழமை
28.10.2014 - செவ்வாய்க்கிழமை
4.11.2014 - செவ்வாய்க்கிழமை
11.11.2014 - செவ்வாய்க்கிழமை
18.11.2014 - செவ்வாய்க்கிழமை
25.11.2014 - செவ்வாய்க்கிழமை
2.12.2014 - செவ்வாய்க்கிழமை
9.12.2014 - செவ்வாய்க்கிழமை
16.12.2014 - செவ்வாய்க்கிழமை
23.12.2014 - செவ்வாய்க்கிழமை
30.12.2014 - செவ்வாய்க்கிழமை.
இந்த நாட்களில் நாம் மதியம் சரியாக 2.45க்கு மணிக்கு ஆரஞ்சு அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு(ஆண்கள் வேட்டி மட்டும் கட்டிக்கொள்வது நன்று),இரட்டைப்பிள்ளையார் கோவிலில் அவரை வழிபட்டுவிட்டு,தேரடிமுனீஸ்வரை வழித்துணைக்கு வேண்டி அழைத்து,கிழக்குக் கோபுரவாசலுக்கு நேராக சாலையில் இருந்தாவாறே அண்ணாமலையாரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை வேண்டிக் கொண்டு கிரிவலம் புறப்படவேண்டும்;
கிரிவலப்பயணத்தின் போது எந்த மந்திரமும் ஜபிக்க வேண்டியதில்லை;யாரிடமும் பேசக் கூடாது.கிரிவலநாளன்று விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை;கிரிவலத்தை பூத நாராயணப் பெருமாள் சன்னதியில் நிறைவு செய்ய வேண்டும்.
கிரிவலம் முடிந்ததும்,நேரம் இருந்தால் அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு,உடனே அன்றே நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்;வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லக் கூடாது;யாருடைய வீட்டிற்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment