Thursday, September 25, 2014

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


ஸ்ரீ மாணிக்கவாசகர்நால்வர் 

மாணிக்கவாசகரின் -- ஆவுடையார் கோவில் 

மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார் கோவிலுக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. ஆதி கைலாயநாதர் ஆலயம் .. இங்கு தான் மாணிக்க வாசகர்க்கு முதல் உபதேசம் கிடைத்த புண்ணிய பூமியாகும் . ..இறைவன் ஆதி கைலாயநாதர் ..அம்பாள் சிவகாமியம்மை ...மாணிக்க வாசகர்க்கும் முற்பட்ட கோவிலாகும் பராசரர் ..புலத்தியர் ஆகிய சித்தர்கள் வழிபட்டு முக்தி அடைந்த கோவிலாகும் ..வடக்கூர் -எனும் ஊரின் பெயரே மாணிக்க வாசகர்க்கு பின்னே ஆவுடையார் கோவில் ஆனது ..


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் எனும் ஊரில் ஆத்மநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள லிங்கத் திருமேனியில், ஆவுடை மட்டுமே உள்ளதால் ஆவுடையார் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். 

  இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. காவல் தெய்வம் கூட அருவமாக உள்ளது .. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.ஆவுடையார்கோயிலுக்கு இன்னொரு பெயர் திருப்பெருந்துறை ஆகும். மாணிக்கவாசகரால் அப்பெயரால் அழைக்கப்பட்ட திருத்தலம் இதுவேயாகும். இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.

  உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன ..அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன... நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.. இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.

  ஆவுடையார் கோவில் என்னும் திருப் பெருந்துறை புதுக்கோட்டையிலிருந்து  தென்கிழக்கில் 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்திற்கு பஸ் வசதிகள் பல ஊர்களிலிருந்தும் நிறையவே உள்ளன.


புலத்தியர் முனிவர் முத்தி பெற்ற -- வடக்கூர் (ஆவுடையார் கோவில்-திருபெருந்துறை ) ஆதி கைலாயநாதர் ஆலயம்:

  அகத்திய முனிவரின் முதன்மை சீடர்களில் ஒருவர் புலத்திய முனிவர் ..இவர் பிரம்ம தேவரின் மைந்தராவார்..ஆவிர்ப்பூவை எனும் மங்கையை மணந்து விசிரவசு எனும் மகனை பெற்றார் ..விசுரவிசுவின் புதல்வர்தான் ராமபிரானால் வதைக்கப்பட்ட இராவணன்...புலத்தியர் இராவணனின் பாட்டனார் ஆவார் ..
  போகர் முனிவர் புலத்தியரை அகத்தியர்க்கு உகந்த சீடர் என்றும் கமலமுனி சித்தரின் பேரன் என்றும் ..ஆவணி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்றும் பிறக்கும் போதே பக்தி பழமாக இருந்தார் என்றும் பழுத்த சிவராசயோகி என்றும் குறிப்பிடுகிறார். (.போகர் 7000-5900 )

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார் கோவிலில் ஸ்ரீமாணிக்கவாசகர்க்கு பிரதி மாதம் மகம்  நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமாணிக்கவாசகர்,திருவருள் ஆசிர்வாதம்  பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு .மு.நாகராஜன் cell :9443007479











No comments:

Post a Comment