Sunday, August 10, 2014

திரு அழுக்குச் சாமிகள்


திரு அழுக்குச் சாமிகள் 

  வேட்டைகாரன்புதூர் பொள்ளாச்சியிலிருந்து சேத்துமடை செல்லும் வழித் தடத்தில் உள்ளது.. ஆணை மலை மாசாணிஅம்மன் கொவிலிருந்து 6 கிலோ மிட்டர் தொலைவு சென்றால் வேட்டைகாரன்புதூர் வந்தடையலாம் ...
  இங்கே தான் உலகெல்லாம் உய்யும் பொருட்டு அன்பில் பூத்து ,அருளில் மலர்ந்து ,தெய்வநலத்தில் கனிந்து திருவருளோடு ஒன்று கலந்த திருவார் திரு அழுக்குச் சாமிகள் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சமாதி நிலை அடைந்தார் .

செம்மனதினரான இவரை--

"" இழுக்கு நெறியீர் புகுதாமல் என்னைச்சிறு காலையில் ஆண்டன்புடன்
ஒழுக்கு நெறிய தமிழ்ப்புலமை உறுக என்றே வாழ்த்தி எனை
முழுக்க ஆண்ட தடங்கருணை மூர்த்தி வேட்டைகார நகர்
ஆழுக்குச்சாமி திருவடிக்கு இவ்அலங்கல் அணியாய் உறுமதோ''

-என கோவை புலவர் கவியரசு கு .நடேசகவுண்டர் பாடி பரவுகிறார தத்துவ மசி எனும் திருமூலர் மரபில் வாழையடி வாழையாக வந்து ஞான யோகியாக வாழ்ந்தவர்..ஊனுடல் காட்டிச் சித்துக்கள் பல புரிந்தவர் ..சுவாமிகள் நீராடல் முதலிய தூய்மை செய்ய கண்டாரில்லை

ஆயினும் அவரது திருமேனியில் நாற்றம் முதலியன உண்டானதில்லை ...மாறாக நறுமணம் வீசும் உடல் கொண்டவராக விளங்கினார்..சாமிகள் சொன்ன வண்ணமே வேட்டைக்கார சுவாமிக்கு
வடபுறம் ஜீவசமாதி கொண்டுள்ளார் ...தினசரி வெகு ஜோராக பூஜைகள் நடைபெறுகிறது .குரு பூஜை 60 ஆண்டுகளாக நடைபெறுகிறது .
  புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குரு அப்பா பைத்தியசாமி. இவருக்கு குருவாக திகழ்ந்தவர் அழுக்கு சாமியார். . ஆண்டு தோறும் அழுக்கு சாமியாரின் குருபூஜை விழா கார்த்திகை மாதம் மிருக சீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறும்..புதுசேரி முதல்வர் தவறாது வந்து செல்கிறார் ..இவரை வழிபட்டு தமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டு உள்ளது என்பதை அனைவரும் அறிவர் ..ஒருமுறை வந்து பாருங்கள் .

No comments:

Post a Comment