Friday, August 15, 2014

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவப்பெருமான்!!!



வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவப்பெருமான்!!!

மகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய ஆலயம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பைரவர் வேலூர் நகரில் அமைந்திருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவிலினுள் இருக்கிறார்.இந்த பைரவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,சப்தரிஷிகளால் வழிபாடு செய்யப்பட்டவர்;சித்தர்களின் தலைவர் அகத்தியர்,கவுதமர்,ப்ரத்வாஜர்,வால்மீகி,காஸ்யபர்,அத்திரியார்,வசிட்டர் போன்றவர்களால் வேலூருக்கு கிழக்கே உள்ள பகவதி மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பல்லாண்டுகளாக பூஜையும்,தவமும் செய்து வந்தனர்.வழிபாட்டின் நிறைவாக,மற்ற முனிவர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர்.அத்திரி மகரிஷி மட்டும் வேலூரிலேயே சில காலம் தங்கி வேறொரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபாடு செய்துவிட்டு,அவரும் சென்றுவிட்டார்.இதனால்,கவனிப்பாரின்றி பல ஆண்டுகளாக சிவலிங்கம் இருக்கும் அவலநிலை உண்டானது.அந்த சிவலிங்கத்தைச் சுற்றி புற்று உருவாகி சிவலிங்கத்தையே மறைத்துவிட்டது.
பிற்காலத்தில் கோதாவரி நதிக்கரையில் இருந்த பத்ராச்சலம் என்ற ஊரில் பிறந்த பொம்மி,திம்மி என்ற இருவரும் இந்த சிவலிங்கத்தை பிரதிட்டை செய்தனர்.கூடவே,ஜலகண்டேசுவர பைரவரை வேலூர் ஆலயத்தில் பிரதிட்டை செய்தனர்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;பிறகு, தமது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இங்கே அமைந்திருக்கும் பைரவப் பெருமானுக்கு அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்ய வேண்டும்.வழிபாடு நிறைவடைந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்குச் செல்லாமலும்,பிறர் வீட்டிற்குச் செல்லாமலும் நேராக அவரவர் சொந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி மாதம் ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு செய்தாலே போதுமானது;நமது வாழ்நாளில் இருந்து வந்த சகலவிதமான கர்ம வினைகளும் முழுமையாக விலகிவிடும்;

அபிஷேகத்தில் இருக்க
வேண்டிய முக்கியப் பொருட்கள்:

அத்தர்புனுகு

ஜவ்வாது

சந்தனாதித்தைலம

பசும்பால்(முடியாவிட்டால் பாக்கெட் பால்)குறைந்தது ஒரு லிட்டர்

செவ்வரளி மாலை

மரிக்கொழுந்து உதிரியாக

வில்வம்பழரசம்

முடிவில் சந்தனக்காப்பு

செய்வது பைரவ அருளை விரைவாகக் கிடைக்கச் செய்யும்.

அரகஜா,புனுகு,கஸ்தூரி,பச்சைக் கற்பூரம்,கோரோசனை கலந்த சந்தனக்காப்பு செய்வதால் பைரவப் பெருமானின் அன்புக்கும்,அருளுக்கும் முழுப்பாத்திரமாக நம்மால் முடியும

பைரவ ப்பெருமானுக்குப் படையல்:

அவல் பாயாசம்

வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மிளகுவடை

வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல்

தேன்நெய்யில் சமைக்கப்பட்ட உளுந்துவடை

சம்பா அரிசிச் சாதம்பால்

இவைகளில் ஏதாவது ஒன்றை ஒவ்வொரு ஜன்ம நட்சத்திர நாளன்றும் தயார் செய்து பைரவப் பெருமானுக்குப் படையல் இட வேண்டும்;அபிஷேகமும்,அர்ச்சனையும் நிறைவடைந்தப்பின்னர்,அங்கே வந்திருப்பவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;வீட்டிற்கும் கொண்டு சென்று நமது குடும்பத்தாருக்கும் தரலாம்.
வசதியுள்ளவர்கள் ஒவ்வொரு ஜன்ம நட்சத்திர தினத்தன்றும் இவைகள் அனைத்தையும் படையல் இட்டு அபிஷேகம் செய்யலாம்;மனப்பூர்வமாகச் செய்யும் வழிபாடுதான் இங்கே பைரவரின் கவனத்திற்குச் செல்லும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ




No comments:

Post a Comment