Saturday, August 16, 2014

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,திருநெல்வேலி


ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி


ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான்.வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில் அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு. எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார்.
கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிஉச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார். பிஉச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், பிமூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.

பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், "ஸ்ரீநீலாவாணி'' என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரது பெயரில் பிஸ்ரீ' என்பது லட்சுமியையும், பிநீலா' என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் பிவாணி' என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது. இங்கு ஜோடியாக வீற்றிருக்கும் பிஉச்சிஷ்ட விநாயகரை' வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும்.

தாம்பத்திய உறவு மேம்படும் என்கிறார்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம்.

அதோடு, செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில், பைபாஸ் சாலையை கடந்து சென்றால் இக்கோவிலை சென்றடையலாம்.

மிக பழமையான இந்த கோவில் பல 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாமல் அதன் பெருமைகளை இழந்து காணப்படுகிறது. இக்கோவிலை புனர் அமைத்து ஜிர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் செய்ய இறையருள் பாலித்துள்ளது.

நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி 13-08-2014 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு சிறப்பு ஹோமம் ,அபிசேகம் ,ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருவருள் மற்றும் ஆசிர்வாதம் பெற்று செல்லவும்

மேலும் தகவல்கள்களுக்கு:9842078733

No comments:

Post a Comment