Monday, September 1, 2014

ஸ்ரீ வான்மீகச் சித்தர்

வான்மீகச் சித்தரும் திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயமும்



ஸ்ரீ வான்மீகர் என்ற வால்மீகி முனிவர்

வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் ... போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் ..

  வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார். அடுத்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் ஸ்தல விருச்சம் சரக்கொன்றை மரத்தின் கீழ் வெகு காலம் தவம் செய்துள்ளார் .. மேலும் இவரது மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீசர் சன்னதியில் சமாதி கொண்டுள்ளார் ..

  திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் அமைந்துள்ளது. காரைக்குடிக்கு அருகில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .. இத்தலத்தில் பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலட்சுமி வழிபட்டார் என்பது நம்பிக்கை...

  முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது.

 புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்' என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

  ராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார.

  பைரவர் - யோகபைரவராக இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.யோக நிலையில் இருப்பதால் இவருக்கு "நாய்' வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல
  காண கண்கோடி வேண்டும் ..மனம் லகிக்க அருமையான இடம் ..ஒருமுறை சென்று வாருங்கள் ..முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். "ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்...












No comments:

Post a Comment