Saturday, June 13, 2020

நோய் எதிர்ப்பு சத்தான பானம்



நோய் எதிர்ப்பு  சத்தான பானம் 



சீரகம் பால் நன்னாரி சுக்கோடு டதி மதுரம்
பேர் திப்பின் ஏலத் தமுது-குறள்


விளக்கம்:
பருவநிலைகேற்ப சீரகம், நன்னாரி, சுக்கு, அதிமதுரம் சம அளவு சேர்த்து இடித்து வைத்துக்குக்கொண்டு கொதி நீரிலே வேண்டிய இனிப்பு (வெல்லம்) சேர்த்து குடிக்க உடல் நலம் பெரும் பசும் பாலிலும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நல் ஊட்டச்சத்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு உண்டாகும். பருவதிற்கேற்ப சூடாகவும், ஆறவைத்தும் பருகலாம்.

Thursday, June 11, 2020

ஈரல் நோய் குணமடைய

                                                      

ஈரல் நோய் குணமடைய 

வல்லாரை நெய் விட்டு வாதுமையும் கூட்டிவுணின்
கல்லிரல் வன்மையுறுங் காண் ..........குறள்


விளக்கம்
வல்லாரை கீரையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு
வாதுமை பருப்பை பொடி செய்து சம அளவு எடுத்து பசு நெய் விட்டு
காலை மாலை உண்டு வர கல்லிரல் பலம் பெரும் நோய் வராது