Thursday, December 31, 2015

ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு குரு பூஜை சிவகங்கை மாவட்டம், இடைய மேலூர்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
சிவகங்கை மாவட்டம், இடைய மேலூர் அமைந்து உள்ள 

ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 31.1.2015வியாழகிழமை & 01.01.2016வெள்ளி  கிழமை அன்று  உத்திரம்   நட்சத்திர தினத்தன்று குரு பூஜை ,மகேஷ்வர பூஜை ,சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி  ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


டவுன் பஸ் ;மேலூர், சிவகங்கை  இரூந்து 6 நம்பர் 
ரூட் பஸ் :- மதுரை --மேலூர்  வழியாக சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் இடைய மேலூர் நீற்கும் 

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ளஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , 
ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 01-01-2016 தேதி மார்கழி (16) மாதம் 
    உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ,ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :94425 59844
98428-58236

Wednesday, December 30, 2015

சிறப்பு திரு விளக்கு பூஜை ஸ்ரீ உச்சிஷ்டமஹா கணபதி கோயிலில் திருநெல்வேலி

ஆங்கிலபுத்தாண்டு 01-01-2016ஜனவரி ஒன்று அன்று மார்கழி 16 மாதம் அன்று திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்டமஹா கணபதி கோயிலில் மாலையில் 5.30மணிக்கு மேல் சிறப்பு திரு விளக்கு பூஜை. மாதுளம்பழத்தில் விளக்கு வைத்து வழிபாடு நடக்கிறது . அன்பர்கள் , அடியார்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ உச்சிஷ்டமஹா கணபதி திருவருளை பெற வேண்டுகிறேன் .

Monday, December 28, 2015

பூரம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்

 ஸ்ரீ ராமதேவர்  சித்தர்க்கு அபிஷேகம்ஆராதனைகள் 


மார்கழி  மாதம் 15ம் நாள் வியாழக்கிழமை (31-12-2015) பூரம் நட்சத்திரம் அன்று  ஸ்ரீ ராமதேவர்  சித்தர்க்கு அபிஷேகம்ஆராதனைகள் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு  ஸ்ரீ ராமதேவர்  சித்தர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றார்கள்



புறப்படும் நேரம் : அதிகாலை 5 .30மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்
.மதுரை 

Sunday, December 27, 2015

தமிழகம் முழுவதும் உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு குரு பூஜை





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


தமிழகம் முழுவதும் உள்ள 60க்கும் மேற்பட்ட கோவில்களில்    ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு   
 29-12-2015 மார்கழி (13) மாதம் செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை குரு பூஜை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் அருகில் உள்ள கோவில்களில் கலந்து கொண்டு ஸ்ரீ அகத்திய மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Friday, December 25, 2015

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு குரு பூஜை அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை









அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி 
கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 29-12-2015 மார்கழி (13) மாதம் செவ்வாய் கிழமை  ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் குரு பூஜை அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651



அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை விழா


நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.
இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.
பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை.


சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது.இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.
அத்ரி மகரிஷியின் கோவிலுக்கு வருகிறவர்கள் வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை.

மன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு குரு பூஜை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் 
 29-12-2015 மார்கழி (13) மாதம் செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை குரு பூஜை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 28-12-2015 மார்கழி (12)மாத திங்கட்கிழமை  சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Wednesday, December 23, 2015

பிரதோஷ விரத மகிமை

 பிரதோஷம்




பிரதோஷ விரத மகிமை 23-12-2015 இன்று புதன் கிழமை பிரதோஷம் 

தோன்றிய வரலாறு- வீதி வலம் வரும் முறை.சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று.

பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷம் பிறந்த கதை!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே,

சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்


மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - பல வளமும் உண்டாகும்

நெய் - முக்தி பேறு கிடைக்கும்

சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்

ஞாயிறு:-மலர்-செந்தாமரை

இலை-வில்வம்

நைவேத்தியம்-பாயாசம்

திங்கள்:- மலர்-வெள்ளை நிற மலர்கள்

இலை-அரளி

நைவேத்தியம்- வெண்பொங்கல்

செவ்வாய்:- மலர்-சிவப்பு நிற மலர்கள்

இலை-விளா இலை

நைவேத்தியம்-எள் அன்னம்

புதன்:- மலர்-தாமரை

இலை-மாதுளை

நைவேத்தியம்- சர்க்கரை பொங்கல்

வியாழன்:- மலர்-குவளை

இலை-நாயுருவி

நைவேத்தியம்-தயிர்சாதம்

வெள்ளி:- மலர்-வெண் தாமரை

இலை-நாவல் இலை

நைவேத்தியம்-சுத்த அன்னம்

சனி:- மலர்-நிலோற்பவம்

இலை-விஷணுகிரந்தி

நைவேத்தியம்-உளுந்து அன்னம்


பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

 மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

ஸ்ரீ உச்சிஷ்டகணபதி ஆலய கொடிமரம் பிரதிஷ்டை விழா

திருநெல்வேலியில்
ஸ்ரீ உச்சிஷ்டகணபதி ஆலய கொடிமரம் பிரதிஷ்டை விழா படங்கள்
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில்,மணிமூர்த்தீசுவரம்
அமைந்துள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதியதாக 33அடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான கொடிமரம் பிரதிஷ்டை விழா 20.12.2015 ஞாயிறு கிழமை அன்று மிக சிறப்பாக நடை பெற்ற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.. ஆசிர்வாதம்.திருவருள் பெற்றனர் .







Monday, December 21, 2015

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் அன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 24.12.2015 மார்கழி மாதம் (8) வியாழக் கிழமை பௌர்ணமி அன்று  இரவுஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :9787521143 ,98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

25.12.2015 மார்கழி மாதம் (9) வெள்ளி கிழமை பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை

மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை   நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

ஸ்ரீ கோரக்க சித்தர்க்குஅபிஷகம்,ஆராதனை,அன்னதானம்





நாகபட்டிணம்   --வடக்கு பொய்கை நல்லூர்      -- உள்ள
ஸ்ரீ கோரக்க சித்தர்க்கு 22-12-2015 மார்கழி 6 மாத செவ்வாய் கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக் கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கோரக்க சித்தர்.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றார்கள்

Sunday, December 20, 2015

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 22-12-2015 மார்கழி 6 மாத செவ்வாய் கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக் கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+91 909510237

Saturday, December 19, 2015

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி 

ஆலயத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா





கோயிலின் முதுகெலும்பாக கொடிமரத்தை கூறுகின்றன நமது ஆகமங்கள். துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரத்தைப் பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றுகளிலேயே கூறப்பட்டுள்ளது. ஆலய திருவிழாக் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது கொடிமரம். ஆலய வழிபாட்டில் கொடிமரம் அருகே பூமியில் நமது உடம்பை கிடத்தி செய்யப்படும் சர்வாங்க நமஸ்காரம் நமக்கு மன பலத்தையும், உடல் பலத்தையும் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கொடிமர நீள அளவு, பிரதிஷ்டை செய்யும் முறை, கொடிமரத்தை அலங்கரிக்கும் தேவதைகள், வாகனங்கள் பற்றிய அனைத்து விதிமுறைகளும் ஆகமங்களில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ்வகையில்,திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில்,மணிமூர்த்தீசுவரம்
அமைந்துள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதியதாக 33அடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.கோவிலில்
புதியதாக செய்யபட்டு உள்ள கொடிமரம் பிரதிஷ்டை 20.12.2015 ஞாயிறு காலை 9.00 முதல் 10.00மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது
கொடிமர பிரதிஷ்டையில் பங்கேற்பதால் அனைத்து செயல்களிலும் ஏற்றங்கள் ஏற்பட்டு உயர்ந்த வாழ்வினை தரும்.
அனைவரும் இந்த கொடிமர பிரதிஷ்டை கலந்து கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம்
சார்பாக அன்புடன் அழைகின்றார்கள்.
ஆலயத்திற்கு வரும் வழி :-
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733

Saturday, December 12, 2015

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்



ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  14-12-2015
திங்கட்கிழமை  கார்த்திகை 28 மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்



திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Tuesday, December 8, 2015

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 10.12.2015 கார்த்திகை 
24 மாத வியாழக்கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : :9842078733
9043942091,
9843016651

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் கார்த்திகை மாதம்

அமாவாசை யாகம் 10.12.2015 வியாழக்கிழமை கார்த்திகை  மாதம்







மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
10.12.2015 வியாழக்கிழமை கார்த்திகை மாதம் அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236